சனி பெயர்ச்சி பலன்.. 2024ல் பிசினஸ் சூப்பர்.. சனியால் பெட்டி நிறைய பணத்தை அள்ளப்போவது யார்?
சென்னை: கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனி பகவான் அமர்ந்து இருக்கும் இந்த காலத்தில் பல ராசிக்காரர்களை புதிய தொழிலை தொடங்க வைப்பார். தொழிலில் நல்ல லாபத்தை தருவார். வெளிநாடு சென்று பிசினஸ் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தரப்போகிறார். 2024ஆம் ஆண்டில் பிசினஸ், தொழிலில் கொடி கட்டி பறக்கப்போவது யார் என்று பார்க்கலாம்.
மேஷம்: 2024ஆம் ஆண்டில் நமக்கு தொழிலில் லாபம் வருமா? வேலையை விட்டு விட்டு புது பிசினஸ் ஆரம்பிகலாமா என்று பலரும் யோசித்து கொண்டு இருக்கிறீர்கள். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு தொட்டது துலங்கும் ஆண்டாக அமையப்போகிறது. நீங்கள் செய்யும் பிசினஸ் உங்களுக்கு நல்ல லாபத்தை தரப்போகிறது. பொன்னான ஆண்டாகவும் தொழிலில் லாபங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக அமையப்போகிறது. எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ், கடல் கடந்து சென்று பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு அற்புதங்களை தரப்போகிறது.

கிரகங்களால் யோகம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு கேது சஞ்சாரத்தை வைத்து பார்த்தால் ராசியில் குரு அமர்ந்திருப்பது யோகம். மே மாதம் மூலம் தன ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார் குரு பகவான். சனி பகவான் தனது சொந்த வீட்டில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் ராகு 12ஆம் வீட்டிலும் கேது ஆறாம் வீட்டிலும் சஞ்சரிப்பது சிறப்பு அம்சம். உங்களின் தகுதிக்கு ஏற்ற நல்ல தொழில் அமையும். நீங்க தொடங்கும் தொழிலில் வெற்றிகரமானதாக லாபத்தை கொடுக்கக் கூடியதாக அமையும்.
சொந்த தொழில் யோகம்: சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஆரம்பிக்கலாம். எதையும் சமாளித்து தொழிலில் முன்னேற்றம் அடைய சாதகமான நேரம் இது. சனியும், குருவும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. தன்னம்பிக்கை பிறந்து, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். சொந்த வீடு, வாகனங்கள், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
ரியல் எஸ்டேட் தொழில்: தொழில் கிரகமான சனிபகவானால் உங்களுக்கு நல்ல தொழில் அமையும். வியாபாரம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். தொட்டது துலங்கும் ஆண்டு. நல்ல வேலை அதிக சம்பளத்துடன் கிடைக்கும். மன நிம்மதியை தரும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைகிறது. தடைப்பட்ட காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான முன்னேற்றத்தை தரும். காரணம் மேஷம் ராசியை சனி பார்வையிடுவது சிறப்பு. தேவையில்லாமல் பட்ட கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
பொற்கால ஆண்டு: 2024ஆம் ஆண்டில் சனிபகவான் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகளை உருவாக்கித்தருவார். காரணம் அவர்தான் உங்க ராசிக்கு பத்து மற்றும் பதினொன்றாம் வீட்டின் அதிபதி. உங்களுடைய நிதி நிலைமை புத்தாண்டில் ரொம்ப அற்புதமாக இருக்கும் அதே நேரம் கிரகங்களின் பெயர்ச்சி பார்த்து முதலீடுகள் செய்வது நல்லது இல்லாவிட்டால் அது சின்ன சறுக்கலை ஏற்படுத்திவிடும்.
லாபம் தரும் சனி பகவான்: லாப வீட்டில் உள்ள சனிபகவான் 5ஆம் வீட்டினையும் எட்டாம் வீட்டினையும் பார்க்கிறார். பங்குதாரர்களால் லாபம் கிடைக்கும். சனி உங்களுடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் உங்களுக்கு இந்த ஆண்டு அற்புதமான பலன்களை தொழில் மூலம் தரப்போகிறார் சனிபகவான். ஆண்டு முழுக்க உங்களுக்கு லாபம் கொட்டப்போகிறது. ஏற்றுமதி, இறக்குமதி மூலமும் வருமானம் கிடைக்கும்.
தொழிலதிபர் ஆகும் யோகம்: சனி லாப வீட்டில் அமைந்து தனது பார்வையால் முக்கியமான இடங்களை பார்ப்பதால் பெண்களுக்கும் பிசினஸ் செய்யும் யோகம் வரும் பெண் தொழில் முனைவோர்களை சனிபகவான் உருவாக்குவார். ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்கும் எண்ணத்தை ஏற்படுத்துவார். மொத்தத்தில் 2024 ஆம் ஆண்டு மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில் தொடங்கி லாபம் கிடைக்கப் போகும் ஆண்டாக அமைந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications