ராகு கேது பெயர்ச்சி பலன் 2023.. கன்னி ராசியில் அமர்ந்த கேது.. 2024ல் யாருடைய வாழ்க்கையில் மாற்றம்?
மதுரை: நிழல் கிரகத்தில் மோட்ச காரகன் என்று கூறப்படும் கேது கன்னி ராசியில் பயணம் செய்கிறார். 2025ஆம் ஆண்டு வரைக்கும் நில ராசியான கன்னி ராசியில் பயணம் செய்யும் கேதுவினால் 2024ஆம் ஆண்டில் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
மேஷம்: கேது பகவான் உங்கள் ராசிக்கு 6 ம் வீட்டில் பயணம் செய்வதால் தொழிலில் இருந்து வந்த முடக்க நிலை மாறி அசுர வளர்ச்சி அடையும். வேலையில் இது நாள் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வுகள் தேடி வரும். தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் இப்பொழுது 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்திற்கு ராகு பயணம் செய்வது நல்லது தான். புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாறும். மலை போல வரும் துன்பம் எல்லாம் பனி போல விலகி ஓடும். குடும்பத்தில் அமைதி ஆனந்தம் ஏற்படும்.

ரிஷபம்: கேது பகவான் 5 ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெற்றுள்ளது. தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக செயல்களில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோக அமைப்பு உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புத்திர பாக்கியம், தெய்வ அருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும்.
மிதுனம்: கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் உங்களின் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு வருமானம் அதிகரித்து சிறிது சிறிதாக கடன் சுமை குறையும்.
கடகம்: உங்களுடைய ராசிக்கு 3 ஆம் வீட்டில் கேது பயணம் செய்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இழந்த செல்வங்களை திரும்ப பெறுவீர்கள். படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். சுறுசுறுப்புடன் செயலாற்றி பல வெற்றிகளை பெறுவார்கள். பிள்ளைகளால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு ஏற்படும்.
சிம்மம்: உங்களுடைய ராசிக்கு 2 ஆம் வீட்டில் கேது பயணம் செய்வதால் வீண் வாக்குவதங்களை தவிர்க்கவும். உறவினர்கள் நண்பர்களுக்கு பண விசயங்களில் தேவையற்ற வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். அளவுடன் பேசி காரியத்தை சாதிப்பீர்கள். அளவிற்கு மீறி பேசும் போது பெரும் சிக்கலில் மாட்டும் நிலை உருவாகும். குடும்ப ஸ்தானத்தில் கேது பயணம் செய்வதால் சொல்லுக்கு மதிப்பு கிடைக்கும். செயல்கள் வெற்றி கிடைக்கும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். கேது பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார்.
கன்னி: உங்களுடைய ஜென்ம ராசியிலேயே கேது பகவான் பயணம் செய்வது அற்புதமான கால கட்டமாகும். உங்களின் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதிகரிக்கும். மே மாதம் முதல் கேதுவுக்கு குரு பகவானின் பார்வை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் கிடைக்கப்போகிறது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகள் படிப்புக்காக கடன் வாங்குவீர்கள். கேது பகவான் உங்களுடைய வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை தரப்போகிறார்.
துலாம்: மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது பயணம் செய்வதால் புது முயற்சிகள் கை கூடும். திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். புதிய தொழில் தொடங்க சரியான தருணம், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். விரைய செலவுகள் குறைந்து சேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். உங்களின் நீண்ட நாள் கடன்களும் அடையும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.
விருச்சிகம்: கேது பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கைகூடும். வங்கியில் வாங்கிய கடன்களை பைசல் செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். கடன் சுமை குறையும் தொழில் வியாபாரங்கள் ஏற்றத்தை தரும். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள்.
தனுசு: பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கும். 10ஆம் வீட்டில் கேது பயணம் செய்வதால் வேலை தொழிலில் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கி அன்பு பாராட்டுவார்கள். வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் தேடி வரும். 2024ஆம் ஆண்டு முதல் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு கிடைக்கும்.
மகரம்: பாக்ய ஸ்தானத்திற்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது வருவதால் இதுவரை தடைபட்டு நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.
கும்பம்: எட்டாம் வீட்டில் பயணம் செய்யும் கேதுவினால் நீங்கள் தொட்டது துலங்கும். பொற்காலமாக அமையப்போகிறது. போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வருமானம் அபரிமிதமாக வரும். நிதானமாக பேசுங்கள். கோபத்தை தவிருங்கள். செலவுகள் அதிகம் வரும் சிக்கனமும் சேமிப்பும் தேவை. வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
மீனம்: கேது பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் ஒன்றரை மாதங்கள் பயணம் செய்வதால் வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும் இதனால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து போகும் யாராவது ஒருவர் விட்டு கொடுத்து போனால் வாழ்க்கை இனிமையாக மாறும். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் கேது பயணம் செய்வதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications