சனிப்பெயர்ச்சி 2020-23: நாக்கில் சனி தனுசு லக்னகாரர்கள் வாக்கில் கவனம்
சனிபகவான் ஜென்ம சனியாக இருந்து குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் அமரப்போகிறார். குடும்பத்தில் கவனம் செலுத்துங்க.
சென்னை: சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு 2020 ஜனவரி மாதம் 24ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். தனுசு லக்னகாரர்களுக்கு சனிபகவான் இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். ஜென்மசனி இனி குடும்பசனியாக அமரப்போவதால் உங்க குடும்பத்திலும் வாக்கிலும் கவனமாக இருப்பது நல்லது.
மகரம் கும்பம் வீடுகளுக்கு சனி அதிபதி. அது உங்க லாக்னத்திற்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீடு. இரண்டாம் வீடு குடும்பம், தனம், வாக்கு ஸ்தானம். மூன்றாம் வீடு தகவல் தொடர்பு, முயற்சி, போக ஸ்தானம், அண்டை வீட்டார். இளைய சகோதரம், நண்பர்களை குறிக்கும். சனி பகவான் உங்க ஜென்ம ராசியில் இருந்து இரண்டாம் வீட்டில் அமரப்போவதால் இனி குடும்பம் பற்றியும், உங்களுக்கு வரப்போகும் வருமானம் பற்றியும் அதிகம் பெருமையாக பேசாதீங்க.
அண்ணன் தம்பிகள் பற்றியும், உங்களுடைய பேச்சுத்திறமை பற்றியும் ரொம்ப பெருமையாக யாரிடமும் சொல்லாதீங்க. அப்படி சொன்னால் அது சிக்கலாக முடியும். இந்த சனிபகவான் உங்க லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்து உங்க லக்னத்திற்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு, லாப ஸ்தானமான 11ஆம் வீட்டினை பார்க்கிறார். சனிபகவானின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் தனுசு லக்னகாரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சனி அதிபதி
தனுசு லக்னகாரர்களுக்கு சனி இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால் தனுசு லக்னகாரர்கள் தனது பிறந்த வீட்டினைப் பற்றியும் வருமானம், சொல்வாக்கு செல்வாக்கு பற்றி பெருமையாக பேசக்கூடாது. ரொம்ப பீற்ற வேண்டாம். லக்னத்தில் இருந்து இரண்டாம் பாவத்திற்கு போகிறார் சனி. இதுநாள் வரை உங்க உடல் நலத்தில் நிறைய பாதிப்பு வந்தது. இனி பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக தீரும்

நாக்கில் சனி கவனம்
உங்க இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம். நாக்கில் சனி அமரப்போகிறார். வாக்கு குடுப்பதில் கவனம் தேவை. இல்லாவிட்டால் மாட்டிக்கொள்வீர்கள். பொறுப்புகளில் தடைகள் ஏற்படும். குடும்பத்தில் கவனமாக இருங்க. வருமானத்தை வெளியில் சொல்லாதீர்கள். பேச்சில் கவனம் தேவை. சனி பகவான் ஒன்று கொடுத்தால் ஒன்றை தடுப்பார் எனவே குடும்பம், வருமானம் பற்றி ரகசியம் கடைபிடிப்பது அவசியம். சின்னச் சின்ன பயணங்கள் செல்வீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை
தனுசு லக்னகாரர்களுக்கு ஜென்ம சனி ஜென்ம கேது, விரைய குருவாக இருந்தததால் மன நிம்மதி இழந்திருப்பீர்கள். சனி விலகும் இந்த காலத்தில் குழப்பங்கள் தீரும். இனி வெளிச்சத்தை தருவார் சனிபகவான். உங்களுடைய திட்டங்களுக்கு நல்ல பதையை காட்டுவார். நஷ்டங்கள் முடிவுக்கு வரும். நோய்கள் தீரும் காலம். குடும்பத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் நிலையை கவனிங்க. மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க. கருமாரியம்மன் உங்க பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவார்.

தனாதிபதி சனி
ஏழரை சனி முடிய இனி இரண்டரை ஆண்டு காலம் இருந்தாலும் உங்க லக்னத்திற்கு பாத சனி, குடும்ப சனியாக அமைகிறார். சூரியன், சந்திரன் செவ்வாய் நட்சத்திரங்களில் பாதங்களில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி சனி தன ஸ்தானத்திற்கு வருகிறார். உடல் நிலையில கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில போகும் போது கவனமாக இருங்க. இனி வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கடன்கள் குறையும்.

பண விசயத்தில் கவனம்
குடும்ப பிரச்சினைகள் தீரும். வாக்கு வாதம் செய்ய வேண்டாம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பண விசயத்தில் கவனமாக இருங்கள் இல்லாவிட்டால் கடனாளியாகிவிடுவீர்கள். இனி வரும் வருமானம் எல்லாமே சுப செலவுகளாக இருக்கும். சர்ப்ப கிரகமான கேதுவை விட்டு சனி விலகும் காலம் வந்து விட்டது. தனித்த சனியாக சில காலம் இருப்பார். இனி நன்மைகள் நடக்கும்.

தானம் பண்ணுங்க
இதுநாள்வரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இனி வேலை கிடைக்கும். நல்ல பாதைகள் தெரியும். பாத சனி வருமானத்தில் இருந்த பிரச்சினைகளை தீர்ப்பார். கஷ்டங்களை விலக்கி சங்கடங்களை தீர்ப்பார். சனி பகவான் மந்திரம் உச்சரியுங்கள். சனியால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தை குறைக்கும். சனிக்கு ரொம்ப பிடிச்சதே தானம்தான். இயலாதவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு தானம் கொடுங்கள் நன்மைகள் நடக்கும். உடல் ஊனமுற்றவர்கள் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். நல்லெண்ணெய் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் காப்பு சாற்றுங்கள். சனியின் பாதிப்பினால் ஏற்படும் வீரியம் குறையும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications