சனிப்பெயர்ச்சி 2020 -2023 : ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா

சனிபெயர்ச்சி 2020 ஜனவரி மாதம் நிகழ உள்ளது. இந்த கிரகப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    26-08-2019 இன்றைய ராசி பலன்- வீடியோ

    சென்னை: சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார். விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என மொத்தம் 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிகாரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

    விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. தனுசு ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார்.

    சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர். இந்த ஐந்து ராசிக்காரர்கள் தவிர மற்ற 7 ராசிக்காரர்களுக்கு பாதிப்பா என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் படிப்பினைகளை கொடுத்து அதற்குப் பிறகு நல்ல பலன்களைக் கொடுப்பார்.

    சசயோகம்

    சசயோகம்

    சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். சனி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது.

    பணவருமானம் கொட்டும்

    பணவருமானம் கொட்டும்

    மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்னும் சில மாதங்களில் குரு ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதே போல பத்தாம் வீட்டில் சனி மகரமான தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இது ஒன்பதில் ஒன்பதாம் அதிபதி, பத்தில் பத்தாம் அதிபதி என யோகமான காலகட்டமாகும்.
    கடந்த பல வருடங்களாக பட்ட கஷ்டங்களுக்கு பலன்கள் தேடி வரப்போகிறது. விடியா மூஞ்சி வேலைக்கு போனாலும் கூலி கெடைக்காது என்பார்கள் அதுபோல அஷ்டம குருவால் ஏகப்பட்ட கஷ்டங்களை பட்டிருப்பீர்கள். இனி கஷ்டங்கள் தீரப்போகிறது.

    புதிய வேலையில் வருமானம்

    புதிய வேலையில் வருமானம்

    இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது. இனி விடிவு காலம், புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். அனைத்திலும் ஏற்றம் தரும் காலம் வரப்போகிறது.

    பாக்ய சனி

    பாக்ய சனி

    அஷ்ட சனி காலம் முடியப்போகிறது. பாக்ய சனி வரப்போகிறது. சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். எட்டாம் வீட்டில் குரு ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும்.

    முழுமையான ராஜயோகம்

    முழுமையான ராஜயோகம்

    சிம்ம ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஐந்தில் குரு ஆறில் சனி என அமரப்போகும் காலம் பொன்னான காலம். அத்தனை சிறப்புகளையும் தருவார். ஆறில் சனி முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டுக்கு வருவதால் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும்.

    வீடு சொத்து வாங்குவீர்கள்

    வீடு சொத்து வாங்குவீர்கள்

    கட்டாயம் வீடு கட்டுவீர்கள். புது வேலை, பதவி உயர்வு, நினைத்த ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும். குழந்தை பாக்கியம், ஆண் குழந்தை பிறக்கும். முழு ராஜயோகம். நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். எதிரிகள் எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். அதியோகம் வரப்போகிறது. சுகங்கள் தேடி வரும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். மாணவர்கள் கல்வியில் கவலைப்பட வேண்டாம். நல்ல மார்க் எடுப்பீர்கள். வியாபாரம் கல்வித்துறையில் செழிப்பு வரும். ராஜயோக காலம்.

    நல்ல காலம் பிறக்குது

    நல்ல காலம் பிறக்குது

    ஏழரை சனி முடியப்போகிறது ஜென்ம குரு நகர்ந்து குடும்ப குருவாக அமரப்போகிறார். ராசிக்கு 2ல் குரு 3ல் சனி சிறப்பான கால கட்டம். விருச்சிக ராசிக்காரர்கள் எத்தனையோ கஷ்டங்கள் பட்டிருப்பீர்கள். ஜனவரி 2020 முதல் நல்ல காலம் பிறக்கப் போகிறது. ஏழரை சனி ஜென்ம குரு கல்லில் முட்டியது போல இருந்திருக்கும் இனி ராஜயோக கால கட்டம்தான்.

    உயர் பதவி யோகம்

    உயர் பதவி யோகம்

    இத்தனை ஆண்டுகாலம் எல்லாத்தையும் இழந்து விட்டு தனித்து விடப்பட்டது போல இருந்திருப்பீர்கள். இது நாள் வரை கஷ்டத்தை மட்டுமே பார்த்தவர்கள் இனி நல்லவைகளை பார்க்கப் போகிறீர்கள் அனுபவிக்கப் போகிறீர்கள். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள். திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம்

    பணமழை பொழியும்

    பணமழை பொழியும்

    மீனம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் குருவும் 11ஆம் வீட்டில் சனியும் அமரப்போகும் காலம் நிதானமான பலன்கள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். மழலைச் செல்வத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும்.
    வெளிநாடு போகும் யோகம் வரும். பணம் கொட்டப்போகிறது. ஏற்கனவே குரு 9, சனி 10ல் இருந்தாலும் சில பாதிப்புகள் வந்திருக்கும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கவுரவம் அந்தஸ்து கிடைக்கும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+