ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: கோடி கோடியாக கொடுக்கப்போகும் ராகு..அனுபவிக்கப்போவது யார்?
சென்னை: ராகு கேது கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசியிலும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. ராகு பகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் ஞானத்தை கொடுப்பார். திருக்கணிதப்பஞ்சாங்கப்படி அக்டோபர் மாதத்தில் தீபாவளிக்குப் பிறகு இந்த ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

கன்னி ராசி அதிபதி புதன், கேது பகவான் புதன் பகவான் போல செயல்படுவார். மீனம் குருவின் வீட்டின் அதிபதி என்பதால் ராகு குரு பகவான் போல ஆன்மிகத்தையும் அளிப்பார். மிதுனம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் ராகுவும் 5ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து இருக்கின்றனர். இனி ராகு 10லும் கேது 4ஆம் வீட்டிலும் இடம் மாறி அமரப்போகின்றனர். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடமாகும்.
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தை கொடுக்கப்போகிறது. பொதுவாகவே கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையாக பலனை செய்யும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் நிலவும் கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். வருமானம் கிடைக்கும்.
ராசிக்கு 10ஆம் வீட்டிற்கு ராகு வருவதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். வீண் அலைச்சல்கள் நீங்கும். இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வருமானத்தை அதிகரிப்பீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வராமலிருந்த பாக்கிகளும் வசூலாகும். வாடிக்கையாளர்களைக் கவரும்விதமாக புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள்.
உங்களுக்கு கடந்த காலங்களில் மகிழ்ச்சியை கொடுத்து நிம்மதியை இழக்க செய்த ராகு கேது இப்பொழுது நன்மையை செய்யப்போகிறார்கள். சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளைஅதிகரிப்பார்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஓற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும். ஞாயிறன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துகொண்டு, முன்கோபத்தை ஏற்படுத்திய கேது. இப்போது ராசிக்கு நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பதற்றம் நீங்கும் பேச்சில் கனிவு பிறக்கும். உங்களின் நட்பு வட்டம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் கேது அமர்வதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். மருத்துவச் செலவுகள், வந்துபோகும். சிலர் வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப்பொருட்களை வாங்குவீர்கள். சொந்தவீடு கனவு நனவாகும். வீடு கட்ட தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீடு கட்ட தொடங்குவது நல்லது. வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். பாராட்டும் பதவி உயர்வும் வரும். வெள்ளிக்கிழமை துர்க்கையை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications