Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2024: எதிர்பாராத ஜாக்பாட்.. குரோதி ஆண்டில் குபேர யோகம் யாருக்கு தேடி வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரோதி தமிழ் புத்தாண்டில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்வார். கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்வார். குரோதி தமிழ் புத்தாண்டில் குரு பகவான் பார்வையால் சிலருக்கு வீடு தேடி ஜாக்பாட் வரப்போகிறது. நிழல் கிரகங்களான ராகு கேது பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்கள் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11 பார்வைகள் விசேசமானது.

துலாம்: உங்களுடைய ராசிக்கு எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு ஆகிய ஸ்தானத்தில் ராகு குரோதி ஆண்டு முழுவதும் பயணம் செய்வதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். ஜென்ம கேதுவாலும் பாதிக்கப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் நீங்கும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். நீண்ட நாள் கனவான குழந்தை பாக்கியம் கிடைக்கும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது வருவதால் புது முயற்சிகள் கை கூடும். விரைய செலவுகள் குறைந்து சுப செலவுகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். உங்களின் நீண்ட நாள் கடன்களும் அடையும். இந்த ராகு கேது பெயர்ச்சி திடீர் யோகத்தை கொடுத்து செல்வம், செல்வாக்கை அதிகரிக்கப்போகிறது.

Rahu Ketu peyarchi Palan 2024 Rahu travel meenam Ketu travel Kanni who will get Gubera Yogam

விருச்சிகம்: ராகு உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்திலும் கேது லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்வார்கள். 18 ஆண்டுகளுக்கு ஓருமுறை இந்த ஸ்தானங்களில் ராகு கேது பயணம் செய்கின்றனர். ஆண்டு முழுவதும் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும். குருவின் பார்வையும் கிடைப்பதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடன் சுமை குறையும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். குரோதி தமிழ் புத்தாண்டில் முன்னேற்றத்தையும் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கப்போகிறது.

தனுசு: தனுசு ராசிக்காரர்களே ராகு கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திலும், கேது 10இடத்திலும் பயணம் செய்கின்றனர். தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். குரோதி ஆண்டில் ராகு பகவான் பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி பண வரவுகள் சேமிப்பாக உயரும். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு இந்த ஸ்தானத்தில் கேது பயணம் செய்வதால் தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் யோகத்தை கொடுக்கும். தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு கிடைக்கும்.

மகரம்: ராகு மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். பாக்ய ஸ்தானத்தில் மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பயணம் செய்வதால் இதுவரை தடைபட்டு நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். குரோதி தமிழ் புத்தாண்டில் நல்ல வேலையும் கை நிறைய சம்பாத்தியமும் கிடைக்கும். தெரிந்தவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.

கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே குரோதி ஆண்டு முழுவதும் ராகு 2ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம், பணம் கையிருப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள், வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, வரும். நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகமும் கைகூடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். எட்டாம் வீட்டில் பயணம் செய்யும் கேதுவினால் தொட்டது துலங்கும். போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வருமானம் அபரிமிதமாக உயரும்.

மீனம்: ராகு உங்களுடைய ராசியிலும் கேது ஏழாம் வீட்டிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்கின்றனர். குரோதி தமிழ் புத்தாண்டில் ஜென்ம ராசியில் பயணம் செய்யும் ராகு நல்லதொரு இடமாற்றத்தை தரப்போகிறார். ஏழாம் வீட்டில் உள்ள கேதுவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும் இதுநாள் வரை தடைப்பட்டிருந்த திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது பயணம் செய்வதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம் கவனம் தேவை. ஆண்டு முழுவதும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+