For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பங்குனி 2018 - மேஷம் முதல் மீனம் வரை ராசி பலன்கள்

நவகிரகங்களின் தலைவன் சூரியன் மீனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் இது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பங்குனிமாதத்தில் 12 ராசிகாரர்களுக்கும் பலன்கள் தெரிந்து கொள்வோம்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே ஆர் சுப்ரமணியன்

சென்னை: நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குருவின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது.

பார்வதி - பரமேஸ்வரன், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஆண்டாள் - ரங்கமன்னார், தெய்வானை - முருகன் என திருக்கல்யாணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கி யம் பெற்றாள். அத்துடன் மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான். ஞானகுருவாகிய ஐயப்பன் அவதரித்தது இந்த பங்குனி மாதத்தில்தான். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான்.

பங்குனி மாதம் பணபலத்தையும் மனோபலத்தையும் தரும் மாதமாக அமையட்டும். 12 ராசிக்காரர்களும் ராசிபலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - ராசி மாற்றம் இல்லை
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 12ம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள், அப்பாவுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்திலிருந்து பங்கு கிடைக்கும், தொழில் நுட்ப கல்வியில் மேன்மை நிலை உருவாகும். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவரிடமும் அன்புடன் பழகுவீர்கள், பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் 12ம் தேதிக்குப் பின்னர் முக வசீகரம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா செய்து கொண்டிருக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து சரி செய்து வைத்துக் கொள்வது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் எளிமையாக நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும், வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் செயல்கள் மனகஷ்டத்தை கொடுக்கும், வாகன போக்குவரத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், குடும்ப வருமானம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும், குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் 12ம் தேதிக்குப் பின்னர் செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் சிரத்தை தேவை, செய் தொழிலில் விரக்தி உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், புதிதாக வீடு நிலம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் செயல்கள் எல்லாம் வெற்றி பெறும், சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களிடையே கௌரவம் அதிகரிக்கும், செல்வச் சேர்க்கை உயரும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும் 12ம் தேதிக்குப் பின்னர் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும், தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவு உண்டாகும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும், உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும், வாகன யோகம் உண்டாகும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், 12ம் தேதிக்குப் பின்னர் செயல்கள் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடலில் வலி உண்டாகும், சோம்பல் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் தொல்லை உண்டாகும், அலுவலகத்தில் வேலையில் மனம் ஈடுபாடு இருக்காது. செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும், உல்லாசப் பயணம் செல்வீர்கள். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், படிப்பில் கவனம் தேவை. குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்லவும் 12ம் தேதி முதல் மனைவியினால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

கன்னி

கன்னி

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலைக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள், தொழிற்சாலைக்காக இயந்திரங்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் 12ம் தேதிக்குப் பின்னர் பொன் நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை ரிப்பேர் செய்து கொள்ளவேண்டும், வியாசாயம் சிறப்படையும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

துலாம்

துலாம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும், அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, வியாபார வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது. குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும், உறவினர்களிடையே மரியாதை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் சச்சரவு உண்டாகும் 12ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும், மனதில் சஞ்சலம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தேர்வில் மதிப்பெண் அதிகரிக்கும், நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும், வாயை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஊக வணிகம் சிறப்படையும், புத்திக் கூர்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை, அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் 12ம் தேதிக்குப் பின்னர் பெண் எதிரிகளால் தொல்லை உண்டாகும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் கலக்கம் உண்டாகும்.

தனுசு

தனுசு

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு நிலம் கிடைக்கலாம், அப்பாவினால் நன்மை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், மனதில் எரிச்சல் அதிகரிக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் 12ம் தேதிக்குப் பின்னர் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், உடலில் அசதி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டா விவாதம் செய்யாதீர்கள். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்படும், அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் வரும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை விற்றுவிட்டு புது வீட்டை வாங்குவீர்கள் அல்லது பழைய வீட்டை புதுப்பீர்கள். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு வேண்டியதை வாங்கி கொடுப்பீர்கள் 12ம் தேதிக்குப் பின்னர் வாகன யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்காத்தாரால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும், அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் கிடைத்துவிடும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் சொத்துகளை வாங்குவீர்கள், வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக பொன்னகைகளை வாங்குவீர்கள் 12ம் தேதிக்குப் பின்னர் இடம் மாறும் சூழல் உருவாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், சுய தொழிலில் ஏற்றம் ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு உண்டாகும், அதிகாரப் பதவி கிடைக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், வேலையில் சுறுசுறுப்பு உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதி நுட்பம் அதிகரிக்கும், கல்வியில் சிறந்த நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும், செலவுக்கு போக பணம் அதிகமாக மிச்சமாகும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அழகு அதிகரிக்கும் 12ம் தேதிக்குப் பின்னர் நகைகளை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷய்ங்களில் கவனம் செல்லும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

English summary
Panguni masam or Pankuni month is the last and final month in Tamil calendar or Tamil Panchangam. Usually Panguni month (March – April) is similar to that of Phalgun or Phalguna month in other Hindu calendars.here is the rasi palan for Panguni month 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X