சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது - பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை காலத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டது.
சபரிமலை: சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை காலத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் இன்று காலை 6 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக தங்க அங்கிக்கு பக்தர்கள் கொடுக்கப்படும் வரவேற்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் மண்டல பூஜைக்காக கடந்த 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்தார்.
கடந்த 16ம் தேதி கார்த்திகை மாதத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. தினசரியும் 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மண்டல பூஜை தினத்தில் 6000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஐயப்பன் கோவில் மண்டல பூஜை
மண்டல பூஜை தினத்தில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். 453 பவுன் எடை கொண்ட அந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு மட்டும் அந்த நகைகள் அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துவரப்படும்.

ஊர்வலம் புறப்பட்டது
பந்தளம் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி பந்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து இன்று காலை ஊர்வலமாகப் புறப்பட்டது. இன்று மாலையில் ஓமல்லூர் ரத்தகண்ட சுவாமி கோவிலை வந்தடைகிறது. பின்பு அங்கு தங்கிவிட்டு 23ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்படுகிறது.

சன்னிதானத்தில் தரிசனம்
25ஆம்தேதி தங்க அங்கி ஊர்வலம் பம்பா கணபதி கோவிலை வந்தடையும். அங்கு பக்தர்கள் தரிசனத்திற்காக தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து சன்னிதானத்திற்கு புறப்படும். மாலை 5 மணிக்கு சரங்குத்திக்கு வந்தடையும் தங்க அங்கிக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்படும்.

தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்
சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும். தங்க அங்கி அணிந்து ஜொலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும். 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. தங்க அங்கி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தங்கி அங்கி கொண்டு செல்லப்படும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications