சனிப்பெயர்ச்சி 2017: கும்பராசிக்காரர்களே... இனி குதூகலம்தான்!

கும்பம் ராசிக்கு குதூகலம்தான். காரணம் 11வது இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார் சனிபகவான். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சனிப்பெயர்ச்சி 2017: கும்பராசிக்காரர்களே...இனி குதூகலம்தான்!- வீடியோ

    சென்னை: டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

    கும்பம் ராசிக்கு இதுவரை 10ஆம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி லாப ஸ்தானத்தில் அதாவது ராசிக்கு 11வது இடத்திர் சஞ்சாரம் செய்யப் போகிறார்.

    சனிபகவான் தனுசு ராசியில் இருந்து உங்கள் ராசியையும் வது இடம்,5வது இடம், 8 வது இடங்களைப் பார்க்கிறார். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.

    லாபசனியால் லாபமே

    லாபசனியால் லாபமே

    கும்ப ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்களுக்கு கரும சனியாக இருந்தவர் லாப சனியாக இடப்பெயர்ச்சி அடைகிறார். ராசிக்கு 10வது இடத்தில் இருந்த போது பல பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி எல்லாம் லாபமாகவே இருக்கும்.

    இனி எல்லாம் வெற்றி

    இனி எல்லாம் வெற்றி

    லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் இனி நன்மையே நிகழும். கும்பராசியின் அதிபதி சனிபகவான். உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி அமர்வதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிட்டும். இதுநாள் வரை மனதில் குழப்பமாக இருந்திருக்கும். இனி குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். ஏற்கனவே பாக்ய ஸ்தான குருவினால் நன்மைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    பார்வைகளினால் பலன்

    பார்வைகளினால் பலன்

    குரு ஏற்கனவே உங்கள் ராசியை 5வது பார்வையாக பார்க்கிறார். சனிபகவான் 3வதுபார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள்.

    குதூகலம் அதிகரிக்கும்

    குதூகலம் அதிகரிக்கும்

    7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். எனவே புத்திரர்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

    பயணங்களில் கவனம்

    பயணங்களில் கவனம்

    கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் ராசிக்கு 8வது இடத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் கவனமாக சென்று வருதல் வேண்டும்.

    உயர்கல்வி வாய்ப்பு

    உயர்கல்வி வாய்ப்பு

    மாணவர்களே எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் கவனம் தேவை. உயர்கல்வி பயில வெளிநாடு செல்வதில் தடையேற்பட்டு பின் அமையும். கல்வி கடன் கிடைக்கும். விளையாட்டுகளில் அதிக எச்சரிக்கை தேவை.

    அவசரம் வேண்டாம்

    அவசரம் வேண்டாம்

    இல்லத்தரசிகளுக்கு உறவுகளிடத்தில் மதிப்பு கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.

    அள்ளி வழங்கும் சனிபகவான்

    அள்ளி வழங்கும் சனிபகவான்

    வெளிநாட்டு பயணம் அமைய வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் செழிப்பு ஏற்படும். இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. கும்ப ராசிக்கு சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். தான தர்மம் செய்யுங்கள். பகைவர்களிடத்திலும் அன்பு பாராட்டுங்கள்.

    உடல் நலத்தில் கவனம்

    உடல் நலத்தில் கவனம்

    உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உடலில் சளித் தொல்லை இல்லாமல் கவனித்தல் நலம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். சென்னை நங்கநல்லூரில் உள்ள விஷ்வரூப ஆஞ்சநேயரை தரிசனம் செய்வது மேலும் நன்மையை தரும்.

    அவிட்டம் நட்சத்திரம்

    அவிட்டம் நட்சத்திரம்

    அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பார்க்கும் செய்திகள் சாதகமாக அமையும். வீடு மாற்றம் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையில் அமர ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும்.
    கதிராமங்கலம் சென்று வனதுர்க்கையை வணங்கி வர எதிரிகள் தொல்லை தீரும்.

    சதயம் நட்சத்திரம்

    சதயம் நட்சத்திரம்


    சதய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்குப் எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் சற்று தடையேற்பட்டாலும் முதலில் கிடைத்த வேலையில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். மனைவி மூலம் எதிர்பாரத தனவரவும் பொருள் வரவும் ஒரு சிலருக்கு வந்து சேரும். தேவையற்ற கடன் வாங்க வேண்டாம். யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. குழந்தைகளால் நன்மையே கிடைக்கும்.

    வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று சுவாமி, அம்பாளை வழிபடுங்கள். செவ்வாய் பகவானை வணங்குங்கள்.

    காதல் கைகூடும்

    காதல் கைகூடும்


    பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களே பேச்சில் சாமர்த்தியமும் அதனால் நன்மைகளும் ஏற்படும். குடும்பத்தில் புதுவரவு அமையும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். உயர்கல்வி பயில வாய்ப்புகள் கிட்டும். இதுவரை வராமல் இழுத்தடித்த பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்கள் சுமூகமாக அமையும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும்.

    பழனி சென்று ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசித்து வாருங்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+