Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023.. மீன ராசியில் அமர்ந்த ராகு.. 2024ல் ராஜயோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

மதுரை: நிழல் கிரகம் என்று கூறப்படும் ராகு மீன ராசியில் பயணம் செய்கிறார். 2025ஆம் ஆண்டு வரைக்கும் நீர் ராசியான மீன ராசியில் பயணம் செய்யும் ராகுவினால் 18 ஆண்டுகளுக்குப் பின் யாருடைய வாழ்க்கையில் திடீர் ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: 2024ஆம் ஆண்டு முதல் ராகு பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் வீடு கட்டும் முயற்சிகளில் இறங்குவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் நிலவும். பொருளாதார நிலை புது உச்சத்தை எட்டப்போகிறது. . "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் இப்பொழுது 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்திற்கு ராகு வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.

Rahu Ketu Peyarchi palan : Rahu gives Raja yogam which zodiac signs will get jackpot 2024

ரிஷபம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். திடீர் ஜாக்பாட் மூலம் பண வருமானம் வரும். நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும் இதுநாள் வரை தடைப்பட்டிருந்த திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும்.

மிதுனம்: ராகு கேது பெயர்ச்சியால் புதிதாக தொழில் செய்ய காத்திருப்பவர்களுக்கு நல்ல நேரம் பிறக்கப்போகிறது. வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். பண வரவை அதிகரிப்பார். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம். கடந்த காலங்களில் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் கணவன் மனைவி உறவு கசந்து சங்கடங்களை சந்தித்த உங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்.

கடகம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். இதனால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பண தட்டுப்பாடுகள் விலகி பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறி தெளிவான சிந்தனை உதயமாகும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் பிரிவு மனக்கசப்புகளை சந்தித்தவர்களுக்கு ராகு பகவான் விடிவையும் விமோசனத்தையும் கொடுப்பார்.

சிம்மம்: ராகு கேது பெயர்ச்சியால் எடுத்த காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். உயரதிகாரியின் ஆதரவினால் பதவி உயர்வும், பணவரவு ஏற்படும். நோய்கள் நீங்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக திடீர் பயணங்கள் உண்டாகும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். சஞ்சலம்,ஏமாற்றம் விபத்து,பீடை,கௌரவ பங்கம்,கவலை,இழப்பு அந்த இடத்திற்கு பாவ கிரகம் வந்தால் அழிப்பார் ராகு. ராகு பகவான் யோகத்தையும் அதிர்ஷ்ட்டத்தையும் பெருமை புகழையும் கொடுக்கும். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம்.

கன்னி: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7 ம் வீட்டிற்கு வரப்போகிறார். உடலில் சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும். ஓருவருகொருவர் விட்டு கொடுத்து சென்றால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம். பண விஷயத்தில் சிக்கன போக்கு தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் உதவி கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஓன்று சேரலாம். கோர்ட்டு விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம்

துலாம்: ராகுவின் பயணத்தால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். உங்கள் குடும்பத்தில் அமைதி திரும்பி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குரு பகவான் பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன உளைச்சல்கள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். சொத்து பிரச்சனைகளில் சுமூக தீர்வு ஏற்படும். 6ஆம் வீடான எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். போட்டி பொறாமை பொடிபொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். தடைபட்ட திருமணம் நடைபெறும்.

விருச்சிகம்: ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோனியம் பெருகும். செய்வதறியாது இருந்து வந்த மந்த நிலை மாறி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கிடைக்கும் வேலையில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. புது முயர்ச்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். விரைய செலவுகளால் அல்லல் பட்டு வந்தீர்கள். போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு பகவான் நிம்மதியை தரப்போகிறார். 18 வருஷத்துக்கு பிறகு 5ஆம் இடத்தில் ராகு பயணம் செய்வதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

தனுசு: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் வீடான சுக ஸ்தானத்திற்கு வந்து அமர போகிறார். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். எந்த பிரச்னைகளையம் சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் வரும். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். பிள்ளைகளின் திருமணம் படிப்புக்கு செலவு செய்வீர்கள். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும்.

மகரம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். எதிலும் வெற்றி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். கடன்கள் பைசலாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னை விலகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் . தடைபட்டு வந்த சுபகாரியங்களை இனிதே சிறப்பாக நடந்தேறும். ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். ராகு உங்களுக்கு யோகத்தை வழங்க போகிறார். செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். மூன்றாம் வீட்டில் பயணம் செய்யும் ராகுவினால் புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகிறது. வேலையில் நிலவி வந்த மந்த நிலை மாறும். பெண்களின் நட்பு கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெருகும்.

கும்பம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிருப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். உங்களுக்கு தேவைகேற்ப நல்ல தனவரவு வரும். நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகமும் கைகூடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். பண விசயமாக யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள் மன அமைதியை இழக்க நேரிடும். பேசும் வார்த்தைகளில் கோபத்தை கட்டுப்படுத்தவும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

மீனம்: ராகு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் கஷ்டங்கள் விலகி நற்பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். இனி எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிட்டும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். பண வருமானம் அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் பொறுப்பு தன்மையும் தென்படும். நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும் இதுநாள் வரை தடைப்பட்டிருந்த திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+