Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2020-23: கன்னி லக்னகாரர்களுக்கு கஷ்டங்களை தீர்க்கும் சனிபகவான்

சனிப்பெயர்ச்சி கோச்சார ரீதியாக படித்திருப்பீர்கள். சிம்ம லக்னகாரர்களுக்கு சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக இருந்து கஷ்டங்களை கொடுத்து வந்த சனி இனி ஐந்தாம் வீட்டில் பூர்வ புண்ணிய சனியாக மாறுகிறார். சனி பகவ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    21-09-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan | Oneindia Tamil

    சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு ஜனவரி மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். கன்னி லக்னகாரர்களுக்கு சனிபகவான் ஐந்து மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி. ஐந்தாம் வீட்டிற்கு உடையவர் ஐந்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அர்தாஷ்டம சனியாக இருந்து இரண்டரை ஆண்டுகாலம் பாடாய் படுத்தியவர் பூர்வ புண்ணிய சனியாக சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

    கன்னி கால புருஷனுக்கு ஆறாவது வீடு. எதிரி, நோய், கடன், வம்பு வழக்கு ஆகியவற்றை குறிக்கும் பாவம். இந்த லக்னகாரர்களுக்கு சனிபகவான் ஐந்து மற்றும் ஆறாம் விட்டிற்கு அதிபதி. பிரச்சினைகள் தரும் இடம். மகரம் ஐந்து கும்பம் ஆறு. குழந்தைகள், காதல், பூர்வீகம், வழிபடும் முறை, புத்தி. எதிரிகள், நோய், கடன் வம்பு வழக்கு பஞ்சாயத்து ஆகியவற்றிர்க்கு காரகர்.

    சனி பகவான் பார்வை உங்க லக்னத்திற்கு இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீடான லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. சனி சஞ்சாரத்தினால் ஐந்தாம் வீடு, ஆறாம் வீடு தவிர சனி பார்வை விழும் இடங்களுக்கான பலன்களையும் பார்க்க வேண்டும்.

     பூர்வ புண்ணிய சனி

    பூர்வ புண்ணிய சனி

    சனிபகவான் உங்க ஜாதகத்தில் கோச்சாரத்தில் எந்த இடத்தில் அமர்கிறாரோ அந்த வீட்டில் உங்க பொறுப்பை உணரவைப்பார். ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சனி ஐந்தாம் வீட்டிற்கு வருகிறார். எனவே நாம் குழந்தைகள், நம்முடைய பூர்வீகம், நம்முடைய புத்தியில் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும். உங்க ஜாதகப்படி இனி கவனிக்க வைப்பார். வீட்டில் குழந்தைகள் இருந்தால் கவனிங்க, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். எதிரிகள் விசயத்தில் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

    நோய் கடன் வழக்கு

    நோய் கடன் வழக்கு

    சனிக்கு நேர்மை நீதி பிடிக்கும். எதிலும் பொறுமை, நீதானத்தோடு இருப்பது அவசியம். கன்னி லக்னகாரர்கள் பூர்வீக சொத்து பிரச்சினையை தீர்ப்பார். எந்த வீட்டிற்கு அதிபதியோ அதைப்பற்றி பெறுமை பேசாதீங்க. உங்க காதல் பத்தியும் பூர்வீகம் பத்தியும் பெறுமை பேச வேண்டாம். நோய் கடன் பற்றியும் ரொம்ப பெருமை பேசாதீங்க. திருஷ்டிபடும். குழந்தைகள் விசயத்தில் திருஷ்டியை தரும். ஆர்பாட்டம் பிடிக்காது. அமைதியாக இருங்க அப்பத்தான் சனிபகவான் நன்மை செய்வார்.

    கன்னி லக்னத்திற் நல்லகாலம்

    கன்னி லக்னத்திற் நல்லகாலம்

    நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனி இருந்த போது கஷ்டங்களையும் சங்கடங்களையும் விபத்துக்களையும் சனி ஏற்படுத்தி வந்தார் மன உளைச்சலையும் சோர்வையும் ஏற்படுத்தி வந்தார். இனி கன்னி லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு போகிறார். பூர்வ ஜென்ம விதிகள் புண்ணியங்களை மேலே கொண்டு வருவார். நீங்க செஞ்ச நல்லவைகளை அறுவடை செய்யப்போகிறீர்கள்.

    திருமணம் நடக்கும்

    திருமணம் நடக்கும்

    கன்னி லக்னகாரர்களுக்கு அர்தாஷ்டம சனி விலகுவது நன்மை. இந்த சனி பெயர்ச்சியால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும் பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களை விற்கலாம். திருமணம் நடக்கும், தொழில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

    வருமானம் அதிகரிக்கும்

    வருமானம் அதிகரிக்கும்

    சனிபகவான் பார்வையால் கன்னி லக்னகாரர்களுக்கு வருமானம் அதிகம் வரும். வேலை தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் வளர்ச்சியும் வருமானமும் ஏற்படும். தொழில் கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். மூத்த சகோதரர்களால் உதவி கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் நடக்கும்.

    பரிகாரம் என்ன

    பரிகாரம் என்ன

    உங்க வாழ்க்கை துணைக்கு சில உடல்நலக்கோளாறுகள் ஏற்படும் கவனம் தேவை. சொத்துக்களை வாங்க கடன்கள் கிடைக்கும். இதுநாள்வரை இருந்த போராட்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. நான்காம் வீட்டில் குரு வரப்போகிறார். எல்லை காவல் தெய்வங்கள், குருவாக இருக்கும் ஜீவ சமாதிக்கு சென்று வணங்குங்கள். சனிக்கிழமை கோவிலுக்கு போய் நல்லெண்ணைய் விளக்கேற்றி வழிபடுங்கள். கடைநிலை ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள் பாதிப்புகள் குறையும் நன்மைகள் நடக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+