Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன்.. நாக்கில் சனி.. வாக்கு கொடுப்பதில் கவனம்.. 2024 மகரத்திற்கு நிதி நிலைமை எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பகவான் தனது வீடான கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்வதால் 2024ஆம் ஆண்டில் பொதுவாகவே பலருக்கும் தொழில் வியாபாரம் பலருக்கும் அற்புதமாக இருக்கும். ஏழரை சனியின் பிடியில் கடைசி கட்டத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் 2024ஆம் ஆண்டில் தொழில், வியாபாரம் தொடங்கலாமா? பொருளாதார நிலை எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகரம்: ராசி நாதன் சனி பகவான் மகர ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானத்தில் 2024ஆம் ஆண்டு முழுவதும் பயணம் செய்கிறார். வாக்கு ஸ்தானத்தில் சனி பயணம் செய்வதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நமக்கு எதிரி நம் வாய்தான். நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள், பிசினஸ் செய்பவர்கள் கவனமாகவும் நிதானமாகவும் பேச வேண்டும்.

Sani Payarchi Palan: Puthandu rasi palan 2024 in tamil Finance Horoscope for Makaram Rasi

குடும்ப சனி: தன ஸ்தான சனி பண வருமானத்தை தருவார். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். தொழில், வியாபாரம் விசயமாக அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.

நிதி நிலைமை எப்படி: 2024ஆம் ஆண்டில் உங்களின் நிதி நிலைமை நன்றாகவே இருக்கும். இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் நடக்கும். புதுவிதமான வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும். தேவையற்ற வீண் செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

நன்மை தரும் ஆண்டு: சுய தொழில் செய்பவர்களுக்கு நன்மை ஏற்படும். அதே நேரத்தில் பிசினஸ் செய்பவர்கள் அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வங்கி கடன் விஷயத்தில் அதிக கவனம் தேவை. 2ம் இடம் சனி என்பதால் எப்பொழுதும் பற்றாக்குறையான சூழ்நிலை நிலவி வரும். அதிக உழைப்பு குறைந்த வருமானம் என்ற அளவில் சனியின் தன்மை இருக்கும்.

பண வருமானம்: தொழில் செய்பவர்களுக்கு நல்ல வேலையாட்களுக்காகப் போராடிய உங்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்கள். இதுவரை இருந்து வந்த அலைச்சல்கள் குறைந்து சற்று நிம்மதியான சூழ்நிலை உருவாகும். இதுவரை மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபடுவீர்கள்.

அதிக கடன் ஆபத்து: சனி பகவான் 7ம் பார்வையாக உங்களது ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. பிசினஸ் செய்வதற்காக கடன் வாங்குவதில் கவனம் தேவை. 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ம் இடத்தை பார்ப்பது ஒரளவு அனுகூலமான விஷயம். எதிர்பாராத சொத்துகள் வந்து சேரும். மதிப்பும் மரியாதையும் கூடும்.

வாக்கில் கவனம்: நாக்கில் சனி அமர்ந்துள்ளார். வாக்கு குடுப்பதில் கவனம் தேவை. இல்லாவிட்டால் மாட்டிக்கொள்வீர்கள். பொறுப்புகளில் தடைகள் ஏற்படும். குடும்பத்தில் கவனமாக இருங்க. வருமானத்தை வெளியில் சொல்லாதீர்கள். பேச்சில் கவனம் தேவை. சனி பகவான் ஒன்று கொடுத்தால் ஒன்றை தடுப்பார் எனவே குடும்பம், வருமானம் பற்றி ரகசியம் கடைபிடிப்பது அவசியம்.
கஷ்டங்கள் கவலைகள் நீங்கும்.

2024 அற்புதம்: ஏழரை சனி முடிய இனி இரண்டரை ஆண்டு காலம் இருந்தாலும் உங்க லக்னத்திற்கு பாத சனி, குடும்ப சனியாக அமைகிறார். கடன்கள் குறையும். குடும்ப பிரச்சினைகள் தீரும். எங்கும் எதற்காகவும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பண விசயத்தில் கவனமாக இருங்கள் இல்லாவிட்டால் கடனாளியாகிவிடுவீர்கள். இனி வரும் வருமானம் எல்லாமே சுப செலவுகளாக இருக்கும். கும்ப ராசியில் குடும்ப ஸ்தானத்தில் தனித்த சனியாக பயணம் செய்வதால் உங்களுக்கு 2024ஆம் ஆண்டு வருமானம் அதிகரிக்கும் அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+