சனி பெயர்ச்சி பலன்.. 2024ல் தொழில் வியாபாரத்தில் கொட்டப்போகும் பணமழை.. இனி ஜாக்பாட் தான்!
சென்னை:சனி பகவான் தனது வீடான கும்ப ராசியிலும் ஆட்சி பெற்று அமர்வதால் 2024ஆம் ஆண்டில் பொதுவாகவே பலருக்கும் தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும். ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடும் தனுசு ராசிக்காரர்கள் புதிய தொழில் வியாபாரம் தொடங்கலாமா? லாபம் கிடைக்குமா என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி: உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் அதிபதியான சனிபகவான் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் அதிகரிக்கும். ஏழரை சனி காலம் முடிவுக்கு வந்து விட்டதல் உங்களின் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். சிறு பயணங்களினால் பலன் கிடைக்கும்.

சுப செய்தி தேடி வரும்: தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் உங்களை தேடி வரப்போகிறது. இனி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். லாபம் பல மடங்காக பெருகும். புதிய சொத்துக்கள் சேரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள்.
புதிய வேலை கிடைக்கும்: வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் அதிகப்படியான லாபமும் கிடைக்கும்.
பண வருமானம்: உங்களுக்கு பணவருமானம் அதிகரிக்கப்போகிறது. எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் கிடைக்கும். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, நல்ல லாபகரமாக அமையும். வரும் பணத்தை முறையாக சேமித்தாலே கடனின்றி வாழலாம்.
திருமணம்: சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் சேமித்து வையுங்கள். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். காதல் இனிக்கும் சிலருக்கு கல்யாணத்தில் முடியும். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும். பிள்ளைபாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக செய்வீர்கள்.
பொற்காலம்: எங்களுக்கு விடிவு காலமே இல்லையே, கஷ்டத்திற்கு விமோசனமே கிடையாதா என்று கடந்த ஏழரை ஆண்டு காலம் தனுசு ராசிக்காரர்களை புலம்ப வைத்து விட்டார் சனிபகவான். அவர் வேலை முடிந்து விட்டது. உங்களுக்கு படிப்பினைகளை கொடுத்து விட்டு கிளம்பிட்டார். இத்தனைய ஆண்டுகாலமாக சோதனைகள் மூலம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். சிலர் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்திருப்பீர்கள். உங்கள் கஷ்டங்கள் நீங்கி விட்டாலும் நீங்கள் படித்த பாடங்களைக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.
கும்ப சனியால் குதூகலம்: சனிபகவான் கும்ப ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும். உங்கள் கஷ்டங்கள் கவலைகள் நீங்கும் காலம் வந்து விட்டது. அனைத்து துயரங்களும் கஷ்டங்களும் விலகத் தொடங்கி விடும்.
தொழில் வியாபாரம்: தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. அவசரப்படாதீர்கள். சொந்த ஜாதகத்தில் உங்களின் தசாபுத்தி எப்படியிருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ற தொழிலை தொடங்குங்கள்.
உடல் ஆரோக்கியம்: இறைவன் அருள் உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறும். புது வேலைக்கு மாறலாம். உடல் புத்துணர்ச்சி அடையும். வரும் பணத்தை முறையாக சேமித்தாலே கடனின்றி வாழலாம். யாருக்கும் பணம் கடன் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும். இல்லாவிட்டால் கொடுத்த பணம் திரும்ப வராது. யாருக்கும் கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்துங்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications