Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி

சனிபகவான் ஜென்ம சனியாக இருந்து குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் அமரப்போகிறார். குடும்பத்தில் கவனம் செலுத்துங்க. வாக்கு கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிங்க காரணம் சனி பகவான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு 2020 ஜனவரி மாதம் 24ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம்.

மகர லக்னகாரர்களுக்கு சனிபகவான் சொந்த வீட்டில் அமரப்போகிறார். விரைய சனி இனி ஜென்மசனியாக அமரப்போவதால் செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. சனிபகவான் மகரம் கும்பம் வீடுகளுக்கு சனி அதிபதி. அது உங்க லாக்னத்திற்கும் இரண்டாம் வீட்டிற்கும் அதிபதி. இரண்டாம் வீடு குடும்பம், தனம், வாக்கு ஸ்தானம். எனவே இவற்றை பற்றி பெருமை பேசாதீங்க.

சனிபகவான் ஜென்ம ராசியில் அமரப்போகிறார். இனி குடும்பம் பற்றியும், உங்களுக்கு வரப்போகும் வருமானம் பற்றியும் அதிகம் பெருமையாக பேசாதீங்க. உங்க குடும்ப ஸ்தான அதிபதி விரையத்தில் அமர்வதால் எனவே நீங்க உங்க பணம் விசயத்தில கவனமாக இருங்க.

மகர லக்னம் ஜென்ம சனி

மகர லக்னம் ஜென்ம சனி

சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கால கட்டத்தில் வாக்கில கவனம் தேவை, வண்டி வாகனத்தில கவனமாக இருங்க. வேகமாக ஓட்டாதீங்க. சாப்பாட்டில கவனம் தேவை. குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருங்க. குடும்பம், வருமானம், தனம் வாக்கு, அதிபதி விரைய ஸ்தானத்திற்கு வருகிறார் என்று அர்த்தம். நம்முடைய செயல்கள் எல்லாம் விரையமாகக்கூடாது. தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். வம்பு வருதுன்னு தெரிஞ்சாவே வாயை மூடிக்கங்க.

சிறப்பான சனிப்பெயர்ச்சி

சிறப்பான சனிப்பெயர்ச்சி

சொந்த வீட்ல சனிபகவான் சஞ்சரிக்கிறார். சனி பார்வையாக தைரியம் வீரியம் தன்னம்பிக்கையை தரும் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனிபகவான் உங்க லக்னத்தில் சஞ்சரிப்பதால் கவலைகள் மாறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஏற்றம் பெறும். சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும்.

பணவரவு கூடவே செலவு

பணவரவு கூடவே செலவு

சனி உங்க ராசிக்கு ஏழாம் வீட்டை பார்க்கிறார். திருமணம் தடைகள் இன்றி நடைபெறும். சனிபகவனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புரமோசன் கிடைக்கும். இதுநாள் வரை வராமல் இருந்த பணம் வரும். அதிர்ஷ்டம் மூலம் பணம் வரும். சனிபகவான் ஏழாம் வீட்டை பார்ப்பதால் தொழில் பிசினஸ் கூட்டுத்தொழில் நல்லா நடக்கும். சுப செலவுகளும் வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் கைகூடி வரும் சகோதர சகோதரிகளுக்கு சுப செலவுகள் செய்வீர்கள்.

உடல் நலத்தில் கவனம்

உடல் நலத்தில் கவனம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதற்கான யோகம் வந்து விட்டது. வெளிநாடு யோகமும் கைகூடி வருகிறது. புதிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். ரொம்ப சுறுசுறுப்பாக இருங்க. தேவையில்லாமல் கடன் வாங்காதீங்க. உடல்நலத்தில் கவனம் வையுங்க. சின்ன பிரச்சினை வந்தாலும் டாக்டர் கிட்ட உடம்பை காட்டுங்கள்

காலபைரவர் வழிபாடு

காலபைரவர் வழிபாடு

ஜென்ம சனி வந்தாலே உணவில் முடியும் சாப்பாட்டில் கல் தென்படும். மகர லக்னகாரர்கள் யாருக்கும் வாக்கு குடுக்காதீங்க அதேபோல பணம் விசயத்திலும் கவனமாக இருங்க இல்லாட்டி சிக்கலாக வந்திரும். கமிட்பண்ணிக்காதீங்க. உடம்பு விசயத்தில கவனமாக இருங்க. மாணவர்கள் கல்வியில கவனம் வையுங்க. இந்த சனிப்பெயர்ச்சிக்கு மகர லக்னகாரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடு அவசியம். மகர லக்னகாரர்கள் கண்டிப்பாக காலபைரவரை வழிபடுங்கள். பாதிப்புகள் நீங்கும். ஏழைகள், இயலாதவர்களுக்கு தர்மம் செய்யுங்கள். உதவி செய்யுங்கள் பாதிப்புகள் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+