Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு திசை: அள்ளிக் கொடுக்கிற ராகு கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பார்

ஒருவரின் ஜாதகத்தில் ராகு பலமாக இருந்தால் சுப கிரகங்களின் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் அள்ளிக்கொடுப்பார். அதே தீயவர்களின் சேர்க்கை பெற்றிருந்தால் கெடுதல் செய்தார் தடைகளை ஏற்படுத்துவார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவருக்கு திடீரென்று ராஜயோகம் வரும் வருமானம் அள்ளி கொட்டும். பணத்தை எண்ணி வைக்க இடமிருக்காது அந்த அளவிற்கு வரும் அதற்குக் காரணம் அவருக்கு ராகு தசை வந்திருக்கும். திடீர் பணவரவு எதிர்பாராத யோகத்திற்கு சொந்தக்காரர் ராகுதான். தசாபுத்தியில் அதிக காலம் சுக்கிரதிசைதான் 20 ஆண்டுகள் நடைபெறும். சனி தசை 19 ஆண்டுகள் நடக்கும். ராகு திசை ஒருவருக்கு 18 ஆண்டுகள் நடைபெறும். இந்த 18 ஆண்டுகளில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவரை மிகப்பெரிய செல்வந்தராக மாறுவார். குப்பை மேட்டில் இருப்பவரைக் கூட கோபுரத்தில் அமரவைப்பார். அந்த அளவிற்கு ராகு கொட்டிக்கொடுப்பார்.

சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக ராகு கேது பெயர்ச்சியை மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். காரணம் ராகு கேது ஒருவரின் ராசியில் ஒன்றரை ஆண்டுகள் நின்று பலனைக் கொடுக்கும். ராகுவைப் போல கொடுப்பாருமில்லை... கேதுவைப் போல கெடுப்பாருமில்லை என்பார்கள். ராகு எதைக் கொடுத்தாலும் அள்ளிக் கொடுப்பார். அதே நேரத்தில் ராகு பலமிழந்து இருந்தால் எதற்கெடுத்தாலும் தடையை ஏற்படுத்துவார். திருமண தடை, குழந்தை பாக்கியத்தில் தடை, வசதி வாய்ப்பில் தடையை ஏற்படுத்துவார்.

ராகு நிழல் கிரகம். பிரம்மாண்ட நாயகனான நவகிரகங்களின் தலைவனான சூரியனின் ஒளியை மறைக்கும் சக்தி படைத்தது ராகு கேது. அதே போல சந்திரனின் ஒளியை மறைக்கும் சக்தி படைத்தது ராகு கேது கிரகங்கள். ராகு தசை நடந்தால் என்ன பலன் எந்த லக்னகாரர்களுக்கு நல்லது என்று பார்க்கலாம்.

பலமான ராகு கேது

பலமான ராகு கேது

திருமணம், குழந்தை பாக்கியம் தடை ஏற்பட காரணம் ராகு கேது கிரகங்கள்தான். சர்ப்ப தோஷம் இருந்தால் திருமண தடை, குழந்தை பாக்கிய தடை ஏற்படும். ராகு சனியைப் போலவும் கேது செவ்வாயைப் போலவும் வேலை செய்வார். ராகு ஒருவரின் ஜாதகத்தில் சுப கிரகங்களுடன் இருந்தால் சுப பலன்களை தருவர். அதே நேரத்தில் செவ்வாய், சனி தொடர்பு ஏற்படும் போது சாதகமற்ற பலனை தருவார்.

அள்ளிக்கொடுக்கும் ராகு

அள்ளிக்கொடுக்கும் ராகு

ராகு பிரம்மிக்கத் தக்க கிரகம். கொடுப்பவரும் அவரே தடுப்பவரும் அவரே அவரை புரிஞ்சுக்கவே முடியாது. மேஷம் விருச்சிகம், தனுசு மீனம், கடகம் சிம்மம், ஆகிய ஆறு லக்னங்களுக்கு சாதகமான பலன்களை தருவதில்லை. அவர் நல்லது செய்ய வேண்டுமெனில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ராகு ஆகிய வீடுகளில் இருக்கும் ராகு நல்லதை செய்வார். தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல ராகு செயல்படுவார்.

நல்லதே செய்வார் ராகு

நல்லதே செய்வார் ராகு

ராகு திசை ராஜயோகங்களில் முதன்மையானது ராகு மிகச்சிக்கலான காலகட்டத்தில்தான் கெடுதல் செய்வார். சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களில் லக்னகங்களான ரிஷபம், துலாம்,மிதுனம்,கன்னி, மகரம், கும்பம் சனியின் நண்பர்களான சுக்கிரன், புதன் லக்னங்களுக்கு ராகு திசை நல்லது செய்யும் கெடுதல் செய்யாது.

நல்லது செய்யும் ராகு

நல்லது செய்யும் ராகு

சுபத்துவமான ராகு ஒருவருக்கு ராஜயோகத்தை அள்ளித்தருபவர். ஒருவருக்கு ராகு பலன் தர வேண்டும் என்றால் இயற்கை சுபரின் வீட்டில் இருக்க வேண்டும். திடீர் பிரபலம் ராகுவினால் நடக்கும். சினிமா, அரசியல் என பிரபலம் அடைய ராகுதான் காரணம். குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் வீட்டில் அமரும் போது அவர்களின் காரகத்தை செய்வார். மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஐந்து இடங்களில் இருக்கும் ராகு சுயமான நன்மை செய்வார். சுபர் தொடர்பு இருந்தால் மேன்மையான பலன் கிடைக்கும். ராகுவை குரு பகவான் பார்த்தால் அவர் கெடுதல் செய்ய மாட்டார்.

பயணங்களால் நன்மை

பயணங்களால் நன்மை

ராகு திசை நடந்தால் கடல்கடந்து வெளியே செல்லுதல். வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார். வெளிமாநிலம் போய் பொருள் தேட வைப்பார். புத்திசாலித்தனமான தன லாபத்தை தருவார். உங்களுக்கு வருமானத்தை கொட்டுவார். அந்த அளவிற்கு கொடுத்து உங்களை திக்கு முக்காட வைப்பார். நல்லவன் கெட்டவன் என்று ராகு பார்ப்பதில்லை. பூர்வ புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் எந்த வயதில் அனுபவிக்கப் போகிறீர்கள் என்று உணர்த்துபவர் ராகுதான். பணம் கூரையை பிச்சிச்கொண்டு கொண்டும் என்று சொல்வது அவருக்கு சரியாக இருக்கும்.

வருமானம் கொட்டும்

வருமானம் கொட்டும்

ராகு பலமான இடத்தில் அமர்ந்து சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்றிருந்தால் குழந்தை பருவத்தில் ராகு திசை நடந்தால் உற்சாகமாக இருப்பார்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாகவும் அறிவாளிகளாகவும் இருப்பார்கள். உயர்கல்வி யோகம் அமையும். மத்திம வயதில் ராகு திசை நடந்தால் பணவருமானம் அதிகரிக்கும் கொடுக்கும் ராகு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுப்பார். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பஞ்சனையில் படுக்கும் வாய்ப்பை ராகு தருவார். புகழ் வெளிச்சம் பரவும்.

நன்மை செய்யும் ராகு

நன்மை செய்யும் ராகு

ராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புக்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடி வரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத தனசேர்க்கைகள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

ராகுவினால் பாதிப்பு

ராகுவினால் பாதிப்பு

ராகுபகவான் ஒருவரின் ஜாதகத்தில் பலமிழந்து தீயவர்களின் சேர்க்கை பெற்று இருந்தால் இருந்தால் குழந்தை பருவத்தில் ராகு திசை நடைபெற்றால் உடல் நல பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களுக்கு உடல்நலம் பாதிக்கும். கல்வியில் தடையும், தீயவர்களின் நட்பும் ஏற்படும். சிலருக்கு திருமண தடையும் அவப்பெயரும் ஏற்படும். முதிய பருவத்தில் நடந்தால் உண்ணும் உணவே விஷமாகும்.

காளஹஸ்தி தரிசனம்

காளஹஸ்தி தரிசனம்

ஜாதகத்தில் 6ஆம் வீடு 8 வீடுகளில் சனி செவ்வாய் இருந்து ராகு திசை நடக்கும் காலங்களில் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஒருமுறை காளஹஸ்தி சென்று காளத்திநாதரையும் அன்னை ஞானபிரசன்னாம்பிகையை தரிசனம் செய்து வரலாம். ராகு பரிகார தலங்கள் எத்தனையோ தமிழ்நாட்டில் இருந்தாலும் இங்கு ராகு கேதுவாக இறைவனும் இறைவியும் எழுந்தருளுவதால் மிகச்சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+