சனி பெயர்ச்சி 2023: சனி வக்ரமடையும் 140 நாட்கள்..இந்த 6 ராசிக்காரர்களுக்கு மன நிம்மதி..சந்தோஷம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் இந்த மாதம் 17ஆம் தேதி முதல் வக்ரகதியில் பயணம் செய்யப்போகிறார். சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிப்பார். பின்னோக்கி நகர்ந்து சில நாட்கள் மகர ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் மாதம் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த கால கட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். வீடு மாற வாய்ப்பு உள்ளது. புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். கோபப்பட்டு வார்த்தைகளை கொட்டி விட வேண்டாம். பொறுமையும் நிதானமும் தேவைப்படும். மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

Sani Payarchi Palan 2023: Sani Vakara Peyarchi - Saturn Retrograde Effects on 12 zodiac Signs

ரிஷபம்: சனி பகவான் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வக்ர மடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சோம்பேறித்தனத்தை விடுங்கள். உடன் பிறந்தவர்களால் மன வருத்தங்கள் எற்படும். தடைகள் நிவர்த்தியாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் எற்படலாம். உயர்கல்வி பயில்பவர்களுக்கு சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள்.

மிதுனம்: உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சுபகாரியங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். நண்பர்களால் நன்மைகள் அதிகம் நடக்கும். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். நோய் பாதிப்புகளால் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். பற்கள் பாதிக்கப்பட்டு பிடுங்க வேண்டியிருக்கலாம். விஐபிக்கள், அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் வெற்றி நடை போடுங்கள். ஒருமுறை குச்சனூர் சென்று சனிபகவானை தரிசனம் செய்து வாருங்கள்.

கடகம்: அஷ்டமத்து சனியால் அவதிப்படும் நீங்கள் சனி வக்ரமடையும் இந்த காலத்தில் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுங்கள். சனியின் சஞ்சாரத்தினால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய செயல்களை செய்யும் போது எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். காதல் விவகாரங்கள் கை கூடி வரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள்

Sani Payarchi Palan 2023: Sani Vakara Peyarchi - Saturn Retrograde Effects on 12 zodiac Signs

சிம்மம்: கண்ட சனி காலம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வக்ர சனி காலத்தில் நிம்மதியாக இருங்கள். உடம்பிலும் மனதிலும் தெம்பும் உற்சாகம் சுறுசுறுப்பு அதிகரிக்கும். காதல் கைகூடும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு பொன், பொருள், ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சுப விரையம் ஏற்படும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். ஆலய தரிசனம் மனதிற்கு அமைதியைத் தரும்.

கன்னி: வக்ர சனி காலத்தில் சொந்த வீடு, வண்டி வாகனங்கள் வாங்கலாம். சக ஊழியர்களால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் சில வில்லங்கம் வரும் கவனம் தேவை. படிப்புக்காக குழந்தைகளை விட்டு பிரியும் காலம் இது. குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும். சனிபகவானை சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வணங்கலாம்.

துலாம்: வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். உறவினர்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உல்லாச பயணங்களினால் மனதில் நிம்மதி அதிகரிக்கும்.

Sani Payarchi Palan 2023: Sani Vakara Peyarchi - Saturn Retrograde Effects on 12 zodiac Signs

விருச்சிகம்: சனி வக்ரமடையும் இந்த நான்கு மாத காலத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு படிப்பு, வேலைக்காக வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் அமையும். பாஸ்போர்ட் , விசா கிடைக்கும். காதல் விவகாரங்களால் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.

தனுசு: எதிர்பாராத பணவரவு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் கொடுத்து பணத்தை தராமல் இழுத்தடித்தவர்கள் பணத்தை தேடி வந்து கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. உடல் உழைப்பு கூடும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. காதலிப்பவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்ட காலம்தான். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்: ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. இந்த நான்கு மாத காலத்தில் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். அடுத்தவர்களின் குடும்ப விசயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் குடும்ப விசயங்களைப் பற்றி அடுத்தவர்களிடம் கூற வேண்டாம். வேலைகளில் இழுபறி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும் அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம்.

Sani Payarchi Palan 2023: Sani Vakara Peyarchi - Saturn Retrograde Effects on 12 zodiac Signs

கும்பம்: ஜென்ம சனியால் பல சோதனைகளை சந்தித்து வரும் உங்களுக்கு கொஞ்சம் ரிலீஃப் ஆக இருக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் இதுநாள் வரை இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்கள் ஆடைகள், பொன் நகைகள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு நல்ல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு அமையும். பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடி வரும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்வீர்கள்

மீனம்: சனிபகவான் உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். ஏழரை சனியில் விரைய சனி நடைபெறுகிறது. சனி வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பிறக்கும். அரசு வழியில் நன்மைகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். விரைய செலவுகளை தவிர்த்து சுப செலவுகளாக மாற்றுங்கள். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+