Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020: இந்த 5 ராசிக்காரர்களுக்கு மன சந்தோஷமும் நிம்மதியும் தேடி வரும்

ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகள் வந்தாலும் ஒருசில ராசிக்காரர்கள் மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் அடையப்போகிறார்கள். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மகிழ்ச்சியை அனுபவிக்கப

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு கேது பெயர்ச்சியால் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா? ஒருவருக்கு நிம்மதி, சந்தோஷம், பணவரவு, கோடீஸ்வர வாழ்க்கை போன்றவை அமைய ராகு கேதுவின் சஞ்சார நிலையும், பார்வையும் சரியான இடத்தில் அமைய வேண்டும். இப்போது மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கு மாறும் ராகுவும், தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறும் கேதுவும் 5 ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரப்போகிறார்கள்.

மனிதர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை ரொம்ப அவசியம், குடும்பத்தில் மகிழ்ச்சி இருந்தால் மன நிம்மதி கிடைக்கும். சிலருக்கு கோடி கோடியாக பணம் இருந்தாலும் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்காது. இந்த ராகு கேது பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், செல்வம், செல்வாக்கு, நிம்மதி, சந்தோஷத்தை தரப்போகிறது.

ராகு என்றால் வேகமாக பயணம் செய்பவர்கள். அள்ளிக்கொடுக்கும் ராகு ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் அது ராஜயோகத்தை கொடுக்கும். சந்தோஷம், பணவரவு, புதிய உற்சாகமான வாழ்க்கையை கொடுக்கும். நிம்மதியும் சந்தோஷமாக வாழ மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடியவர் ராகு. இந்த ராகு கேது பெயர்ச்சியால் கடகம், தனுசு, மீனம்,மிதுனம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் அபரிமிதமான ராஜயோகத்தை அனுபவிக்கப் போகிறார்கள்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அற்புதமான யோகங்களை தரப்போகிறது. உங்க ராசிக்கு 5ஆம் வீட்டில் கேது உச்சம், 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் ராகு நீசம் பெற்றிருக்கிறார். கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கையில் புதிய வரவு அமையும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், சிலருக்கு புதிய வாழ்க்கை அமையும், பெயர் புகழ் தேடி வரும், பணம் கோடி கோடியாய் கொட்டப்போகிறது. இன்பமும் சந்தோஷமும் தேடி வரும். உங்க ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் நன்றாக இருந்தால் இந்த ராகு கேது பெயர்ச்சியால் 12 ஏப்ரல் 2022 வரைக்கும் பல அற்புதங்கள் நிகழப்போகிறது.

 தனுசு

தனுசு

தனுசு ராசிக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. ராசிக்கு 12ஆம் வீட்டில் கேது உச்சம் அடைகிறார். உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகு பகவான் நீசமடைந்து சஞ்சரிக்கிறார். பொதுவாகவே ஆறாம் வீட்டில் பாவ கிரகங்கள் மறைவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். நோய் பிரச்சினை நீங்கும். நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். கடன் பிரச்சினை தீரும் அளவிற்கு பணவரவு வரும். சந்தோஷமும் நிம்மதியும் தரக்கூடிய ராகு கேது பெயர்ச்சியாக அமைந்துள்ளது. ஏழரை சனி, விரைய குரு, ஜென்ம குரு என உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மனநிம்மதி இழந்து காணப்பட்டீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி அற்புதமான பலன்களை தரப்போகிறது. உங்க வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சொத்து சேர்ச்கை ஏற்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண யோகம் தேடி வரும். உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் கேது உச்சமடைந்திருப்பதால் சுப செலவுகள் வீடு தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சனியால் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்து வரும் உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மகிழ்ச்சியோடு நிம்மதியை தரப்போகிறது. இதுவே போதும் இனியொரு வாழ்க்கையோ பிறவியோ வேண்டாம் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு 12ஆம் வீட்டில் உச்சமடைந்துள்ளது கேது தரப்போகிறார்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அற்புதங்களை தரப்போகிறது. 3ஆம் வீட்டில் ராகு நீசமடைந்திருக்கிறார். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது. உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு சுப செலவுகள் நடைபெறும். இளைய சகோதரர்களுக்கு உங்களால் ஒரு நற்காரியம் நடைபெறும். சொத்து சேர்க்கை ஏற்படும். 9ஆம் வீட்டில் கேது உச்சமடைந்திருப்பதால் உங்களுக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களின் பெயர்,புகழ் அதிகரிக்கும். இந்த ஒன்றரை வருடங்களில் நீங்கள் அபரிமிதமான நற்பலன்களை அடையப்போகிறீர்கள். இதுநாள்வரை நடந்த சம்பவங்கள் நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடக்கப்போகும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு நல்லவிதமாகவே நடக்கும் என்பது நிச்சயம். 2021,22ஆம் ஆண்டுகளில் ராஜ வாழ்க்கை வாழப்போகிறீர்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பல பிரச்சினைகளை தீர்க்கப் போகிறார். துன்பங்கள், துயரங்களை போக்கும் ராகு கேது பெயர்ச்சியாக அமைந்துள்ளது. ஆறாம் வீட்டில் கேது உச்சம் அடைந்துள்ளார், 12ஆம் வீட்டில் ராகு நீசமடைகிறார். உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். சுப செலவுகள் தேடி வரும். வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நிம்மதியும் சந்தோஷமும் தேடி வரும். இடமாற்றம் ஏற்படும். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.
திடீர் இடமாற்றம் நன்மைகளை கொடுக்கும். தொழில் ரீதியான பயணங்களால் வெற்றிகள் கிடைக்கும். அதே நேரத்தில் அஷ்டமத்து சனி இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் குடும்ப வாழ்க்கையிலும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி உங்க ராசிக்கு சில பாதிப்புகளை கொடுத்தாலும் நிறைய நன்மைகளை கொடுக்கப் போகிறது. நான்காம் வீட்டில் ராகு நீசம் அடைந்திருக்கிறார். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேது உச்சமடைந்திருக்கிறார். விரைய ஸ்தானத்தில் சனி ஆட்சி பெற்றிருக்கிறார். புதிய சூழல் அமையும், புதிய வேலை, தொழில் அமையும். சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு, மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கப் போகிறார். வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். அசுர கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் நன்மையே நடக்கும். சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும். நல்ல நண்பர்களுடன் உறவை பலப்படுத்துங்கள். தீயவர்களுடனான நட்பை விலக்கி வைப்பது அவசியம். சிலருக்கு புதிய உறவுகள் தேடி வரும். வெற்றிகரமான ராகு கேது பெயர்ச்சியாக அமைந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகள் நீங்கள் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+