Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : விருச்சிகம் ராசிக்காரங்களுக்கு ஏழரை முடிஞ்சு விடிவுகாலம் பிறக்குது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். விரையச்சனி, ஜென்மசனி, குடும்பசனி என உங்களை கடந்த ஏழரை ஆண்டுகாலமாக கும்மியடித்து வந்த சனி பகவான் இனி மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் கஷ்டங்களும் துயரங்களும் நீங்கி விடிவுகாலம் பிறக்கப்போகிறது.

உங்கள் ராசிக்கு மூன்று, நான்காம் அதிபதியான சனிபகவான் இனி மூன்றாம் வீட்டில் அமர்வதால் உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும் ஊலாலா என்று பாடுவீர்கள். தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். சிறு பயணங்களினால் பலன் கிடைக்கும்.

சனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.

சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும் சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கும் 30 மாதகாலமும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்,வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

ஏழரை சனி முடிஞ்சுபோச்சு

ஏழரை சனி முடிஞ்சுபோச்சு

என்னா கஷ்டம்... என்னா கஷ்டம் எங்களுக்கு விடிவு காலமே இல்லையே, கஷ்டத்திற்கு விமோசனமே கிடையாதா என்று விருச்சிக ராசிக்காரர்களை புலம்ப வைத்து விட்டார் சனிபகவான். அவர் வேலை முடிந்து விட்டது கிளம்பி விட்டார். இத்தனைய ஆண்டுகாலமாக சோதனைகள் மூலம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். சிலர் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்திருப்பீர்கள். உங்கள் கஷ்டங்கள் நீங்கி விட்டாலும் நீங்கள் படித்த பாடங்களைக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.

முயற்சிகளில் வெற்றி

முயற்சிகளில் வெற்றி

நல்ல செய்திகள் உங்களை தேடி வரப்போகிறது. இனி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கொண்டாட்டங்கள் அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். உங்களின் தசாபுத்தி எப்படியிருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ற தொழிலை தொடங்குங்கள். அவசரப்பட வேண்டாம். புதிய சொத்துக்கள் சேரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள்.

புதிய வேலை கிடைக்கும்

புதிய வேலை கிடைக்கும்

வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. வேலையில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான நிலை தளர்ந்து நற்பலன் உண்டாகும். வெளியூர், அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.

பணம் பாக்கெட்டில் நிறையும்

பணம் பாக்கெட்டில் நிறையும்

கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலை என்று பாடிக்கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களே... உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப்போகிறது. எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் கிடைக்கும். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, நல்ல லாபகரமாக அமையும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.

திருமணம் சுபகாரியம்

திருமணம் சுபகாரியம்

காதல் இனிக்கும் சிலருக்கு கல்யாணத்தில் முடியும். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும். பிள்ளைபாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் சுப காரியங்கள் நடைபெறும். அதற்காக சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக செய்வீர்கள். சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் சேமித்து வையுங்கள். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும்.

கடன் கொடுக்க வேண்டாம்

கடன் கொடுக்க வேண்டாம்

வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம் பிறக்கும். வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வரும் பணத்தை முறையாக சேமித்தாலே கடனின்றி வாழலாம். யாருக்கும் பணம் கடன் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும். இல்லாவிட்டால் கொடுத்த பணம் திரும்ப வராது. யாருக்கும் கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

மாணவர்கள் கவனம்

மாணவர்கள் கவனம்

மாணவர்களுக்கு படிப்பில் அதிகக் கவனம் தேவை. மூன்றாம் இடத்தில் சனி சஞ்சாரம் ஞாபக மறதியை ஏற்படுத்துவார். சோம்பலை அதிகபடுத்துவார். தொடர்ச்சியாக டியூசன் சென்று வருதல் நலம். தேவையற்ற விஷயங்களில் மனைதைச் செலுத்தக் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர நினைக்கும் உங்களுக்கு நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும்.

பெண்களுக்கு வெளிநாடு யோகம்

பெண்களுக்கு வெளிநாடு யோகம்

பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நீரிழிவு, ரத்தகொதிப்பு இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். எதிரிகளால் தொல்லைகள் குறையும். எதையும் தைரியமாக சந்திக்கும் ஆற்றலும் சந்தர்ப்பமும் அமையும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும். ஆடை ஆபரணச்சேர்க்கை ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்லும் யோகம் அமையும். குடும்பத்தில் புதுவரவு உண்டு. உறக்கம் கெடும் உற்சாகத்தோடு செயல்படுங்கள் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+