சனிப்பெயர்ச்சி 2020-23: துலாம் லக்னகாரர்களுக்கு யோகம் தரும் சனி பகவான்
Recommended Video
சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு 2020 ஜனவரி மாதம் 24ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். துலாம் லக்னகாரர்களுக்கு சனிபகவான் நான்காம் வீட்டில் அமரப்போகிறார். அர்தாஷ்டம சனியாக இருந்து இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கும் சனியால் பலன்கள், பரிகாரங்களைப் பார்க்கலாம்.
துலாம் லக்னத்திற்கு சனி நான்கு மற்றும் ஐந்தாம் பாவகத்திற்கு அதிபதி. நான்காம் இடம் தாய், வண்டி வாகனம் வித்தை, குழந்தை வளர்ப்பு, பூர்வீக குணங்கள் ஆகியவற்றிற்கு பொறுப்போடு கவனிக்க வேண்டும். இந்த விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீகம், பித்ருக்கள், காதல், குழந்தைகள் ஆகிய விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
சனிபகவான் தனது பத்தாம் பார்வையாக உங்க லக்னத்தை பார்க்கிறார். அதை தவிர உங்க லக்னத்திற்கு ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறு, தொழில் ஸ்தானமான பத்தாம் வீடுகளை பார்வையிடுகிறார். சனிபகவானின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் துலாம் லக்னகாரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

அர்த்தாஷ்டம சனி
சனிபகவான் இதுநாள்வரை சங்கடங்களைக் கொடுத்திருப்பார். இந்த முறை சனி நான்காம் பாவத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். வீடு, கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வண்டி வாகனங்களில் கவனமாக இருங்க. அம்மா உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். சுப விரையம் ஏற்படும். குழந்தைகள் குணநலன்கள், உடம்பில் கவனமாக இருங்கள். காரணம் நான்கு, ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் அந்த வீட்டின் பொறுப்புகளை உணரவைப்பார்.

நினைத்தது நிறைவேறும்
சனி உச்சம் பெறும் ராசி துலாம் ராசி. நான்கு ஐந்தாம் பாவத்திற்கு அதிபதி நான்காம் வீட்டில் அமர்ந்து சசமாக யோகம் தருவார். தீர்க்கப்பபடாத பிரச்சினைகள் தீரும். நினைத்தது நிறைவேறும். சத்ருக்கள் எதிரிகள் விலகும் காலம். சுபமான காலம்.

வேலையில் இடமாற்றம்
ஆட்சி பெற்ற சனி உங்க லக்னத்திற்கு பத்தாம் இடமான கடகத்தை பார்க்கும் காலத்தில் உங்க தொழிலில் லாபம், வேலையில் இடமாற்றம் ஏற்படும். அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு பதவியில் இடமாற்றம் கிடைக்கும். கடல் கடந்து வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார். சபாக்கியங்களைத் தருவார். மாணவர்களுக்கு நன்மை செய்வார் சனி.

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்
உடல் ரீதியான உபாதைகள் இருந்தாலும் நிவர்த்தியை தருவார். வேலையில் மட்டுமல்லாது சொந்த வாழ்க்கையில் நிம்மதியைத் தருவார். திருமணத்தடைகள் நீங்கும். சனி குழந்தை பாக்கியத்திற்கு இருந்த தடைகள் நீங்கும். சொத்துக்களை வாங்கலாம். இதுநாள்வரை சொத்துக்கள் வாங்கும் பிரச்சினைகளில் இருந்த தடைகள் நீங்கும். மனதில் நிம்மதி ஏற்படும். தனவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளைத் தரும்.

பரிகாரம் என்ன
இந்த சனிப்பெயர்ச்சியால் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனி உங்க உடம்பில் உள்ள நோய்களை வெளிப்படுத்தி நிவர்த்தி ஏற்படுத்த வழிவகுப்பார். பொறுப்புகளை சுமக்க வைப்பார். வண்டி வாகனம் பழுது பார்க்கும் செலவுகளைத் தருவார் சனி. எல்லை காவல் தெய்வங்களை வழிபடுங்க பாதிப்புகள் குறையும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications