சனிப்பெயர்ச்சி 2020-23: கடக லக்னகாரர்களுக்கு சச மகா யோகம் தரும் களத்திர சனி - பரிகாரங்கள்
சனிப்பெயர்ச்சி கோச்சார ரீதியாக படித்திருப்பீர்கள். கடக லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு சனிபகவான் நகர்கிறார். இந்த இடப்பெயர்ச்சி சனிபகவான் பார்வையால் கடக லக்னகாரர
Recommended Video
சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு ஜனவரி மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். கடக லக்னகாரர்களுக்கு சனிபகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். இந்த சஞ்சாரத்தினால் கடக லக்னகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்ன பரிகாரங்கள் என்று பார்க்கலாம்.
ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும் போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் சஞ்சாரம் செய்து வந்தாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக அமையும். லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை அறிய முடியும். லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது. மேஷ லக்னகாரர்கள் கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள். முன்கோபமும், பிடிவாதமும் அதிகமாக இருக்கும். அறிவாளி என்று பெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு சனிபகவான் தனது வீடான மகர லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இது கடக லக்னத்திற்கு ஏழாம் பாவகம்.
களத்திர ஸ்தானம். களத்திர ஸ்தான அதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இந்த இடத்தில் இருந்து அவர் தனது ஏழாம் பார்வையாக உங்க லக்னத்தை பார்க்கிறார். பத்தாம் பார்வையாக உங்க லக்னத்திற்கு நான்காம் வீட்டையும், மூன்றாம் பார்வையாக உங்க லக்னத்திற்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார்.

களத்திர ஸ்தானத்தில் சனி
கடக லக்னத்திற்கு சனி ஏழாம் வீட்டிற்கு அதிபதி எட்டாம் வீட்டிற்கும் அவரே அதிபதி. களத்திரம், கணவன் வீடு நண்பர்கள், தொழில் பார்ட்னர்கள் ஆகியவற்றை குறிப்பது ஏழாம் வீடு. எட்டாம் வீடு அசிங்கம் அவமானம், ஆயுள், திடீர் அதிர்ஷ்டம், திடீர் வருமானத்தைக் குறிக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக சனி ஆறாம் வீட்டில் இருந்தார் இப்போ ஏழாம் வீட்டிற்கு வருகிறார். எதிர்பாராத விதமாக திருமணம் நடக்கும். கணவன் மனைவி இடையே விவாதம் வேண்டாம். வாழ்க்கைத்துணை மீது கவனம் செலுத்துங்கள். பொறுப்பை உணருங்கள் இல்லாவிட்டால் பிரச்சினைகள் தலைதூக்கும்.

கணவன் மனைவி உறவு
மாமியார் வீட்டில் உள்ளவர்கள் மீது கவனம், உங்க ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இவ்வளவு நாள் கணவன் மீது மனைவியும் மனைவி மீது கணவனும் அக்கறை செலுத்தாமல் இருந்தாலும் இனி ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் செலுத்துங்கள். இல்லாவிட்டால் வேண்டாத தொடர்புகள் ஏற்படும். அதை தவிர்த்து விடுங்கள். தவறுகளை சரி பண்ணுங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையில் சூறாவளிதான் வீசும்.

சசமகா யோகம் தரும் சனி
கடக ராசி லக்னத்திற்கு சனி ரொம்ப நல்லவர் கிடையாது. காரணம் உங்க லக்னாதிபதி சந்திரனுக்கும், சனிக்கும் ஒத்துவராது. கடக ராசிக்கு சனி ஏழாம் வீட்டிற்கு அதிபதி என்பதால் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் போது சசமகா யோகத்தை தருகிறார். சச மகா யோகம் பெற்றிருப்பவர்கள் தலைமை பதவியை தருவார். சனி ஏழாம் வீட்டில் ஆட்சி பெறும் போது சூரியன் சந்திரன் செவ்வாய் நட்சத்திரங்களான உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கிறார்.

தலைமைப் பதவி வரும்
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி தலைமை பதவியை தரும். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் நடைபெறும். வெளிநாடுக்கு செல்ல வேண்டும் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். சனி செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்தில் சஞ்சரிக்கும் போது பதவியில் உள்ளவர்களுக்கு உயர்ந்த பதவியை தரும். உயர்கல்வி யோகம் வரும் வெளிநாடு செல்வீர்கள். பாஸ்போர்ட் விசா கிடைக்கும்.

வீடு கட்டும் யோகம்
சனியின் பார்வை கடகத்தின் மீது விழும் போது நன்மைகள் நடக்கும். ஏழுக்கு உடையவன் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது சின்னச் சின்ன தடைகளுடன் திருமணம் நடக்கும். ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் அப்பாவின் மூலம் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. அதேபோல சனியின் பார்வை உங்க லக்னத்திற்கு நான்காம் வீடான துலாம் மீது விழுகிறது. புது வண்டி வாங்குவீர்கள். வீடு கட்டும் யோகத்தை தரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கல்யாணத்திற்கு போராட்டம்
கடக லக்னகாரர்களுக்கு காதல் கனியும் காலம் இருந்து வாழ்க்கை துணையை கவனமாக தேர்ந்தெடுங்கள். நீண்ட இழுபறிக்குப் பிறகு திருமணம் நடைபெறும். தம்பதியரிடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். களத்திரத்தில் சனி இருக்கும் காலத்தில் அமைதியாக இருங்கள் மாற்றங்கள் நல்லதாகவே இருக்கும். சனி எட்டுக்கு அதிபதி என்பதால் கடன் வாங்கும் அமைப்பை ஏற்படுத்துவார். உங்க லக்னத்திற்கு சனி யோகராக இல்லாவிட்டாலும் பெரிய பலனைத் தருவார். இந்த சனி பெயர்ச்சியால் இடமாற்றம் வரும். வேலையில் மாற்றம் வரும்.












Click it and Unblock the Notifications