ராகு கேது பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் அள்ளித்தரப்போகும் ராகு கேது.. யாருக்கு ஜாக்பாட்
சென்னை: ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். ஒருவருக்கு மறைமுகமாக வரும் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு யோகங்கள் எல்லாமே ராகுவினால் ஏற்படக்கூடியதுதான். கேது ஆன்மீக வழியில் கொண்டு செல்வார். மீன ராசியில் பயணம் செய்யும் ராகுவும் கன்னி ராசியில் பயணம் செய்யும் கேதுவும் குரோதி ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
துலாம்: விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு செய்வதால் எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு, ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் புத்திர பாக்கியம் கை கூடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும்.

விருச்சிகம்: ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். கடன் சுமை குறையும். குரோதி ஆண்டில் ராகுவும் கேதுவும் நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான வருமானத்தையும் கொடுக்கும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுப்பார் ராகு பகவான். முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.
தனுசு: குரோதி ஆண்டில் மனப்பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தடைப்பட்ட காரியங்கள் தடைகள் நீங்கி வெற்றிகரமாக முடியும். பழைய கடன்கள் அடைப்படும். வருமானம் அதிகரிக்கும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். இந்த ஆண்டில் பூமி வீடு வாகனம் வாங்கலாம். சுபகாரியம் நடைபெறும். குழந்தைகள் படிப்புக்கும் திருமணத்திற்கும் செலவு செய்வீர்கள்.
மகரம்: ராகு 3ஆம் இடத்திலும் கேது 9ம் இடத்திலும் பயணம் செய்கின்றனர். ராகு ஆண்டு முழுவதும் யோகத்தை வாரி வழங்கப் போகிறார். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த வீடு தேடி வந்து உதவி செய்வார்கள். பணம் பலவழிகளில் இருந்தும் வரும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார் ராகு பகவான்.
கும்பம்:உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் கேதுவும் ஆயுள் ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. விபரீத ராஜயோக காலம். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணவருமானம் வரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வீடு தேடி வரும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்பது போல சேமிக்க முடியவில்லையே என்று நினைக்கும் அளவிற்கு செலவுகளும் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வாக்கு கொடுக்காதீர்கள் அதை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம்.
மீனம்: உங்கள் ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது பயணம் செய்கின்றனர். 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் உங்க ராசியில் பயணம் செய்வார் ராகு. திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருங்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications