சனி பெயர்ச்சி பலன்.. தலைமேல் அமர்ந்த ஜென்ம சனி.. கும்ப ராசிக்காரர்கள் பிசினஸ் ஆரம்பிக்கலாமா?
சென்னை: கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி காலமாகும். ராசி நாதன் சனி பகவான் 2025ஆம் ஆண்டு வரைக்கும் உங்கள் ராசியில் அமர்ந்து பயணம் செய்யப்போவதால் இந்த கால கட்டத்தில் பிசினஸ் ஆரம்பிக்கலாமா? தொழிலில் அதிக முதலீடு செய்யலாமா? 2024ஆம் ஆண்டு பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
கும்பம்: சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசியில் பயணம் செய்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி அவரே விரைய ஸ்தான அதிபதி. உங்கள் ராசி அதிபதி உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்வதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் நடைபெறும். ஜென்ம சனி என்றாலே பாதிப்பு வருமே என்று கும்ப ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம். சச மகா யோகம் கைகூடி வரப்போகிறது.

சனி பார்வை: சனிபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து கொண்டு ராசிக்கு மூன்றாம் இடம், ஏழாம் இடம், பத்தாம் இடத்தைபார்வையிடுவதால் உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைபட்டு வந்த திருமண சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் முதலீடுகளில் லாபம் வரும்.
அகலக்கால் வேண்டாம்: மனமும் உடலும் கொஞ்சம் ஒத்துழைக்காது. அவ்வப்போது குழப்பம் அதிகரிக்கும் குழப்பத்தோடு செய்யும் காரியங்கள் எல்லாம் சொதப்பலாகத்தானே முடியும். இதனால் குடும்பத்திலும் நிம்மதி இழப்பு,தொழில் செய்யுமிடமும் கவனம் செலுத்த முடியாமல் நஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது எனவே பிசினஸ் செய்பவர்கள் அதிக முதலீடுகள் செய்து அவதிப்பட வேண்டாம்.
வருமானம் எப்படி: உங்கள் ராசியிலே சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து வேலை செய்யுங்கள். ஒரு சிலருக்கு அரசு வேலையும் கிடைக்கும். சம்பள உயர்வு சிலருக்கு சாதகமாக இல்லை என்றாலும் தொடர்ந்து வேலை இருக்கும். சிறு தொழில்கள் சிக்கலின்றி நடைபெறும். பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான் இருக்கும் சமாளிக்கலாம்.
கடன் பிரச்சினை: பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டி வரும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுத்தல் கூடாது. எதிர்பார்த்த பணம், பொருள் வருவதில் சற்று கால தாமதமாகும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. சிறு பிரச்சினைகளுக்கு கூட மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
வீண் செலவுகள்: தொழில் வியாபாரத்தில் சம்பாதிக்கும் பணமெல்லாம் செலவாகிவிடுகிறதே என்று கவலைப்பட வேண்டாம். 2024ஆம் ஆண்டு முதல் நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடும் காலம் வந்து விட்டது. விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். கும்ப ராசிக்காரர்கள் ஜென்ம சனியை சிக்கலின்றி கடந்து விடலாம்.












Click it and Unblock the Notifications