சனி பெயர்ச்சி பலன்.. 2024ல் பொன்னான ஆண்டு.. கோடி கோடியாக அள்ளித்தரப்போகும் சனி பகவான்
சென்னை: 2024ஆம் ஆண்டில் சொந்த தொழில், வியாபாரம் செய்ய நினைக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கோடி கோடியாக அள்ளித்தரப்போகிறார். 5 ஆண்டுகாலம் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முதல் விடிவு காலம் பிறக்கப்போகிறது.
மிதுனம்: அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் சனி பலவிதமான யோகங்களை தரப்போகிறார். காரணம் உங்க லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுகிறது. சனி பகவான் பார்வை ஆறாம் வீடான விருச்சிகம் ராசியின் மீது விழுகிறது. கடன் உங்க கழுத்தை இறுக்கியது. இனி சனிபகவான் உங்க கடன்களையும் நோய்களையும் தீர்ப்பார்.

புதுமையான ஆண்டு: 2024ஆம் ஆண்டில் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். சனிபகவான் கொடுத்த சோதனைகளை தாங்கி புடம் போட்ட தங்கமாக மாறியிருப்பீர்கள். 2024ஆம் ஆண்டு முதல் உங்களின் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. தொட்டதெல்லாம் நஷ்டம், தொழில் வியாபாரத்தில் பிரச்சினை அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி..காணும் பக்கமெல்லாம் கடன் என தவித்து வந்த உங்களுக்கு இனி உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கி கடன் பிரச்சினையும் நீங்கப்போகிறது.
செலவுகள் கட்டுப்படும்: வீண் விரைய செலவுகள் கட்டுப்படும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். பழைய கடன்களை படிப்படியாக அடைப்பீர்கள். எதையை பறிகொடுத்தது போல இருந்த உங்களுக்கு இனி பார்க்கும் இடமெங்கும் பரிசுகள் தேடி வரப்போகிறது. உங்களின் திறமை வெளிப்படும். உடலில் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.
கடன் நீங்கும்: சனிபகவான் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். நல்ல வேலை கிடைக்கும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும். பண வரவு வந்தாலும் சிக்கனமாக செலவு செய்தால் மட்டுமே கடன் பிரச்சினையை தீர்க்கமுடியும். செய்யும் தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும்.
வளம் நிறைந்த ஆண்டு: பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. அடுத்தவர்களிடம் சம்பளத்திற்காக வேலை செய்தவர்கள் இனி முதலாளிகளாக மாறப்போகிறார்கள். யாருக்காகவும் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டு தவிக்க வேண்டாம். நிதிநெருக்கடிகள் நீங்கி நிம்மதி அதிகரிக்கும் 2024ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.












Click it and Unblock the Notifications