Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன்கள் 2020: எல்லோருக்குமே ஏழரையா இருக்கே... தப்பிப்பது எப்படி - பரிகாரங்கள்

ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, குழந்தைகள் என எல்லோருக்கும் ஏழரை சனி காலமாக இருந்தால் அந்த வீடு போர்க்களமாகத்தான் இருக்கும். ஏழரை இரண்டு பேருக்கும் ஒருவருக்கு அர்த்தாஷ்டம சனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து தன்னுடைய வீடான மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். இந்த சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழ உள்ளது. இந்த இடப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி, கும்ப ராசிக்கு விரைய சனியாக உள்ளது. ஒரு குடும்பத்தில் மகரம் கும்பம் ராசியில் பிறந்த கணவன் மனைவிக்கும், தனுசு ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும் ஏழரை சனி காலமாகும். எல்லோருக்குமே ஏழரை சனி என்றால் என்ன செய்வது பரிகாரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்பவர்களுக்குதான் இந்த பதிவு.

ஜாதகரின் ஜன்ம ராசிக்கு பன்னிரெண்டாவது ராசி, ஜன்ம ராசி, ஜன்மராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது.சனிபகவான் நீதிமான் தவறு செய்தவர்களைத்தான் தண்டிப்பார். நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் எனவே தவறு செய்யாதவர்கள் நல்லது மட்டுமே நினைப்பவர்கள் பயப்பட வேண்டாம்.

சனிபகவான் பார்வை மகரம் ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் தனுசு, மகரம், கும்பம், ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த படிப்பினையை கற்றுத்தரப்போகிறார் சனி பகவான். ஏழரை சனியின் பிடியில் இருக்கும் இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் பிறந்திருந்தால் என்னென்ன பலன்கள் பாதிப்புகள் என்று பார்க்கலாம்.

ஏழரை சனி

ஏழரை சனி

சனிபகவான் நல்லவர்களுக்கு சோதனையை கொடுத்தாலும் இறுதியில் நன்மையே செய்வார் சனிபகவான். சனிபகவான் நீதி தேவர், நியாயவான் என்று கூறியிருக்கிறோம். இவரிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி பிடித்தே தீரும்.
ஒரு வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்டவர்களுக்கு ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. ஒரு வீட்டில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி ஒரே நேரத்தில் என்றாலும் பாதிப்பு ஏற்படும். மகன், மகளை படிப்பிற்காக விடுதியில் சேர்க்கலாம். கணவன் அல்லது மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஏழரை சனியில் பாதசனி

ஏழரை சனியில் பாதசனி

2020 ஜனவரி முதல் தனுசு ராசிக்கு ஜென்ம சனி விலகப்போகிறது. தடைகளையும் சோதனைகளையும் கொடுத்த சனி விலகும் நேரத்தினால் பெருமூச்சு விடுவீர்கள். ஏழரை சனி முடியலை இருந்தாலும் ஜென்மத்தில் பட்ட சிரமங்களை இனி படப்போவதில்லை. இரண்டரை வருஷம் நிம்மதி தருவார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போவது கவனம் தேவை. கடல் கடந்து செல்பவர்களுக்கு முன்னேற்றம் வரும். கடகத்தை சனி பார்ப்பதால் வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். வருமானம் அதிகமாக வரும். சனி வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வார். பொறுமை தேவை இரண்டரை வருடத்தை எளிதாக கடந்து விடலாம்.

ஏழரை சனியில் ஜென்ம சனி

ஏழரை சனியில் ஜென்ம சனி

மகர ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும். உங்க ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனிபகவான். தொழில் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யும் காலம். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். பயணங்களில் எச்சரிக்கை தேவை. கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்றத்தை தரும்.

ஏழரை சனி ஆரம்பம்

ஏழரை சனி ஆரம்பம்

கும்பம் ராசிக்கு 12ஆம் வீட்டில் சனி அமரப்போகிறார். விரைய சனி. உங்க ராசிநாதன் சனி அதிக பாதிப்பை தர மாட்டார். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. சனி தசை நடப்பவர்களுக்கு இது பூரண பலனைத் தரும். சில விசயங்களில் கவனம் தேவை. பண விரையம் வரும் லாப சனியாக இருந்து விரைய சனியாக மாறுகிறார். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. சாதக பாதகம் நிறைந்த சனிப்பெயர்ச்சி இது. முதலீடு செய்யும் போது கவனம் தேவை. பயணங்கள் பண்ணும் போது கவனம் தேவை. மருத்துவ செலவுகளை தருவார். குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக செலவு செய்வீர்கள். வீணான வாக்குவாதங்கள், வார்த்தைகளை விட வேண்டாம். மாணவர்களுக்கு கவனம் தேவை. படிப்பில் கவனம் செலுத்துங்கள். திருமணம் செய்ய நினைப்பவர்கள் பொறுமை தேவை. நிதானம் அவசியம். சுய ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் தசா புத்தி நன்றாக இருந்தால் சனிபகவான் வளர்ச்சியை தந்து உங்களைக் காப்பாற்றுவார்.

நிதானம் நல்லது

நிதானம் நல்லது

தனுசு, மகரம், கும்பம் என அடுத்தடுத்த ராசிக்காரர்களாக ஒரே வீட்டில் இருந்தாலும் மிதுனம், கடகம், துலாம் ராசியில் பிறந்தவர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் பாதிப்புகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும் போது திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வாகனத்தில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். தனித்தனியாக போனாலே பாதி பிரச்சினைகளை தவிர்த்து விடலாம் வேறு வழியே இல்லை ஒரே வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்றால் நிதானமாக போவது ரொம்ப நல்லது.

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகன்

ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஒரே ராசிக்காரர்களாகவோ அல்லது ஏழரை சனி, அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரம். அனுமனை சரணடைவதும் குடும்பத்தில் சந்தோசத்தை அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+