மீனத்தில் சந்திரன்... சிம்மம் சந்திராஷ்டமம் - குழப்பம் தீர பரிகாரம் என்ன?
இன்றைய தினம் மீனம் ராசியில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
சென்னை: மீனம் ராசியில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
இன்றைய நிலையில் கிரகங்கள் மேஷம் ராசியில் சூரியன், புதன் ரிஷபத்தில் சுக்கிரன். கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் சனி மகரத்தில் கேது செவ்வாய், மீனம் ராசியில் சந்திரன் அமைந்துள்ளது.
மீனம் ராசிக்காரர்களும், சிம்ம ராசிக்காரர்களும் பொது இடத்தில், அலுவலகத்தில், வீட்டில் அமைதி காப்பது நல்லது.

மேஷம்
ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் நீடிப்பதால் எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் பொன்னான காலம் இதுவாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். உடல் நலத்தில் அக்கறை தேவை. காதல், குடும்ப வாழ்க்கை உற்சாகமாகவே இருக்கும்.

ரிஷபம்
ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் நீடிப்பதால் வேற்றுமதத்தவர் உதவுவார். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சூரியன், புதன் 12வது இடத்தில் மறைந்திருப்பதால் ஞாபகமறதியால் சின்னச் சின்ன சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். பயணத்தின் போது கவனமாக இருக்கவும். பொருட்கள் திருடுபோக வாய்ப்பு உள்ளது.

மிதுனம்
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். உங்கள் ராசிநாதன் புதன் சூரியனுடன் இணைந்து ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணையில் மற்றொரு இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் பார்ப்பீர்கள். வாழ்க்கை துணையுடனான பயணம் பலன் தருவதோடு செலவுமிக்கதாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும்.

கடகம்
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தந்தையில் உடல் நலத்தில் கவனம் தேவை. ராசிக்கு 7வது இடத்தில் உள்ள கேது, செவ்வாயினால் ஆன்மீக பயணம் அதிகரிக்கும்.
10வது வீட்டில் மறைந்துள்ள சூரியன், புதனால் முயற்சிகள் வெற்றியடையும் நாள் இது. சகோதரர்கள் உதவி செய்வார்கள். காதல் வாழ்க்கையில் காலையில் ஊடலும் மாலையில் கூடலுமாய் இருக்கும்.

சிம்மம்
இன்று 8வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் வாயை விட்டு வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்படும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருப்பதால் அப்பாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.
காதலன் அல்லது காதலியிடம் கவனமாக பேசவும். இன்றைக்கு சுமாரான நாள்தான். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதி தரும்.

கன்னி
சந்திரன் இன்றைக்கு 7வது வீட்டில் அமர்ந்துள்ளார். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும்.எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் செயல்கள் மனக் கஷ்டத்தைக் கொடுக்கும். உங்கள் ராசிநாதன் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் தொல்லைகள் ஏற்படும். திருமணம், காதல் வாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத இனிமையான நாளாகும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்துள்ளார். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சந்திரன் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்துள்ளார். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சூரியன், புதன் 7வது வீட்டில் இருக்கின்றனர். அரசாங்க உதவியும், கல்வியில் மேன்மையும் கிடைக்கும். இன்றைக்கு வீடு நிலம் வாங்க முயற்சி செய்யலாம். காதல் வாழ்க்கையில் அருமையான நாள். மாலையில் வாழ்க்கை துணையுடன் அவுட்டிங் செல்லலாம். எதிர்பாராத பயணம் சிலருக்கு அமையும்.

விருச்சிகம்
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் இருப்பதால் குழந்தைகளின் உடல்நலனில் அக்கறையும் கவனமும் தேவை.
சூரியன் ஆறாமிடத்தில் மறைந்து இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் கவனம் தேவை. புதன் ஆறாமிடத்தில் இருப்பதால் தாய் மாமானுடன் பிரச்சினை ஏற்படும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருப்பதால் சின்னச்சின்ன பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும்.

தனுசு
சந்திரன் 4வது வீட்டில் இருப்பதால் தாயார் உடல் நலனில் அக்கறை தேவை. சனிபகவானால் சின்னச் சின்ன தொல்லைகள் ஏற்படும். சூரியன், புதன் ஐந்தாமிடத்தில் இருக்கின்றனர் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருப்பதால் நினைப்பதெல்லாம் நடக்கும். உங்கள் அன்புக்குரியவருடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் ஏற்படும் கவனம் தேவை.

மகரம்
சந்திரன் ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களுடன் அன்பாக பேசுவீர்கள். சின்னச் சின்ன பயணங்கள் ஏற்படும். சூரியன் , புதன் நான்காமிடத்தில் இருப்பதால் இன்றைக்கு புதிதாக வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உயர் கல்வி படிக்க அப்ளிகேசன் வாங்கி அப்ளை செய்யலாம். விருப்பமான பாடப் பிரிவுகளில் பள்ளியில் இடம் கிடைக்கும். காதல் வாழ்க்கை கசந்து போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

கும்பம்
இன்றைக்கு மகிழ்ச்சியான நாள். ராசிக்கு 2வது வீட்டில் தனம், குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் பணவரவு அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். காதல் வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும்.
பிடிவாதத்தை தளர்த்தி விட்டுக்கொடுத்து செல்லவும்.

மீனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகள் ஏற்படும். உங்கள் பெயருக்கு சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்யலாம் எனவே கவனம் தேவை.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications