பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மார்கழி மாத ராசிபலன்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். ‘மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேணடியது அவசியம்.
அரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அதே போன்று ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடுகிறோம். வைணவர்கள் மட்டுமின்றி இந்துக்கள் எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசி. அந்த நன்னாளில் அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் பெருமாளை தரிசிப்பவர்கள் சொர்க்கத்தை அடைவர் என்பது நம்பிக்கை. இவ்வாறு பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமாக மார்கழியை வைத்திருக்கிறார்கள் நம் பெரியோர்கள்.
நமது சொந்தக் காரியங்களை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. இத்தகைய பெருமை மிகு மார்கழி மாத ராசி பலனை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்
சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 07ம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார்
புதன் - 10ம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 09ம் தேதி விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகம் காரணமாக வெளிநாடு பயணம் உண்டாகும், அப்பாவின் ஆலோசனை நல் வாழ்க்கைக்கு வழி வகுக்கும். ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறக்கும் 07ம் தேதிக்கு பிறகு நிலம் வீடு வகையில் நல்ல பலன்கள் உண்டாகும், புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை உண்டாகும் 10ம் தேதிக்குப் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், குல தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 09ம் தேதிக்குப் பிறகு மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும், எதிரிகளை வெல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும், பாட்டி வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்
சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளின் வகையில் கவனம் தேவை, அப்பாவுடன் சச்சரவு உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் லாபத்தைத் தரும், சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வருமானம் உண்டாகும், 10ம் தேதிக்குப் பிறகு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும், குழந்தைகளின் படிப்பில் கவனம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கை துணையுடன் சச்சரவு வேண்டாம், 09ம் தேதிக்குப் பிறகு பெண்களால் யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும், நண்பர்களின் உதவி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள், படிப்பில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும், லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை வியாபாரம் சிறப்படையும், உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கட்டுமானப் பணி சிறப்படையும், 07ம் தேதிக்குப் பிறகு புதிதாக வாகனம் வாங்குவீர்கள். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும் 10ம் தேதிக்கு பிறகு திடீர் யோகம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்வீர்கள், குழந்தைகளால் மனக்குழப்பம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 09ம் தேதிக்குப் பிறகு வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும், படிப்பில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் வெற்றியடையும், தொழில் சீரடையும்.

கடகம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும், காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு வேண்டாம், 10ம் தேதிக்குப் பிறகு கமிஷன் வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் 09ம் தேதிக்குப் பிறகு உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு செல்வீர்கள், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சிறு தூரப் பயணம் உண்டாகும், பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் குல தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள், அப்பாவின் உதவி கிடைக்கும்.

சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு ஒப்பந்தத் தொழில் சிறப்படையும், பூர்வீகத் தொழிலில் மேன்மை உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகையில் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஊகவணிகம் சிறப்படையும் 10ம் தேதிக்குப் பிறகு தொழிலில் முதலீடு அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் வீட்டு விசேஷத்திற்கு செல்வீர்கள் 09ம் தேதிக்குப் பிறகு வாகன யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் தொழில் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும், கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தின் மூலம் பணவரவு உண்டாகும், பேச்சில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும், வாகனங்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை.

கன்னி
சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் அசையாத சொத்தில் பங்கு கிடைக்கும், அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தான் என்ற கர்வம் தவிர்க்கவும், உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும் 10ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும், முதலீட்டு வட்டி அதிகரிக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தங்க நகை சேர்க்கை அதிகரிக்கும், 09ம் தேதிக்குப் பிறகு சுப மங்கள விஷேசங்களில் கலந்து கொள்ள அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும், இடமாற்றம் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் உடலில் சோர்வு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும், வெளியூர் பயணம் வெற்றியைத் தரும்.

துலாம்
சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு முறைப் பயணம் உண்டாகும், இட மாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிய வகை இயந்திரங்கள் வாங்குவீர்கள், 07ம் தேதிக்குப் பிறகு குடும்ப சச்சரவைத் தவிர்க்கவும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் 10ம் தேதிக்குப் பிறகு புது வீட்டுக்கு குடி போகும் நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், தான தர்மங்களில் ஈடுபாடு உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் 09ம் தேதிக்குப் பிறகு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் வருமானம் அதிகரிக்கும், பேச்சில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், வீண் செலவுகளில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும், பழைய நிலுவைகள் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் 07ம் தேதிக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு அதிகரிக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சினில் புத்தி கூர்மை அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு தகவல் தொடர்பு நிலை சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், தங்க நகை தொழிலில் தன வரவு அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர பொருட்கள் சேர்க்கை உண்டாகும், 09ம் தேதிக்குப் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், உடலில் சோர்வு உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நிறைவேறும், வயதானவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக பழைய வீட்டை பராமரிப்பீர்கள், தெய்வீகப் பணியில் ஆர்வம் உண்டாகும்.

தனுசு
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும், உயர் அதிகாரிகளின் உதவியும் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும், சகோதரர்கள் தொழில் மேன்மைக்கு உதவுவார்கள். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும், 10ம் தேதிக்குப் பிறகு பேச்சு வன்மை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆலய திருப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும், தான தர்மம் செய்வீர்கள். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு விலையுர்ந்தப் பொருட்கள் வாங்கித் தருவீர்கள் 09ம் தேதிக்குப் பிறகு ஆடம்பரச் செலவுகள் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்பு லாபத்தை தரும், உத்தியோகத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம்
சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை, அப்பாவுக்காக செலவுகள் செய்வீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும்,07ம் தேதிக்கு பிறகு சீருடை பணியாளர்கள் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துகளை விற்க நேரிடலாம் 10ம் தேதிக்குப் பிறகு தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வருமானம் வரும், வாரிசுகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ளவும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மனைவியின் உதவி கிடைக்கும், 09ம் தேதிக்குப் பிறகு பெண்களால் அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனதில் தடுமாற்றம் உண்டாகலாம், கல்வியில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் உதவி கிடைக்கும், இடமாற்றம் உண்டாகும்.

கும்பம்
சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கம் தொடர்புடைய தொழில் மேன்மையடையும், உங்கள் திட்டத்திற்கு உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும், 07ம் தேதிக்குப் பிறகு கணித கல்வி சம்பந்தப்பட்ட தொழிலில் பண வரவு அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் தொடர்பு சிறப்படையும் 10ம் தேதிக்குப் பிறகு தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் செல்வச் செழிப்பு அதிகரிக்கும், அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 09ம் தேதிக்குப் பிறகு தொழில் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எடுத்த காரியங்களெல்லாம் வெற்றியடையும், நினைத்ததெல்லாம் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தடைகள் நீங்கும், நிம்மதி பிறக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்.

மீனம்
சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ஜீவன வகை சிறப்படையும், பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும், 07ம் தேதிக்குப் பிறகு வாகனங்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் லாபத்தைத் தரும் 10ம் தேதிக்குப் பிறகு படிப்பில் சிறந்த நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் பழைய கடனை திரும்ப செலுத்தும் நிலை உண்டாகும், கையிருப்பு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை, 09ம் தேதிக்குப் பிறகு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறக்கும், உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவரின் உதவியும் கிடைக்கும், வெளியூர் பயணம் இனிமையைத் தரும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications