சனிப்பெயர்ச்சி 2020-23: கும்பம் லக்னத்திற்கு விரைய சனி- சுப செலவுகள் அதிகம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் லக்ன அதிபதி. லாப சனியாக இருந்து விரைய சனியாக 12ஆம் வீட்டில் அமரப்போகிறார். எந்த அளவிற்கு பணவரவு வருதோ அந்த அளவிற்கு செலவு வரும்.
சென்னை: சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு 2020 ஜனவரி மாதம் 24ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். கும்பம் லக்னகாரர்களுக்கு சனிபகவான் 12ஆம் விடான விரைய சனியாக சஞ்சரிக்கப் போகிறார். லாப சனி இனி விரைய சனியாக ஏழரை சனியாக சஞ்சரிக்கப் போவதால் கும்ப லக்னகாரர்களுக்கு என்ன பலன்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.
சனிபகவான் மகரம் கும்பம் வீடுகளுக்கு சனி அதிபதி. அது உங்க லாக்னத்திற்கும் விரைய ஸ்தானத்திற்கும் அதிபதி. 3 ஆண்டு காலம் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். பத்தாம் வீடு மகரம் வேலை, தொழில் 11ஆம் வீடு லாப ஸ்தானம் ஆசைகள் அபிலாஷைகளுக்கு அதிபதி. சனி பகவான் தனது சொந்த வீட்டில் விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் அமர்வது விபரீத ராஜயோகம்.
கும்ப லக்னத்திற்கு 12வது வீட்டிற்கு வருகிறார் சனி பகவான் வருவதால் நிறைய சுப விரையங்கள் ஏற்படும். இடமாற்றம் வீடு மாற்றம் நடைபெறும். சனிபகவான் விரைய ஸ்தானம், முதலீடும் அதிகம் செய்யும் காலம் இது.

வருமானமும் செலவும் வரும்
சனிபகவான் தான் இருக்கும் வீட்டில் இருந்து தன ஸ்தானம், பணவரவு, வீடு குடும்பம், சிறப்பு ஏற்படும். வருமானம் அதிகம் வரும். விரையத்தில் அமர்வதால் அதிக செலவும் ஏற்படும் முதலீடு செய்யுங்கள். தேவையில்லாத பேச்சுக்களை குறையுங்கள். பணத்தை அதிகமாக செலவு பண்ணுங்க.

வேலையில் புரமோசன்
சனி பகவான் லக்னத்திற்கு ஆறாம் வீட்டை பார்க்கிறார். வேலையில் புரமோசன் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். ஆறாம் இடம் கடன் ருண ரோக சத்து ஸ்தானம். கடன்கள் கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்க. நேரத்திற்கு சாப்பிடுங்க. மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க.

ஆன்மீக சுற்றுலா
லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டை சனி பார்க்கிறார். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். ஆன்மீக சுற்றுலா அமைதியாக நடக்கும். இந்த வேலையை தொழிலை விட்டு விட்டு வேறு வேலைக்கு போக வேண்டாம். செய்யிற வேலையை பத்திரமாக பாருங்க. யாருக்கும் ஜாமீன் கேரண்டி கையெழுத்து போடாதீங்க அப்புறம் பணத்தை நீங்கதான் கட்ட வேண்டியிருக்கும்.

திருமண யோகம்
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். சிலர் வெளிநாடு செல்வார்கள். காதல் திருமணம் நடைபெறும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் கவனமாக இருங்க. இந்த மூன்று வருடம் சனி மகர ராசியில் இருக்கும் காலத்தில் குரு பெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது. அதை சேர்த்தே கணிக்கப்பட்டுள்ளது.

குல தெய்ய வழிபாடு
அதிக பலன்களும் நன்மைகளும் கிடைக்க குல தெய்வத்தை வழிபடுங்க. உங்க இஷ்ட தெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க. ஆஞ்சநேயர் வழிபாடு அற்புதத்தை தரும். காளியை வணங்குங்கள். பைரவர் கோவிலுக்கு போய் செவ்வரளி மாலை போட்டு வழிபடுங்க. சனிபகவானுக்கு அர்ச்சனை பண்ணுங்க. இல்லாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் தர்மம் பண்ணுங்க நல்லது நடக்கும். வேலையாட்களுக்கு நிறைய உதவி பண்ணுங்க நல்லது நடக்கும். இந்த சனிபெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications