For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறைவழிபாட்டிற்கு உகந்த மார்கழி மாத ராசிபலன்கள்

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். 'மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேணடியது அவசியம்.

அரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அதே போன்று ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடுகிறோம். வைணவர்கள் மட்டுமின்றி இந்துக்கள் எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசி. அந்த நன்னாளில் அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் பெருமாளை தரிசிப்பவர்கள் சொர்க்கத்தை அடைவர் என்பது நம்பிக்கை. இவ்வாறு பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமாக மார்கழியை வைத்திருக்கிறார்கள் நம் பெரியோர்கள்.

நமது சொந்தக் காரியங்களை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. இத்தகைய பெருமை மிகு மார்கழி மாத ராசி பலனை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை

செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை

புதன் - ராசி மாற்றம் இல்லை

குரு - ராசி மாற்றம் இல்லை

சுக்கிரன் - 13ம் தேதி கும்பம் ராசிக்கு மாறுகிறார்

சனி - ராசி மாற்றம் இல்லை

ராகு - ராசி மாற்றம் இல்லை

கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் தொழில் லாபம் அதிகரிக்கும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பண தட்டுபாடு உண்டாகும் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் 13ம் தேதிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும் இருப்பினும் உத்தியோகத்தில் மன உழைச்சல் இருக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றிபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் டென்சன் உண்டாகும் அப்பாவிடம் மனஸ்தாபம் உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் நிலபுலன் வகையில் நன்மை உண்டாகும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை வியாபாரம் விருத்தியாகும் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் கல்வியில் மேன்மை உண்டாகும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும் 13ம் தேதிக்குப் பிறகு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்

மிதுனம்

மிதுனம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசுமுறை பயணம் உண்டாகும் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்த தொழில் சிறப்படையும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துகளில் பங்கு கிடைக்கும் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கூட்டுத் தொழில் சிறப்படையும் தாய் மாமனால் நன்மை உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம் 13ம் தேதிக்குப் பிறகு பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

கடகம்

கடகம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவு உண்டாகும் தொழிலிலும் பிரச்சினை உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் தேவை நெருப்பினால் காயம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் பிரச்சினையை தவிர்க்கவும் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 13ம் தேதிக்குப் பிறகு பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் குடும்பத்துடன் உல்லாசப்பயணம் செல்வீர்கள் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்கவும்

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் உறவினர் வீட்டு விஷேஷங்களில் கலந்து கொள்வீர்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற வகை தொழில்களில் விருத்தி உண்டாகும் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வியில் மேன்மை உண்டாகும் நுண்கலைகளில் ஆர்வம் உண்டாகும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை உண்டாகலாம் 13ம் தேதிக்குப் பிறகு விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் இயந்திரத் தொழிலில் சிறப்படையும் விவசாயம் விருத்தியாகும் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை கிடைக்கும்.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகையில் சிக்கல் உண்டாகும் கூர்மையான பொருட்களால் காயம் உண்டாகலாம் உங்கள் ராசிநாதன் புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் சிறந்த நிலை உண்டாகும் தேர்வுகளில் மதிப்பெண் அதிகரிக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும் புத்தியில் தெளிவு பிறக்கும் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் 13ம் தேதிக்குப் பிறகு உடன் பிறந்த சகோதரிகளுடன் மனஸ்தாபம் உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் மன தைரியம் அதிகரிக்கும் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

துலாம்

துலாம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிடமாற்றம் உண்டாகும் செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிகாரப் பதவி கிடைக்கும் அரசாங்க பதக்கம் விருது கிடைக்கலாம் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்திருந்த தகவல் வந்தடையும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கல்விக்காக செலவுகள் உண்டாகும் திருக்கோயில் பணிகளுக்கு தர்மம் செய்வீர்கள் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் 13ம் தேதிக்குப் பிறகு உறவினர்களுடன் உல்லாசப் பயணம் போகும் நிலை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் கடுமையான வார்த்தைகளை தவிர்க்கவும் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும் அப்பாவின் மூலம் பண வரவு உண்டாகும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் கமிஷன் வியாபாரம் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா ஆசைகளும் நிறைவேறும் மனதில் நிம்மதி பிறக்கும் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் புது வீடு கட்டும் யோகம் உண்டாகும் 13ம் தேதிக்குப் பிறகு புதிய வாகனம் வாங்குவீர்கள் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் சொத்துச் சேர்க்கையும் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய கிளை துவங்குவீர்கள் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அப்பா சம்பாதித்த சொத்து கிடைக்கும் உத்தியோக நிலை சிறப்படையும் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வருமானம் உண்டாகும் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் கலைகளில் நிபுணத்துவம் பெறுவீர்கள் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் சிறப்படையும் லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் 13ம் தேதிக்குப் பிறகு இட மாற்றம் உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் செலவுகளில் கவனம் தேவை ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும்.

மகரம்

மகரம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிமித்தம் வெளியூர் செல்வீர்கள் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் உண்டாகும் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அதிக செலவுகள் ஏற்படும் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் அன்ன தானத்திற்கு நிதி உதவி செய்வீர்கள் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 13ம் தேதிக்குப் பிறகு நகைநட்டுகள் வாங்குவீர்கள் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும் எல்லா முயற்சிகளும் வெற்றி கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம்

கும்பம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் செயல்கள் சிறப்படையும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் பிரயாணத்தினால் அலைச்சல் உண்டாகும் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் தொழில் சிறப்படையும் ஆசிரியர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும் செல்வ வளம் சிறப்பாக இருக்கும் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும் 13ம் தேதிக்குப் பிறகு மன சந்தோஷம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் எல்லா செயல்களும் வெற்றி பெறும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவரிடமும் நல்லுறவு உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும் வேலைப்பளு அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் சுய தொழில் சம்பந்தமான படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்துணையினால் சந்தோஷம் அதிகரிக்கும் உறவினர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 13ம் தேதிக்குப் பிறகு செலவுகள் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தான பழைய வீடு உங்கள் பங்குக்கு கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பண விஷயத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும்.

English summary
Rasipalan for the Month of Margazhi from 16-12-2015 to 13-01-2016
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X