தை மாத ராசி பலன்கள் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 12 வரை
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்
ஜோதிடவியலில் தை மாதம் பத்தாவது மாதமாக கூறப்படுகிறது. சூரியன் மகரம் ராசியில் சஞ்சரிப்பது தை மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். தக்ஷாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை.
அதனால்தான் இந்த காலம் எல்லா வகையிலும் சிறப்புடையது. உத்திராடம் சிறந்த நட்சத்திரம்.
உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில் கொல்லையும் (வயலும்) என்பது பழமொழி. அதாவது உத்திராடத்தில் பிள்ளை பிறந்தால் உடனடியாக அவர்களுக்கு அருகிலேயே நிலம், வீடு அல்லது விளை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். எனவே உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும்.
தை மாதம் பல்வேறு விரதநாட்கள் வருகின்றன. தை வெள்ளி, தை அமாவாசை, தை பூசம், ரத சப்தமி, பீஷ்ம அஷ்டமி என பல்வேறு சிறப்பு வாய்ந்த நாட்கள் தை மாதத்தில் வருகின்றன. இந்த மாதம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி உண்டாகும் மக்களிடையே ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் அண்டை நாடுகளுடன் சச்சரவு உண்டாகும் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும் மங்கள விஷேசங்கள் அதிக அளவில் நடைபெறும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்ளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் எதிர்பாராதவிதமாக மழை பொழியும் இந்த மாதம் பத்தாம் தேதி (24-01-2016) தைப்பூசம் அன்று கடல் அல்லது நதியில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்க்கை வளம் பெரும். இருபத்தைந்தாம் தேதி (08-02-2016) சோமவார அமாவாசை அன்று தில ஹோமம் செய்வதும் அரச மரம் சுற்றுவதும் முன்னோர்களின் ஆசி கிடைப்பதற்க்கு வழி வகுக்கும். பல்வேறு சிறப்புகள் நிறைந்த தை மாத ராசிபலன்களை தெரிந்து கொள்வோம்

கிரகங்களின் ராசி மாற்றம்
சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - 25ம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 04ம் தேதி தனுசு ராசிக்கும் 29ம் தேதி மகரம் ராசிக்கும் மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - 15ம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்
கேது - 15ம் தேதி மீனம் ராசிக்கு மாறுகிறார்

மேஷம்
சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசு உத்தியோகம் கிடைப்பதற்க்கு வாய்ப்புகள் உண்டாகும், உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளியின் ஒத்துழைப்பு கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும், புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் மாத இறுதியில் தொழில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும், குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் தொழில் வருமானமும் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள் 15ம் தேதிக்குப் பிறகு மனதில் குழப்பம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும் 15ம் தேதிக்குப் பிறகு தொழில் வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும் அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் எதிரிகளை வெற்றி கொள்ளும் நிலை உண்டாகும் புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெருமாள் கோயில் வழிபாடு சிறப்பைத் தரும் மாத இறுதியில் உயர்கல்வியில் மேன்மை உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், அம்மா மூலம் பணவரவு அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கை துணையுடன் அன்னியோனிய உறவு நீடிக்கும், முகவசீகரம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் உதவி கிடைக்கும் தொழில் நிமித்தம் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனக் குழப்பம் உண்டாகும் 15ம் தேதிக்குப் பின் படிப்பில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பவை நிறைவேறும் 15ம் தேதிக்குப் பிறகு தொழில் நிலை சீரடையும்

மிதுனம்
சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை, கோதுமை வியாபாரம் சிறப்படையும் அதிக வருமானம் கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துகளிலிருந்து பங்கு கிடைக்கும், உடன் பிறப்புகளுடன் நல்லுறவு நீடிக்கும். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும் மாத இறுதியில் வாக்கு வன்மை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் அதிகரிக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் மேன்மையடையும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை 15ம் தேதிக்குப் பிறகு இட மாற்றம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா காரியங்களும் சிறப்படையும் 15ம் தேதிக்குப் பிறகு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்

கடகம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பூர்வீகத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக பயணம் செய்வீர்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள், வாகன யோகம் உண்டாகும் புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை மாத இறுதியில் தகவல் தொடர்பு சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்களிடையே நல்லுறவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் விவசாயத் தொழில் சிறப்படையும் குழந்தைகளின் விஷயத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும், 15ம் தேதிக்குப் பிறகு குடும்பத்தில் பிரச்சினைகளைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு வாகனங்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை.

சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வேலை வாய்ப்புக்கான தேர்வில் வெற்றி கிடைக்கும் அப்பாவுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு நிலவும் வெளியூர் பயணம் உண்டாகும் புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் மாத இறுதியில் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை. குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் கௌரவம் அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் நிலபுலன்கள் மூலமாக வருமானம் அதிகரிக்கும் அம்மாவினால் நல்ல பலன்கள் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கவனம் தேவை 15ம் தேதிக்குப் பிறகு மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும் 15ம் தேதிக்குப் பிறகு நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி
சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும் அரசாங்க கௌரவம் கிடைக்கும் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குதற்க்கமான பேச்சை தவிர்க்கவும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை உண்டாகும் மாத இறுதியில் தரகு கமிஷன் வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கிகளில் முதலீடுகள் அதிகரிக்கும் தான தர்மங்கள் செய்வீர்கள். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும் தகவல் தொடர்பு சிறப்படையும் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் சோர்வு அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு செலவுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் 15ம் தேதிக்குப் பிறகு வாழ்க்கைத்துணையுடன் சச்சரவு உண்டாகும்.

துலாம்
சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் அரசு வாகன யோகம் உண்டாகும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் மேன்மையடையும் மாத இறுதியில் புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் வீண் விவாதத்தை தவிர்க்கவும் ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை 15ம் தேதிக்குப் பிறகு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும்
ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும்.

விருச்சிகம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும் தொழில் நிமித்தம் வெளியூர் செல்வீர்கள் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் மாத இறுதியில் புதிய வியாபார யுக்திகள் வெற்றியடையும் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ஆசிரியர் தொழிலில் மேன்மை உண்டாகும் தொழிலில் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும் 15ம் தேதிக்குப் பிறகு தொழில் நிலை சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும்

தனுசு
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பா மூலம் பண வரவு உண்டாகும் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் புதிய வகை இயந்திரங்கள் வாங்குவீர்கள் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தாய் மாமன் உதவி கிடைக்கும் மாத இறுதியில் கமிஷன் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் திருக்கோயில் பணிகளில் ஈடுபாடு கொள்வீர்கள் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிய வகை இயந்திரங்களில் முதலீடு செய்வீர்கள் தொழிலுக்காக விளம்பர செலவுகள் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும் 15ம் தேதிக்குப் பிறகு அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் 15ம் தேதிக்குப் பிறகு வெளியூர் பயணம் உண்டாகும்.

மகரம்
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் சகோதரர்களின் உதவி கிடைக்கும் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள் மாத இறுதியில் பலசரக்கு வியாபாரம் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும் பணம் கொடுக்கல் வாங்களில் கவனம் தேவை சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் எல்லா விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனக் குழப்பம் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு வாகங்களை கையாளும் பொழுது கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி பயணம் செய்யும் நிலை உண்டாகும் 15ம் தேதிக்குப் பிறகு வீண் சச்சரவைத் தவிர்க்கவும்.

கும்பம்
சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும் அரசு அதிகாரிகளுக்காக செலவு செய்யும் நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக வீட்டின் மூலம் பணவரவு கிடைக்கும் முருகன் கோயில் வழிபாடு நல்ல பலன்களை நல்கும் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும் படிப்புக்காக செலவுகள் உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும் தொழிலை நவீனப் படுத்துவீர்கள் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் சுய தொழிலில் மேன்மை உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு கிடைக்கும் 15ம் தேதிக்குப் பிறகு அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்
சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் பதவி உயர்வு உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு போன்ற விஷயங்களில் கவனம் தேவை மின்சார பொருட்கள் வியாபாரம் சிறப்பாக இருக்கும் புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தை தரும் மாத இறுதியில் தாய் மாமனின் உதவி கிடைக்கும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதர விஷயத்தில் கவனம் தேவை சமூகத்தில் மதிப்பு உயரும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் குல தெய்வ அருள் கிடைக்கும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் 15ம் தேதிக்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனக் குழப்பத்தை தவிர்க்கவும் 15ம் தேதிக்குப் பிறகு செலவுகளில் கவனம் தேவை












Click it and Unblock the Notifications