ராகு கேது பெயர்ச்சி பலன்: ரேவதியில் ராகுவின் பயணம்.. எந்த ராசிக்கார அரசியல்வாதிக்கு சீட் கிடைக்கும்
சென்னை: ராகு பகவான் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஜூலை மாதம் வரைக்கும் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகு சில அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. ராகுவின் பயணம் லோக்சபா தேர்தலில் போட்டியிட யாருக்கு சீட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அதிரடி மாற்றத்தை தரப்போகிறது. கட்சியில் சிலருக்கு பதவியில் மாற்றங்கள் வரலாம். தலைமையின் ஆதரவு இருப்பதால் தப்பிப்பிழைப்பீர்கள். சனி சாதகமாக இருப்பதாலும், மே மாதத்திற்குப் பிறகு குருவும் இடப்பெயர்ச்சி அடையப்போவதால் இந்த ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு ஜாக்பாட்தான்.

ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்த அரசியல்வாதிகள் பேசி பேசியே காரியம் சாதிப்பீர்கள். ராகு எந்த அளவிற்கு பணத்தை அள்ளிக்கொடுக்கிறாரோ அந்த அளவிற்கு சர்ச்சைகளையும் கொண்டு வருவார் கவனம் தேவை. முன் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சில நேரங்களில் கட்சித்தலைமையில் கோபத்திற்கு ஆளாக நேரிடும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தேர்தல் காலம் என்பதால் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
மிதுனம்: புதன் ஆதிக்கம் கொண்ட மிதுன ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு தொழில் ஸ்தான ராகுவும், பஞ்சம ஸ்தான கேதுவும் உங்களுடைய வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தப்போகின்றனர். பண வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும். அரசியல்வாதிகள் கவனத்தோடு இருப்பது நல்லது. பதவியை தரக்கூடிய தலைவர் சொல்வதற்கு எதிர் பேச்சு பேசாமல் இருப்பது நல்லது. சர்ச்சைகள் தேடி வரும். சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் அரசியல்வாதிகள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். கோபத்தை குறைத்தாலே போதும் தப்பிக்கலாம்.
கடகம்: பாக்ய ஸ்தான ராகு, தைரிய ஸ்தான கேது கடக ராசியில் பிறந்தவர்களுக்கு மன மகிழ்ச்சியை தரப்போகின்றனர். தேர்தல் நேரத்தில் உங்களுடைய பேச்சு கை கொடுக்கும். கட்சி தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெற்றியை தேடித்தரும். பணம் பலவழிகளிலும் வரும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும். கட்சித்தலைமையிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்: அஷ்டம ஸ்தான ராகு தன வாக்கு ஸ்தான கேது என பாம்பு கிரகங்கள் பயணம் செய்வதால் தடைகளைத் தாண்டி வெற்றி பெறப்போகிறீர்கள். மனக்கவலைகள் நீங்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகள் பேச்சை உங்கள் கண்ட்ரோலில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்குக் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். கட்சி பிரச்சினையில் கவனமாக இருக்க வேண்டும். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வரப்போகும் தேர்தல் காலத்தில் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
கன்னி: ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் ராகு பகவான் பயணம் செய்கிறார். தலை மேல் கேது பயணம் செய்கிறார். ராகு பகவான் நிறைய பண வருமானத்தை தரப்போகிறார். கன்னி ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் வரும் காலங்களில் தேடி வரப்போகிறது. கட்சித்தலைமையை அனுசரித்து சென்றாலே போதும் பதவிகளும் பட்டங்களும் தேடி வரும். பேச்சில் கவனமாக இருந்தால் வெற்றிகளை குவிக்கலாம்.












Click it and Unblock the Notifications