சனி பெயர்ச்சி பலன்.. தொழில் வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும்.. 2024ல் யாருக்கு லாபம்
சென்னை: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால் 2024ஆம் ஆண்டு முழுவதும் வியாபாரத்தில் வெற்றிகள் தேடி வரும். வருமானம் பல வழிகளில் இருந்தும் வரப்போகிறது. துலாம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டில் புது தொழில் தொடங்கலாமா? என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
துலாம் ராசி: 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் துலாம் ராசிக்காரர்களுக்கு குதூகலத்தை தரப்போகிறார். பூர்வ புண்ணிய சனியால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும், குதூகலம் கூடும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது. அதிர்ஷ்ட சனியாக அமையப்போகிறது. சனி பகவான் ஆயுள்காரகன். உங்கள் ராசியில் உச்சம் பெறக்கூடியவர். உங்களுக்கு நன்மையே செய்யக்கூடியவர். வேலையில் பதவியில் முன்னேற்றம் புரமோசன் ஏற்படும்.

வெற்றி மீது வெற்றி: சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் உங்கள் அறிவும் திறமையும் வளர்ச்சியடையும். சனிபகவானின் பார்வை கும்பம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. பண வரவு அதிகரிக்கும். வீடு மனை வாங்குவீர்கள். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். உங்களுக்கு அதிக நன்மைகள் நடக்கப்போகிறது.
வெற்றிகள் தேடி வரும்: வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் நம்பினால் வெற்றி பெற முடியும். பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு செய்யக் கூடாது. ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும்.
முதலீடுகளில் கவனம்: உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும் என்பதால் கவனம் தேவை. சனிபகவான் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்திடுங்கள்.
உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். அதை சேமியுங்கள். சரியான கால கட்டம் வரும் போது பெரிய அளவில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு தொழில் வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் ஆண்டாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications