Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனி மாத சிறப்பு ராசி பலன்கள்

Subscribe to Oneindia Tamil

-ஜோதிட பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

சென்னை: சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதமாகும்.

சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம்.

நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது.

ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம்.

தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

ஆனி பௌர்ணமி அன்று திருச்சி உறையூரில் மேல்கூரை இல்லாமல் திறந்த வெளியில் உள்ள கருவறையில் அருள்புரியும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பௌர்ணமி அன்று மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்வர். பின்னர் மாம்பழங்களைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.

ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சனம் நடைபெறும்.

திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பௌர்ணமியன்று, சுவாமிக்கு வாழைப்பழத்தார்களை சமர்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ, பிரார்த்தனை செய்வர்.

ஆனி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் 16 வகையான அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும்.

காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி "மாங்கனித் திருவிழா' நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடைகூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்துகொண்டு மாம்பழங்களைக் கொட்டுவார்கள்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கு உரிய ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 03ம் தேதி வக்ரகதியில் துலாம் ராசிக்கு மாறுகிறார் 28ம் தேதி நேர்கதியில் விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்
புதன் - 13ம் தேதி மிதுனம் ராசிக்கு மாறுகிறார்
27ம் தேதி கடகம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 23ம் தேதி கடகம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்:

மேஷம்:

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் தகவல் தொடர்பு சீரடையும் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பணவரவு அதிகரிக்கும் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லுறவு உண்டாகும் உடன் பிறந்த சகோதரிகளின் உதவி கிடைக்கும் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனக் குழப்பம் அதிகரிக்கும் தேவையற்ற வீண் கவலையை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் தொழில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்:

ரிஷபம்:

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பள உயர்வு உண்டாகும் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் நல்லுறவு உண்டாகும் வீடு மனை போன்ற விஷயங்களில் கவனம் தேவை புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் சமயோசிதமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கும் யோகம் உண்டாகும் கல்வியில் ஆர்வம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உடலில் அசதியும் மந்த நிலையும் உண்டாகும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறப்படையும் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் வெற்றியடையும்

மிதுனம்:

மிதுனம்:

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தலைமைப் பதவி கிடைக்கும் அப்பாவின் உதவி கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் பிரச்சினைகள் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் புத்தி கூர்மை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் பண வரவு அதிகரிக்கும் நிலை உருவாகும் மன சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் மேன்மையடையும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்வீர்கள் அண்டை அயலாருடன் சச்சரவு வேண்டாம் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் பயணம் செய்யும் நிலை உண்டாகும் அப்பாவின் ஆலோசனை கேட்டு நடப்பது சிறப்பு

கடகம்:

கடகம்:

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் வெளிநாடு தொழில் தொடர்புகல் மூலம் பணவரவு அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும் வாகன யோகம் உண்டாகும் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்வீர்கள் குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும் ஆடம்பரப்பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்வீர்கள் விவசாயம் விருத்தியாகும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும்

சிம்மம்:

சிம்மம்:

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் வெற்றியடையும் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் தன வரவு அதிகரிக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத்துணையின் உதவி கிடைக்கும் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை விலைக்கு வாங்குவீர்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் சோம்பல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும்

கன்னி:

கன்னி:

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் செயல்கள் வெற்றியடையும் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும் வெளியூர் செல்வீர்கள் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தை தரும் தாய் மாமன் உதவி கிடைக்கும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் பணிகளுக்கு நன்கொடை கொடுப்பீர்கள் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் யோகம் அதிகரிக்கும் ஜவுளி வியாபாரம் சிறப்படையும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

துலாம் :

துலாம் :

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாகனம் வகையில் பண வரவு அதிகரிக்கும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் படிப்பதற்காக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகலாம் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவைத் தவிர்க்கவும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்

விருச்சிகம்:

விருச்சிகம்:

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் ஆடை ஆபரணத் தொழில் சிறப்படையும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் மந்த நிலை உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் வெற்றி கிடைக்கும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்

தனுசு:

தனுசு:

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் அலுவலக இடமாற்றம் ஏற்படும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்குவதை தவிர்க்கவும் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும்

மகரம் :

மகரம் :

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவைத் தவிர்க்கவும் வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வரவு செலவுகளில் மிகவும் கவனமாக இருக்கவும் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்

கும்பம் :

கும்பம் :

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் வேகம் அதிகரிக்கும் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஊக வணிகம் சிறப்படையும் கல்வி நிலை மேன்மையடையும் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவரின் உதவியும் கிடைக்கும் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் எடுக்கும் காரியங்களெல்லாம் வெற்றியடையும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்

மீனம் :

மீனம் :

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் வழிபாடு சிறப்பைத் தரும் புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும் புதிதாக வீடு வாங்குவீர்கள் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும் குழந்தைகளின் விஷயத்தில் கவனம் தேவை சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்திலிருந்து பண வரவு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயிலுக்கு பயணம் ஏற்படும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+