Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 துலாம்: துலாம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அறிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் துன்பங்கள் தீரப்போகிறது. பணவரவு அதிகரிக்கும் பொருளாதார பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கப்போகிறது. ராகு 8ஆம் வீட்டிற்கும் கேது இரண்டாம் வீட்டிற்கும் வந்திருக்கிறார்கள். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். சஞ்சலம்,ஏமாற்றம் விபத்து,பீடை,கௌரவ பங்கம்,கவலை,இழப்பு அந்த இடத்திற்கு பாவ கிரகம் வந்தால் அழிப்பார்.
இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். ராகு சூது கிரகம் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். இந்த ராகு கேது பெயர்ச்சியினால் திருமணம் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம்.

எதிர்பாராத பண வரவு வரும். நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த கடன் மீண்டும் திரும்ப வரும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தடைகள் நீங்கும்

தடைகள் நீங்கும்

குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உங்களுடைய சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். கேது குடும்ப ஸ்தானத்தில் உச்சமாக இருக்கப் போகிறார். உங்களுடைய முயற்சிகளுக்கு இருந்த தடைகள் நீங்கும். செவ்வாய் போல கேது உங்களுடைய குடும்பத்தில் உற்சாகத்தை கொடுப்பார்.

நிதானம் தேவை

நிதானம் தேவை

வீடு மண் மனை வாங்கும் யோகம் வரும். சொந்த வீடு வாங்கலாம். புதிய தொழில் தொடங்கலாம். இதுநாள் வரை நஷ்டப்பட்டவர்களுக்கு இனி லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. யாரை நம்பியும் பெரிய அளவில் பணம் முதலீடு பண்ண வேண்டாம்.

சுப காரியம் நடைபெறும்

சுப காரியம் நடைபெறும்

திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். காதல் விசயங்கள் கைகூடி வரும். பொறுமையும் நிதானமும் தேவை. திருமணமாகி நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் தேடி வரும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க. சிலருடைய வீடுகளில் உறவுகளில் பிரிவினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க.

பொருளாதார முன்னேற்றம்

பொருளாதார முன்னேற்றம்

ராகு கொடுக்கும் கிரகம் என்பதால் நிறைய சந்தோஷமான விசயங்கள் நடைபெறும். அரசியல்வாதிகளுக்கும் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பட்டம் பதவிகள் தேடி வரும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்படும்.

பணமுதலீடுகளில் கவனம்

பணமுதலீடுகளில் கவனம்

ஷேர் மார்க்கெட்டில் பணமுதலீடு செய்ய வேண்டாம். எதிர்பார்க்காத சில சங்கடங்கள் வரலாம் விழிப்புணர்வோடு இருங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவுகள் ஒருவருக்கொருவர் பிசினஸ் பார்ட்னர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எந்த காரியம் செய்யும் முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து சிந்தித்து செயல்படுவது நல்லது. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருப்பது நல்லது. விழிப்புணர்வும் கவனமும் அவசியம் தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+