Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்திற்கு இடப்பெயர்ச்சியான ராகு - என்ன நன்மைகள் நடக்கும்

திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் இடப்பெயர்ச்சியாகியுள்ள ராகுவினால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷ ராசியில் அமர்ந்துள்ள ராகு செவ்வாயைப் போல செயல்பட உள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் இடப்பெயர்ச்சியாகியுள்ள ராகுவினால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். சொந்த வீடு இல்லை என்பதால் எந்த கிரகத்தின் வீட்டில் அமர்கின்றனவோ அந்த கிரகத்தைப் போல செயல்பட்டு பலனைத் தரப்போகின்றனர்.

மேஷ ராசி செவ்வாயின் சொந்த வீடு. செவ்வாய் பகவான் தைரியம் வீரியத்தின் அதிபதி. எனவே ராகுவும் செவ்வாய் பகவானைப் போல பலனைத் தரப்போகிறார்.

மேஷம்

மேஷம்

ராகு உங்கள் ராசியில் அமர்ந்து உங்கள் ராசிநாதன் செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். தைரியம் தன்னம்பிக்கை கூடும். காரியத்தடைகள் நீங்கும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். எந்த பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன சங்கடங்கள் வந்தாலும் எளிதில் நீங்கும். திடீர் பண வரவு வரும் கூடவே செலவுகளும் வந்து கையைக் கடிக்கும். எதையும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்காதீங்கள். அலசி ஆராய்ந்து அறிவிப்பூர்வமாக முடிவு எடுப்பது நல்லது. முன்கோபம் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள் அவசரப்பட்டு பேசிவிட்டு பின்னர் வருத்தப்பட வேண்டாம். வேலையில் திறமை அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபாரத்தில் போட்டி பொறாமை அதிகரிக்கும். லாபமும் அதிகரிக்கும். பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம் தவறாகிவிடும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

கணவன் மனைவி இடையே இருந்த பிணக்குகள் நீங்கும். திருமண சுபகாரியங்கள் நடைபெறும், வீடு கட்டுபவர்களுக்கு கிரகப்பிரவேசம் நடைபெறும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஆலய தரிசனம் செல்வீர்கள். சொத்து பிரச்சினைகள் சுமூகமாக முடிவுக்கு வரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். உங்களுக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் விசயமாக பேசி முடிவு செய்யலாம். புத்திரபாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் வீட்டிற்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். செய்யும் செயல்களில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பணம் பல வழிகளில் வரும் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். வீண் செலவுகளைக் குறைத்து அவசிய செலவுகளை மட்டும் செய்வீர்கள்.
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு விலகும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும். பணியில் வேலைச்சுமை குறையும். அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

கடகம்

கடகம்

வேலை தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வேலையில் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் உழைப்புக்கு மதிப்பு மரியாதை கூடும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஓடி ஓடி உழைத்த உங்களுக்கு இனி அதற்கேற்ப பலன் தேடி வரப்போகிறது. பயமும் பதற்றமும் நீங்கும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதேநேரம் வீண்பழிகள் வர வாய்ப்பு உண்டு. வேலைசுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வேலையில் புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுங்கள். பழைய கடன்கள் வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சிம்மம்

சிம்மம்

பணம் பாக்கெட்டில் நிறையப்போகிறது. சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் குடியேறும். காரியத்தடைகள் உடைபடும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் வரும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். கௌரவப்பதவிகள் தேடி வரும். மனக்கவலைகள் நீங்கும். வீடு வாகனம் வாங்கலாம். குலதெய்வ கோயிலுக்குக் குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

 கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் மறைந்து மன நிம்மதி கிடைக்கப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். தள்ளிப்போன சுபகாரியங்கள் இனி மளமளவென நடைபெறும். குடும்ப பிரச்சினைகள் எதுவென்றாலும் அதை வெளியில் சொல்ல வேண்டாம் அதுவே சிக்கலாகிவிடும். பண விசயங்களில் கவனமாக இருங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். அலுவலகத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். உயரதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

துலாம்

துலாம்

உங்கள் மனதில் இருந்த டென்சன் நீங்கும். உடலில் இருந்த நோய்கள் நீங்கும். மன உளைச்சல் நீங்கி மன மகிழ்ச்சி அதிகரிக்கும். காரியத்தடைகள் நீங்கி மன உற்சாகம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். பெரிதுபடுத்தாமல் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். திருமணமாகி நீண்ட நாட்கள் பிள்ளை இல்லையே என்று ஏங்கித்தவித்த உங்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும்.
திடீர் சுப செலவுகள் வந்து நீங்கும். வேலை விசயமாக முடிவு எடுக்கும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். சுப காரியங்கள் கை கூடி வரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். குலதெய்வத்திற்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனைச் சிறப்பாக முடிப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். அபரிமிதமான பண வரவினால் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். பெண்களுக்கு பொன் நகை சேர்க்கை ஏற்படும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறும். வேலைச்சுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு கூடும். அரசாங்க காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள்

தனுசு

தனுசு

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குழப்பங்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கப்போகிறது. கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் நீங்கும். தடைபட்ட காரியங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம் நீண்ட கால பயணங்களைத் தவிர்க்கவும். பயணங்கள் அதிகமாகும். மனைவி அல்லது கணவனின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். பொன் நகை சேர்க்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் பூர்வீக சொத்து மூலம் லாபம் வரும். வேலையில் புரமோசனும் நீண்ட நாட்களாக வர வேண்டிய சம்பள உயர்வு வரும்.

மகரம்

மகரம்

உங்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல் நீங்கி சுகமான நாட்களாக மாறப்போகிறது. கசப்பான நாட்கள் மாறி இனி தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரப்போகிறது. பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. நான்காம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவினால் அம்மாவிற்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். அம்மா வழி உறவினர்களால் சில சிக்கல்கள் வரும். திடீர் கருத்து மோதல்கள் வரலாம். சிலருக்கு இடமாற்ற்ம உண்டாகும். பணத்தட்டுபாடுகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்

கும்பம்

பேச்சில் கம்பீரம் பிறக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் தேடி வந்து கொடுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். அம்மாவின் ஆரோக்கியம் கூடும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். சுபகாரியங்களும் நல்ல காரியங்களும் நிறைய நடைபெறப்போகிறது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். மே மாதத்திற்குப் பிறகு புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்க முயற்சி செய்யலாம்.

மீனம்

மீனம்

குடும்ப ஸ்தானத்தில் வரும் ராகுவினால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். உங்கள் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை, தவறான புரிந்து கொண்டு சண்டைக்கு வர வாய்ப்பு உள்ளது. சகோதர சகோதரிகள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கடன் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றியவர்கள் நேரில் வந்து கொடுத்து விட்டு செல்வார்கள். திடீர் திருப்பங்கள் நிகழப்போகிறது. காரியத்தடைகள் நீங்கும் வெற்றி கை கூடும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். எதிர்பாலினத்தவரிடம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+