ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 தனுசு: தனுசு ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

நெருக்கடிகளையும் மன உளைச்சல்களையும் சந்தித்து வந்த தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரப்போகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜென்ம ராசியில் அமர்ந்து இருந்த கேது இப்போது 12ஆம் வீட்டிற்கு நகர்ந்திருக்கிறது. விடா முயற்சியும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கக் கூடிய தனுசு ராசிக்காரர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சியை ரொம்பவே எதிர்பார்த்து வந்தீர்கள். பல சோதனைகளை சந்தித்து வேதனைகளை தாங்கிக் கொண்டு வாழ்ந்து வந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதி சந்தோஷத்தை தரப்போகிறது.

இதுநாள்வரை ஜென்ம கேது ஏழாம் வீட்டில் இருந்த ராகுவினால் நிறைய நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்களுக்கு இப்போது கேது விரைய ஸ்தானத்திலும், ராகு ஆறாம் வீட்டிற்கும் வந்திருப்பதால் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். தனுசு ராசிக்கு மறைவு ஸ்தானங்களுக்கு போகும் ராகு கேதுவினால் நாக தோஷம் நீங்குகிறது.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜா யோகமாக அமைகிறது இந்த ராகு கேது பெயர்ச்சி. கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். திடீர் ஜாக்பாட் போல எதிர்பார்க்காத இடத்தில் இருந்து பண வரவு வரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

சந்தோஷம் தரும் ராகு கேது

சந்தோஷம் தரும் ராகு கேது

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் அற்புதங்கள் நிகழப்போகிறது. ஆறாம் வீட்டில் ராகு மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. செல்வ வளம் வரப்போகிறது மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கப் போகிறது. சங்கடங்களை மட்டுமே சந்தித்து வந்த நீங்கள் இனி சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். மன குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

புத்திர பாக்கியம்

புத்திர பாக்கியம்

கடந்த காலங்களில் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்களுக்கு துன்பங்களும் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். வீட்டில் நிம்மதியில்லாமல் இருந்த உங்களுக்கு நெருக்கடிகள் நீங்கும். தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தேடி வரும்

அதிர்ஷ்டம் தேடி வரும்

கேது 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும் வேதனைகள் மறையும். வெளிநாட்டு யோகமும் தேடி வரப்போகிறது. வெளிநாடு வேலையை விட்டு விட்டு வந்தவர்களுக்கு மீண்டும் அழைப்புகள் வரும். கடுமையான உழைப்பு வெற்றியை கொடுக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும்.

மன கசப்பு நீக்கும்

மன கசப்பு நீக்கும்

பெண்களுக்கு இனி நல்ல காரியங்கள் நிறைய நடைபெறும். பட்டம் பதவி புகழ் தேடி வரும்.
கணவன் மனைவி உறவில் இருந்த விரிசல் நீங்கும். கசப்புகள் நீங்கி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். அக்கம் பக்கத்தினரிடம் எந்த கருத்து வேறுபாடும் வைத்துக்கொள்ளாதீர்கள். மாணவர்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது. பிடித்த பள்ளி, கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். கால்களில் பிரச்சினை வரும் எச்சரிக்கை தேவை. யாரையும் கடுமையாக பேச வேண்டாம்.

விநாயகர் வழிபாடு

விநாயகர் வழிபாடு

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யப்போகும் முதலீடுகள் லாபமாக திரும்ப வரும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். தெய்வ வழிபாடு செய்வதற்கான நேரம் வந்து விட்டது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விநாயகர் மந்திரத்தை சொல்லுங்கள் நல்ல வேலை கிடைக்கும். சஷ்டி விரதம் இருங்கள் முருகன் அருளினால் சத்ரு தொல்லைகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். அழகன் முருகனே மகனாக வந்து பிறக்கும் யோகம் வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+