ராகு கேது பெயர்ச்சி பலன் 2024: வாழ்வில் அதிரடி மாற்றம்.. குரோதி ஆண்டில் வீடு தேடி வரும் ஜாக்பாட்
சென்னை: குரோதி தமிழ் புத்தாண்டில் ராகு பகவான் மீனம் ராசியில் பயணம் செய்வார். கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்வார். குரோதி தமிழ் புத்தாண்டில் சிலருக்கு வீடு தேடி ஜாக்பாட் வரப்போகிறது. நிழல் கிரகங்களான ராகு கேது பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேஷமானது.
வலிமையான ராகு கேது: நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். ஒவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகு கேதுவிற்கு ஒரு நாளில் ஒன்றரை மணி நேரம் என மூன்று மணிநேரத்தை ராகு கேதுக்கள் ஆள்கின்றன. குரோதி தமிழ் புத்தாண்டில் கன்னி ராசியில் உள்ள கேதுவின் மீது குருவின் பார்வை விழுகிறது.

மேஷம்: "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் இப்பொழுது 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்தில் ராகுவும் ஆறாம் வீடான ருண ரோக ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்வது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேதுவின் சஞ்சாரத்தினால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதிப்பீர்கள். சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாறும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலை போல வரும் துன்பம் எல்லாம் பனி போல விலகி ஓடும். குடும்பத்தில் அமைதி ஆனந்தம் ஏற்படும். மகிழ்ச்சிகரமான ராகு கேது பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
ரிஷபம்: உங்க ராசிக்கு சாதகமான இடத்தில் ராகு கேது பயணம் செய்கின்றனர். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் தரப்போகிறார்கள். உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் பயணம் செய்வது யோகம் தான். கேதுவின் மீது குருவின் பார்வையும் விழுகிறது. கடன் சுமை குறையும். கடன் பிரச்சினைகள் கழுத்தை பிடிக்க ஊரை விட்டு ஓடி வீடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த . குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். சுபகாரியங்கள் நடைபெறும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் நிம்மதியும் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
மிதுனம்: பத்தாம் வீட்டில் ராகுவும் நான்காம் வீட்டில் கேதுவும் பயணம் செய்கின்றனர், சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியைக் கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையை இழந்து வருமானம் இல்லாமல் தவித்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி வெற்றியை தரப்போகிறது.
கடகம்: உங்கள் ராகு 9ஆம் வீட்டிற்கும் கேது மூன்றாம் வீட்டிற்கும் வருவது யோகமான அமைப்பாகும். தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படுத்திக்கொள்ளலாம். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குருவின் பார்வை சாதகமான இடத்தில் விழுகிறது. குடும்ப உறவு சிறப்படையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள், தேடி வரும். வருமானம் திருப்தி தரும் வகையில் அமையும். குடும்பத்தில் பிரிவு மனக்கசப்புகளை சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் விமோசனத்தையும் தரப்போகிறது.
சிம்மம்: உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். கேது இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் குருவின் பார்வை கிடைக்கிறது. ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்ட்டத்தையும் பெயர், புகழையும் தரப்போகிறது. ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடைபெறும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். குடும்ப ஸ்தானத்தில் கேது பயணம் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது.
கன்னி: உங்களுடைய ராசியில் கேதுவும் 7 ஆம் வீட்டிற்கு ராகுவும் பயணம் செய்கின்றனர். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் உதவி கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஓன்று சேரலாம். உங்கள் ராசியில் கேது ஓராண்டு காலம் பயணம் செய்யப்போகிறார். குருவின் பார்வையும் கிடைப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications