சனி பெயர்ச்சி பலன்.. 2024ல் சொந்த தொழில் ஆரம்பிக்கலாமா? பணம் விசயத்தில் கடக ராசிக்காரர்கள் கவனம்
சென்னை: கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் களத்திர ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், 2024ஆம் ஆண்டு கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் பார்வை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் புதிய தொழில் தொடங்கலாம். தொழிலில் லாபம் அதிகரிக்கும் பொருளாதார நிலை உயரும்.
கடகம்: 2024 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு ஆண்டு தொட்டது துலங்கும் ஆண்டாக அமையப்போகிறது. அஷ்டம சனியாக இருந்தாலும் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. பொன்னான ஆண்டாகவும் தொழிலில் லாபங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாகவும் அமையப்போகிறது. சனி பகவான் ஆதிக்கம் நிறைந்த இந்த ஆண்டில் சுரங்கத்துறை, எண்ணெய் நிறுவனங்கள் பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு அற்புதங்களை தரப்போகிறது. வியாபாரம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரப்போகிறது.

விபரீத ராஜயோகம்: எட்டாம் அதிபதி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது அற்புதம். விபரீத ராஜயோகம். கடந்த காலங்களில் கஷ்டப்பட்டு வந்த உங்களுக்கு இந்த ஆண்டு முதல் தொழில் லாபம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. அஷ்டம சனியாக இருந்த போதிலும் தனம் மற்றும் ஜீவன ஸ்தானத்தில் சனியின் பார்வை விழுவதன் காரணமாக உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
எச்சரிக்கை தேவை: உங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள இது ஒரு சிறந்த காலக் கட்டம் ஆகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் சனிபகவான் சகாயம் செய்யப்போகிறார். அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனிபகவான் ராசிக்கு 10ஆம் இடத்தில் பார்வை படுவதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவார்கள். சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும்.
பண விசயத்தில் கவனம்: கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். எச்சரிக்கையாக கையாளவும் வாக்குறுதி கொடுத்து மாட்டிக்காதீங்க. பணம் ஜாமின் கையெழுத்து போடவே போடாதீங்க. சனிபகவான் ஆசையை தூண்டுவார். சனியின் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையை தூண்டுவார். இந்த கால கட்டத்தில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
பங்குச்சந்தை முதலீடுகள்: சனிபகவானால் எண்ணெய் மற்றும் சுரங்க தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். ஊக வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், பங்கு வர்த்தகம் செய்பவர்கள் சிறந்த முறையில் தொழில் லாபம் காண்பார்கள். சிறு முதலீட்டாளர்களுக்கு தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். புரோக்கரேஜ் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டிய காலக் கட்டம் இது.
முதலீடுகளில் ஜாக்கிரதை: கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி காலத்தில் மனதில் சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்படும் என்றாலும் சவால்களை சந்தித்து சாதிக்க வைப்பார். உங்களுடைய சுய ஜாதகத்தில் சனிபகவான் யோகத்தை தரக்கூடிய நிலையில் இருந்தால் சனிபகவான் உங்களுக்கு நிறைய நன்மைகளை தருவார். அதே நேரம் சனியின் பயணம் சரியில்லாத நிலையில் இருந்தால் பணம் கொடுக்கல் வாங்கல், பிசினஸ் முதலீடுகளில் ஜாக்கிரதையாக இருக்கவும்.












Click it and Unblock the Notifications