சனி பெயர்ச்சி பலன்.. சச மகா யோகம் தரும் சனி.. 2024ல் தொழில் வியாபாரத்தில் ஓஹோன்னு லாபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்மம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு பிசினஸ் நல்ல லாபத்தை தரப்போகிறது. உங்களுடைய வாழ்க்கையில் ராஜயோகத்தை தரப்போகிறது. கண்டச்சனியாக இருந்தாலும் சனி பகவானின் நேரடி பார்வையால் சச யோகம் கை கூடி வரப்போகிறது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டு நிதி நிலைமை எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு முழுவதும் கண்டச்சனி காலம் என்றாலும் களத்திர ஸ்தான அதிபதி சனி அவருடைய வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது உங்களுக்கு யோகமான கால கட்டம். உங்கள் ராசிக்கு சனியின் பார்வை நேரடியாக கிடைப்பதால் சச மகா யோகம் கைகூடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் நீங்கள் தொட்டது எல்லாம் பொன்னாகும். புதிய வியாபாரம் கூட தொடங்கலாம்.

Sani Payarchi Palan: Puthandu rasi palan 2024 in tamil Finance Horoscope for Simmam Rasi

பண வருமானம் அற்புதம்: ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை குடும்ப சூழல் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். பணவரவு அற்புதமாக இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். வளமான எதிர்காலம் உங்களுக்கு தென்படும். ஏழாம் வீட்டில் சனி அமர்ந்துள்ளது அற்புதம். மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொட்டது வெற்றியடையும், சவால்களை சந்தித்து வெற்றியடைவீர்கள்.

ஏற்றுமதி இறக்குமதி: ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் சொத்துக்கள் சேர்க்கும் காலங்களாக இது உள்ளது. திருமண முயற்சிகள் கை கூடி வரும். வேலையில் மாற்றங்கள் பதவி உயர்வு வருமானம் அதிகரிக்கும். வெளிநாடுக்கு சென்று தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும்.

எச்சரிக்கை தேவை: ஜூலை மாதத்திற்குப் பிறகு சில மாதங்களுக்கு பண நெருக்கடி வரும். தொழிலில் பெரிதாக எதுவும் முதலீடு செய்யாதீர்கள் லாபம் வராது அதுவே மன உளைச்சலை ஏற்படுத்தும். பங்குச்சந்தையை பற்றி மனதளவில் நினைத்து கூட பார்க்காதீர்கள்.

வியாபாரத்தில் லாபம்: செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு செய்யும் தொழிலில் நிறைய லாபங்கள் கிடைக்கும். வெளிநாட்டில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வர்களுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும். தைரியமாக பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யலாம். மொத்தத்தில் 2024ஆம் ஆண்டு வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பீர்கள். உங்களின் சுய ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கின்றன. தசாபுத்தி எப்படி இருக்கிறது என்று பார்த்து பணத்தை முதலீடு செய்து லாபத்தை அள்ளுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+