Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா?

மே மாதத்தின் முதல் சனிக்கிழமை சித்திரை மாதத்தின் 22ஆம் நாள் இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சித்திரை மாத ராசி பலன்கள் 2018- 12 ராசிக்கும் பலன்கள்

    சென்னை: தனுசு ராசியில் சந்திரன் பூராடம் நட்சத்தில் அமர்ந்துள்ளார். ரிஷபத்திற்கு சந்திராஷ்டமம். சந்திரன் இருக்கும் ராசிக்காரர்களும், சந்திராஷ்டமம் உள்ள ராசிக்காரர்களும் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருக்கலாம்.

    இன்றைய கிரக நிலைப்படி மேஷத்தில் உச்ச சூரியன், ரிஷபத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசில் சந்திரன் சனி, மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று கேது உடன் அமர்ந்துள்ளார். மீனத்தில் புதன் நீசம் பெற்று அமர்ந்துள்ளார்.

    சனியும், குருபகவானும் வக்ர நிலையில் உள்ளனர். இன்றைக்கு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷம்

    சந்திரன் உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் அமர்ந்துள்ளார். வீட்டில் தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

    உடல் ஆரோக்கியம் மேம்படும். கோபம், படபடப்பு குறையும். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அக்கம் பக்கத்து வீட்டார்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட நிறம், 2, 5, 7 அதிர்ஷ்ட எண்கள். அதிர்ஷ்ட திசை கிழக்கு.

    ரிஷபம்

    ரிஷபம்

    ராசிக்கு எட்டாம் இடத்தில் சனியோடு இணைந்து சந்திரன் அமைந்துள்ளார். இன்று எதிர்பாராத செலவு ஏற்படும். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. உங்களின் தேவைகள் நிறைவேறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை. எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண்கள்: 1,3, அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், ஆரஞ்சு

    மிதுனம்

    மிதுனம்

    ராசிக்கு ஏழாவது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார் வீட்டில் துணையுடன் கவனமாக பேசவும். கிண்டலடித்து வம்பை வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம். இன்று இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். தம்பதிகளிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. நிலுவையில் இருந்த பணவரவுகள் வசூலாகும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவருவீர்கள்.

    அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள் 2, 5, 9

    கடகம்

    கடகம்

    இன்று ராசிநாதன் சந்திரன் ராசிக்கு 6வது வீட்டில் சனியோடு மறைந்து அமர்ந்துள்ளார். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். எதிர்பார்த்த பண வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள்.

    கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

    வாகனங்கள் மூலம் திடீர் செலவு உண்டாகும். அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள் 9.

    சிம்மம்

    சிம்மம்

    சந்திரன் ராசிக்கு 5வது இடத்தில் அமர்ந்துள்ளார். குழந்தைகள் மீது கவனம் தேவை. இன்று ராசிநாதன் சூரியன் சஞ்சாரத்தின் மூலம் நீங்கள் பிரச்சனையை கண்டு பயப்படமாட்டீர்கள். நினைத்த காரியம் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம், சிவப்பு, அதிர்ஷ்ட எண் 4.

    கன்னி

    கன்னி

    சந்திரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்துள்ளார் தாயார் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடையும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5.

    துலாம்

    துலாம்

    மனோகாரகன் சந்திரன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சனியோடு அமர்ந்துள்ளார். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். இன்று சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்குகள் முடிவுக்கு வரும்.கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண் 2.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாவது இடத்தில் அமர்ந்து உள்ளதால் பணவரவு அதிகரிக்கும்.

    இன்று எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். திடீர் கோபம் ஏற்படும். எதையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.

    உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பது அவசியம். அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை, அதிர்ஷ்ட எண் 3.

    தனுசு

    தனுசு

    சந்திரன் உங்கள் ராசியில் அமர்ந்துள்ளதால் மனக்குழப்பம் ஏற்படும். பூமி விருத்திக்கான பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உடைமைகள் மீது கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மன வருத்தம் ஏற்படும்.

    இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் நீலம், அதிர்ஷ்ட எண்கள் 6.

    மகரம்

    மகரம்

    ராசிக்கு 12வது வீட்டில் சந்திரன் மறைந்துள்ளதால் திடீர் பயணம் ஏற்படும். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராசியில் செவ்வாய் கேது உடன் இணைந்துள்ளார். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    அதிர்ஷ்ட திசை தெற்கு. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1.

    கும்பம்

    கும்பம்

    ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். கடல் மார்க்க பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும்.தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி ஏற்படும். இன்று நீங்கள் உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் அடுத்தவர் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். அதிர்ஷ்ட திசை மேற்கு. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், அதிர்ஷ்ட எண் 1.

    மீனம்

    மீனம்

    சந்திரன் ராசிக்கு10வது வீட்டில் கர்ம ஸ்தானத்தில் சனியோடு இணைந்துள்ளார். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். இன்று தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

    அதிர்ஷ்ட திசை வடக்கு. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள் 3.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+