சனிப்பெயர்ச்சி 2020-23: விருச்சிக லக்னகாரர்களுக்கு ஏழரை முடிந்து நல்லகாலம் பிறக்குது
விருச்சிகம் லக்னத்திற்கு சனிபகவான் மூன்று மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதி. மூன்றாம் அதிபதி மூன்றாம் வீட்டில் அமர்கிறார். சனிபகவான் ஏழரை ஆண்டுகாலமாக ஆட்டிப்படைத்த சனிபகவான் இனி தைரிய சனியாக அமர்கிறா
சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு 2020 ஜனவரி மாதம் 24ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். விருச்சிகம் லக்னகாரர்களுக்கு சனிபகவான் மூன்றாம் வீட்டில் அமரப்போகிறார். ஏழரை சனி காலம் முடிகிறது பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கிறது. இனி தைரிய சனியாக இருந்து இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கும் சனியால் கிடைக்கப் போகும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மகரம் கும்பம் வீடுகளுக்கு சனி அதிபதி. அது உங்க லாக்னத்திற்கு மூன்றாம் நான்காம் வீடு. மூன்றாம் வீடு தகவல் தொடர்பு, முயற்சி, போக ஸ்தானம், அண்டை வீட்டார். இளைய சகோதரம், நண்பர்களை குறிக்கும். நான்காம் வீடு திருமணத்திற்கு பிறகு உருவாகும் குடும்பம் குலதெய்வம், தொழில், தாய் ஸ்தானம். உயர்கல்வி, குழந்தைகளுக்காக நாம் செய்யும் செயல்கள் வீடு வாகனம், பயணங்கள் இடமாற்றம் பற்றி எடுத்துக்காட்டும்.
சனி பகவான் உங்க லக்னாதிபதி செவ்வாய்க்கு எதிரி என்றாலும் இந்த சனிப்பெயர்ச்சியால் நல்லதே நடக்கும். சனிபகவான் தனது பத்தாம் பார்வையாக உங்க லக்னத்திற்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தைப் பார்க்கிறார். அதை தவிர உங்க லக்னத்திற்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீடுகளை பார்வையிடுகிறார். சனிபகவானின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் விருச்சிகம் லக்னகாரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நல்லது நடக்கும் காலம்
விருச்சிக லக்னகாரர்கள் கடந்த ஏழரை வருடமாகவே படுபயங்கர கஷ்டத்தை அனுபவித்திருப்பீர்கள். மூன்றாம் அதிபதி மூன்றில் மறைகிறார். வாயை கண்ட்ரோல் பண்ணுங்க. இத்தனை ஆண்டுகாலமாக நமக்கு நல்லது செய்பவர்கள் யார் கெடுதல் செய்பவர்கள் யார் என்று கண்டு பிடித்திருப்பீர்கள்.
இனி சங்கடங்கள் மாறும். திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கை கூடி வரும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தடை விலகி சந்தோஷமான சம்பவங்கள் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அமோகமான நேரம் கூடி வருது. தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கும். சுய தொழில் மூலம் நஷ்டமடைந்தவர்கள் இனி லாபத்தை மட்டுமே பார்ப்பீர்கள்.

சனியால் இனி சந்தோஷம்
சனி பெயர்ச்சியால் நல்ல நட்பு கிடைக்கும். சாதனை செய்வீர்கள். உங்களுக்கு வராமல் இரந்த பணம் வரும் சகோதரர்களின் உதவி கிடைக்கும். பயணங்களில் வெற்றி கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் சனி விழுவதால் பாக்யங்களையும் வரவுகளையும் கொடுப்பார். கசப்புகளை அனுபவித்தவர்களுக்கு இனி சந்தோசமான வாழ்க்கையையும் மன நிம்மதியையும் தரப்போகிறார் சனிபகவான். நோய் நொடிகள் தீர்ந்து ஆரோக்கியம் அதிகரிக்கும். பணவரவு இனி அபரிமிதமாக இருக்கும்.

கவனம் தேவை
இந்த சனிப்பெயர்ச்சி மூன்று மற்றும் நான்காம் வீட்டின் காரகத்துவங்களை சனி எடுத்துக்காட்டும். நம்முடைய பொறுப்பை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் தெளிவாக இல்லாவிட்டால் பொறுப்பாக இல்லாவிட்டால் பாதிப்புகள் ஏற்படும். வண்டி மூலமாக சிறு விபத்துக்கள் ஏற்படும் சாலைகள் மூலமாக வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருக்க வேண்டும். அம்மாவின் உடல் நலத்திலும் அக்கறையோடு இருக்க வேண்டும். கால புருஷ தத்துவப்படி விருச்சிகம் எட்டாம் வீட்டில் இருக்கிறது.

பேச்சில் கவனம்
கடந்த சில ஆண்டுகாலமாக சனிபகவான் குடும்பத்தில் பாதிப்பு ஏற்பட்டது. எதிர்பாராத அசிங்கம், அவமானத்தை ஏற்படுத்தியது சனி. இனி சனி சொந்த தனது பாவகமான மகரம் வீட்டிற்கு வருகிறது. இது விருச்சிக லக்னத்திற்க தைரிய ஸ்தானம், சுக ஸ்தானம் வித்தை திறமை, வாகனத்தில் வீட்டில் மாற்றம் ஏற்படும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனம். வார்த்தைகளில் கவனம் தெளிவாக பேசுங்கள். இந்த முறை கவனமாக இருங்க. அம்மா உடல் நலனில் கவனமாக இருங்க. பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட சண்டை போடாதீங்க. கீழ்நிலையில் உள்ளவர்களுடன் தெளிவாக பேசுங்க.

படிப்பில் கவனம்
படிக்கிற மாணவர்கள் பட்ட அவஸ்தை முடிவிற்கு வரப்போகிறது. படிக்கும் போது ஞாபக சக்தியை அதிகப்படுத்திக்கொண்டு மனப்பாடம் பண்ணி எழுதிப்பாருங்க. சோம்பேறித்தனம் வேண்டாம். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அவர்களுக்கு இருக்கும் நண்பர்களையும் கண்காணியுங்கள்.

அம்மா உடன் கவனம்
சனி பகவான் மூன்றாம் வீட்டில் பயணம் செய்யும் போது இடையில் ராகு கேது பெயர்ச்சியும் இரண்டு குரு பெயர்ச்சியும் நடக்கும். ஜனன கால ஜாதகம், தசாபுத்தி நன்றாக இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்காது. கடன் வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்குங்க. உங்க ஜாதகத்தில் விருச்சிக லக்ன காரர்களுக்கு சனி எங்கே இருக்கு என்று பாருங்க. அதற்கேற்ப ஜாக்கிரதையாக இருங்க. வீட்டினால் விரைய செலவு ஏற்படும். அம்மா உடனான சண்டைகள் தீரும். புது வேலையோ வண்டியோ மாற்ற வேண்டாம். சுப விரையம் தானாக மாறட்டும். இல்லாவிட்டால் சிக்கல்கள் ஏற்படும்.

பரிகாரம் என்ன
குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும். வியாழக்கிழமைகளில் கடலைமாவில் செய்த பூந்தி செய்து அதை நிவேதனம் செய்து சிறுமிகளுக்கு கொடுப்பது நல்லது. வியாழக்கிழமை அதிகாலையில் அரசு மற்றும் வேப்பமரம் இணைந்திருக்கும் கோவில்களில் 12 முறை வலம் வாருங்கள். நன்மைகள் நடக்கும் ஐந்து சுமங்கலிக்கு மருதாணி கொடுங்க. சுபிட்சம் அதிகரிக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications