Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன்.. 2024ல் தொழில் வியாபாரம்.. விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதனையா? சறுக்கலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பகவான் தனது வீடான கும்ப ராசியில் 2024ஆம் ஆண்டு முழுவதும் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் பொதுவாகவே தொழில் வியாபாரம் பலருக்கும் அற்புதமாக இருக்கும். விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து அர்த்தாஷ்டம சனியாக இருப்பதால் இந்த ஆண்டு தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்? சாதிக்கப்போகிறீர்களா? சறுக்கலை சந்திப்பீர்களா என்று பார்க்கலாம்.

விருச்சிகம்: 2024ஆம் ஆண்டு முழுவதும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 4ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள் சிறப்பாக அமையும், பெண் தொழில் முனைவோர்கள் புதிய பிசினஸ் ஆரம்பிக்கலாம். அருமையான ஆண்டு. சனியின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. பிசினஸ் செய்வதற்கு கடன் உதவி கிடைக்கும். காரணம் லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில் பார்ட்னர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். சனியின் பார்வை உங்க தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் புதிய தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படும்.

Sani Payarchi Palan: Puthandu rasi palan 2024 in tamil Finance Horoscope for Viruchigam Rasi

தொழில் தொடங்கலாம்: விருச்சிக ராசிக்காரர்கள் 2024ஆம் ஆண்டில் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம். தொழிலதிபர்களுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். நிறைய பணம் வரும் அதை நல்ல முறையில் முதலீடு செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்கவும். தலைக்கணம் பிடித்து ஆடக்கூடாது சனி தலையில் தட்டி வைப்பார். நஷ்டத்தால் மூடிய கம்பெனியை மறுபடியும் திறக்கலாம்.

அகலக்கால் வேண்டாம்: அர்த்தாஷ்டம சனி என்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் பெரிய அளவில் அகலக்கால் வைக்க வேண்டாம். தேவையில்லாத முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும்.

பொருளாதார வளர்ச்சி: பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது. சிறிது சிறிதாக வளர்ச்சி அடையலாம். ரொம்ப கடன் வாங்கி முதலீடு பண்ணாதீங்க. விருச்சிகத்திற்கு விடியலைத் தரும். அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. இந்த வார்த்தையை படிக்கும் போது மனதிற்கு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும். இன்னும் 10 ஆண்டுகளுக்கு உங்களுக்கு தொழில் வளர்ச்சி அருமையாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கிறது.

பொற்காலம் பிறக்கிறது: தொழில் செய்வதற்கு வங்கிக் கடன் உங்களைத் தேடி வரும். பெண்களும் கூட புதிய தொழில் தொடங்குவீர்கள். பொற்காலத்தின் கதவுகள் திறக்கப் போகிறது. குருவின் பார்வையால் பண வரவும் சனியால் தொழிலில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சாதனை புரியும் ஆண்டாக 2024 ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+