ஐப்பசி மாத ராசி பலன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

- ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

சென்னை: சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி முதல்நாளே தீபாவளி பண்டிகை வருகிறது.

ஐப்பசி மாதம் முதல் தேதி (18-10-2017) புதன்கிழமை முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவேரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும்.

சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமென்றும், ஐப்பசி மாதத்தில் நீசம் என்றும் சோதிட சாஸ்திரம் கூறுகின்றது. துலா ராசியில் சுக்கிரன் ஆட்சி. மேஷ ராசியில் நீசமடையும் சனிபகவானுக்குத் துலா ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர்களுடைய ஆதிக்கம் நிறைந்தும் காணப்படும்.

தீபாவளி பண்டிகை, கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் இந்த மாதத்தில் வருவது சிறப்பாகும். பல்வேறு பண்டிகைகள் நிறைந்த ஐப்பசி மாதத்தில் 12 ராசிகாரர்களுக்கும் பலன்களை தெரிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - 15ம் தேதி விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 16ம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார்
சனி - 09ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம் :

மேஷம் :

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், அரசாங்க அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் வம்பு வழக்கு பிரச்சினைகள் உண்டாகலாம் சச்சரவைத் தவிர்க்கவும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் விருத்தியாகும் 15ம் தேதிக்குப் பிறகு தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களிடம் நல்லுறவு உண்டாகும், மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் 16ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும், 09ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம் :

ரிஷபம் :

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும், அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்,.உல்லாசப் பயணம் செல்வீர்கள். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், 15ம் தேதிக்குப் பிறகு வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதர விஷயங்களில் கவனம் தேவை, படிப்பில் மந்த நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், 16ம் தேதிக்குப் பிறகு பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் 09ம் தேதிக்குப் பிறகு மனதில் அழுத்தம் அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மிதுனம் :

மிதுனம் :

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், பிதுரார்ஜித சொத்துக்களில் பங்கு கிடைக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள், தொழிற்சாலைக்கு இயந்திரம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு தாய்மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும், திருக்கோயில் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.. சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள், 16ம் தேதி உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், 09ம் தேதிக்குப் பிறகு தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

கடகம் :

கடகம் :

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீட்டு கிடைக்கும், புதிதாக வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், இடம் மாற்றம் உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியம் சிறப்படையும், 15ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும், படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும், 16ம் தேதிக்குப் பிறகு புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள், 09ம் தேதிக்குப் பிறகு உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தியில் சலனம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பிரயாணம் செல்வீர்கள்.

சிம்மம் :

சிம்மம் :

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு இடம் மாற்றம் உண்டாகும், அலுவலகத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் மூலம் பண வரவு கிடைக்கும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், 15ம் தேதிக்குப் பிறகு வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் உண்டாகும், நண்பர்களால் நன்மை உண்டாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், 16ம் தேதிக்குப் பிறகு அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும், 09ம் தேதிக்குப் பிறகு வாழ்க்கைத் துணையின் மூலம் சொத்து கிடைக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும்.

கன்னி :

கன்னி :

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபம் அதிகரிக்கும், சகோதரர்களால் நன்மை விளையும். உங்கள் ராசிநாதன் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும், 15ம் தேதிக்குப் பிறகு நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும். . குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகத்தில் வசீகரம் அதிகரிக்கும், 16ம் தேதிக்குப் பிறகு நகைகளை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் 09ம் தேதிக்குப் பிறகு விவசாயம் விருத்தியடையும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

துலாம் :

துலாம் :

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அரசாங்க வேலை தேடி வரும், உத்தியோகத்தில் அதிகாரப் பதவி கிடைக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் வகையில் செலவுகள் உண்டாகும், நிலபுலன்களில் முதலீடு செய்வீர்கள். . புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசித புத்தியுடன் செயல்படுவீர்கள், 15ம் தேதிக்குப் பிறகு வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், செல்வாக்கு உயரும்.. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள், 16ம் தேதிக்குப் பிறகு பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும், 09ம் தேதிக்குப் பிறகு புதிய வீட்டுக்கு குடி செல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம் :

விருச்சிகம் :

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும், அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் யாவும் எளிதில் நிறைவேறும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். . புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளி மாநில தொழில் தொடர்புகள் சிறப்படையும், 15ம் தேதிக்குப் பிறகு புத்திக் கூர்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பணிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும், தேவையற்ற விரயங்கள் உண்டாகும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வியாபார லாபம் அதிகரிக்கும், 16ம் தேதிக்குப் பிறகு மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும் 09ம் தேதிக்குப் பிறகு குடும்ப வருமானம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் வில்லங்கம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.

தனுசு :

தனுசு :

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், அப்பாவின் உதவி கிடைக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும், அதிகாரப் பதவி கிடைக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும், 15ம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், எதிர் பார்த்த அளவுக்கு மேல் பணம் கிடைக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் 09ம் தேதிக்குப் பிறகு உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவு உண்டாகலாம்.

மகரம் :

மகரம் :

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும், வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் வீட்டில் பங்கு கிடைக்கும், வாரிசு அடிப்படையில் வேலை கிடைக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் சம்பந்தப் படிப்பில் கவனம் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பின்னர் ஊக வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு மூலம் வியாபார முன்னேற்றம் உண்டாகும், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் நிறைவேறும் 09ம் தேதிக்குப் பிறகு தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி பிரயாணம் செய்யும் நிலை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும்.

கும்பம் :

கும்பம் :

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழிப்பு கிடைக்கும், தொழில் நிமித்தம் அடிக்கடி வெளியூர் பிரயாணம் செல்வீர்கள். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகையில் வருமானம் உண்டாகும், சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனி உதவி கிடைக்கும் 15ம் தேதிக்குப் பின்னர் கமிஷன் தொழிலில் முன்னேற்றம். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், பொன்னகைகள் வாங்குவீர்கள்.. சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் 16ம் தேதிக்கு பின்னர் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழில் சிறப்படையும் 09ம் தேதிக்குப் பின்னர் தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்கு பிரயாணம் செல்வீர்கள்.

மீனம் :

மீனம் :

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களால் மனக் கஷ்டம் உண்டாகும், அப்பாவின் செயல்கள் சங்கடத்தை உண்டாக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் பண வரவு அதிகரிக்கும், கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் குழப்பம் உண்டாகும் 15ம் தேதிக்குப் பின்னர் உயர்கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும், அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், 16ம் தேதிக்குப் பிறகு வீட்டு உபயோகப் பொருட்களை ரிப்பேர் செய்யும் நிலை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் ஆலய வழிபாடுகள் மனதிற்க்கு நிம்மதி தரும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் நிறைவேறும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Tamil month of Aippasi falls between 18.10.2017 and 16.11.2017. Known as Thula masam the first day is known as Aippasi Vishu. Here Aippasi Month rasi palan.
Please Wait while comments are loading...