தை மாத ராசி பலன்

Subscribe to Oneindia Tamil

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - தை 29ம் தேதி (12-02-2015) மீனம் ராசிக்கு மாறுகிறார்.
புதன் - ராசி மாற்றம் இல்லை
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - தை 06ம் தேதி (20-01-2015) கும்பம் ராசிக்கு மாறுகிறார்.
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை

Rasi Palangal for Tamil Month of Thai

மேஷம்:

உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தந்தையுடன் உறவு நிலை சிறப்பாக இருக்கும். தொழில் நிமித்தம் சற்று அலைச்சல் உண்டாகும். அண்ணன் தம்பி உதவி கிடைக்கும். நெருப்பு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு தொழில் நன்கு இருக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை.

குழந்தைகளால் மன கஷ்டம் உண்டாகும். கமிஷன் வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். கல்வி கேள்விகளில் ஆர்வம் அதிகரிக்கும். இல்லறத்துணையுடன் பிரச்சினை உண்டாகும். மனதில் இனம் தெரியாத பயம் உண்டாகும். எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.

வேல் முருகனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

ரிஷபம்:

தொழில் மந்த நிலையில் இருக்கும். உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக செயல்படவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு குறையும். கடன் வாங்கும் நிலை உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் தேவை.

படிப்பில் மந்த நிலை உருவாகும். பங்கு வர்த்தகத்தில் கவனமாக செயல்படவும். இல்லறத் துணையுடன் சச்சரவு உண்டாகும். வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. உடலில் அசதி அதிகரிக்கும். மூத்த சகோதரத்துடன் பிரச்சினை உண்டாகும்.

ஐயப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

மிதுனம்:

வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். பதவி உயர்வு தடைபடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எல்லாவற்றிலும் இல்லறத் துணையின் உதவி கிடைக்கும். கத்தி அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை கையாளுவதில் கவனம் தேவை.

சகோதரர்கள் பகைமை பாராட்டுவார்கள். படிப்பில் மேன்மை உண்டாகும். கமிசன் வியாபாரம் சிறக்கும். நிலம் வீடு போன்ற வகைகளில் பிரச்சினைகள் உருவாகும்.
மகாவிஷ்ணுவை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

கடகம்:

பதவி உயர்வில் தடை உண்டாகும். வியாபாரமும் சுமாராக இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். படிப்பில் மந்தம் உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும்.

ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதன் மூலம் தைரியம் அதிகரிக்கும். தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பண வரவு சுமாராக இருக்கும். குழந்தைகளின் செயல்கள் மனதிற்கு சந்தோஷத்தைத் தரும்.

அம்பாளை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

சிம்மம்:

குதர்க்கமான பேச்சைத் தவிர்க்கவும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழிலில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையை கடை பிடிக்கவும். கணவன் மனைவி இடையே பிரச்சினை உண்டாகும்.

ஆடம்பரப் பொருட்களில் செலவினை தவிர்க்கவும். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் தகவல் வந்து சேரும். படிப்பில் கவனம் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயணம் உண்டாகும். குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

கன்னி:

தொழிலில் மேன்மை உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இல்லறத்தில் குழப்பங்கள் உண்டாகும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடுகளைத் தவிர்க்கவும். ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

பதவி உயர்வு தேடி வரும். வாகனங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. மனதில் எரிச்சல் அதிகரிக்கும். தொழிலில் கடும் உழைப்பினை கொடுக்க வேண்டியிருக்கும்.

சிவ பெருமானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

துலாம்:

உத்தியோகத்தில் பதவி உயர்வு முன்னேற்றம் தடைபடும், குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சில் கவனம் தேவை. ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். தொழில் வருமானம் சுமாராக இருக்கும்.

வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கல்வி கேள்விகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டாகும். எல்லாவற்றிலும் தாய் மாமன் உதவுவார்.

சரஸ்வதியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

விருச்சிகம்:

தொழிலில் விருத்தி உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை தொழில் முன்னேற்றத்திற்கு உதவும். சோம்பல் அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்திலிருந்து உங்கள் பங்கு கிடைக்கும்.

மறதி அதிகரிக்கும். சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். குடும்ப சூழ்நிலை சந்தோஷத்தைத் தரும். உணவு வகைகளில் கவனம் தேவை. எதிலும் தைரியமான செயல்பாட்டை மேற்கொள்வது சிறப்பு.

விநாயகரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

தனுசு:

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். தொழில் விஷயங்களில் எச்சரிக்கையாக செயல்படவும். வாகனங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் நல்ல செய்தி வந்து சேரும். விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.

படிப்பில் உயர்வு நிலை உருவாகும். மின்சார சாதனங்களை கையாளுவதில் கவனம் தேவை. உஷ்ணத்தின் காரணமாக உடல்நலம் சற்று பாதிக்கும். பண விஷயங்களில் கவனமாக செயல்படவும். பொன் நகைகளை கவனமாகக் கையாளவும்.
சிவசுப்பிரமணியரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

மகரம்:

பிறர் மீது அதிகாரம் செய்யும் எண்ணம் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே தற்காலிக பிரிவு உண்டாகும். புத்தி தடுமாறும். படிப்பில் கவனம் தேவை. கோபத்தை குறைத்துக் கொள்ளவும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்பு லாபத்தைட் தரும். சகோதரர்களுக்கிடையே சச்சரவு உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் தேவை.

லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

கும்பம்:

தொழில் உத்தியோகம் நன்றாக இருக்கும். கமிஷன் வியாபாரம் மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை. எதையும் நன்கு சிந்தித்து செயல்படுத்தவும். வரவு செலவுகளில் கவனம் தேவை. அகங்கார எண்ணத்தை தவிர்க்கவும்.

அரசு வகைகளில் கவனமாக இருக்கவும். பதவி உயர்வில் தடை உண்டாகும். ஆடம்பரச் செலவுகள் உண்டாகும். பேச்சை குறைக்கவும். வாகனங்களை மிகவும் கவனமாகக் கையாளவும்.

காலபைரவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

மீனம்:

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பதவியில் உயர்வு வரும் காலம். மனக் குழப்பங்களை தவிர்க்கவும். எல்லோரிடமும் விவாதம் செய்வதை தவிர்க்கவும். பிறர் உங்களை தவறாக புரிந்து கொள்ளும் நிலை உருவாகும்.

தாய் மாமன் உதவியும் அனுசரணையும் கிடைக்கும். கமிஷன் வியாபாரம் நன்கு லாபத்துடன் இயங்கும். இல்லறத்துணையின் ஆதரவு உதவி எல்லாவற்றிலும் இருக்கும்.
சங்கரநாராயணரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+