Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2025: கோடிகளில் புரளப்போகும் "ரிஷப ராசி".. லாப ஸ்தானத்தில் சனி உச்சம் இனி பண மழைதான்!

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன் 2025: ஜென்ம சனியால் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்னைகளை சந்தித்து வந்த ரிஷப ராசிக்காரர்களே 2025 புத்தாண்டு நீங்கள் மறக்க முடியாத அளவுக்கு அமையப் போகிறது. பட்ட துன்பங்களில் இருந்து எல்லாம் விடுதலையாகப் போகும் உங்களுக்கு 2025 புத்தாண்டு சனிப்பெயர்ச்சியால் கிடைக்கும் நற்பலன்கள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Elarai sani for Rishabam)

2025 புத்தாண்டுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளது. புத்தாண்டில் புதிய வழி பிறக்காதா என காத்திருப்பவர்களுக்கு கணக்கை முடிக்க காத்திருக்கிறார் சனி பகவான். வரும் புத்தாண்டில் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியாகிறார் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் ஐந்து ராசிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்.

sanipeyarchi astrology

சனிப்பெயர்ச்சியில் நல்ல பலன்களைப் பெறப்போகும் ஐந்து ராசிகளில் ரிஷபமும் ஒன்று. (Sani Peyarchi for Rishabam). ஜென்ம சனியால் பாதிக்கப்பட்டு வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் சனி பகவான் வந்து அமரப் போகிறார். இனி உங்களை யாராலும் அடிச்சுக்கவே முடியாது. எண்ணற்ற பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். என்னென்ன பலன்களை சனி பகவான் அள்ளித் தரப் போகிறார் என தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசிக்கு 11 ஆம் இடத்தில் அதாவது லாப ஸ்தானத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் வந்து அமர்கிறார். ஒரு ஓவரில் ஆறு பந்து என்றால் ஆறு பந்துகளும் இனி சிக்ஸர் தான். வெளியில் சொல்ல முடியாத பலவித பிரச்னைகளில் இருந்து வந்திருப்பீர்கள். ஏனென்றால் இதுவரை ஜென்ம குரு நடந்து வந்தது. ரிஷப ராசிக்கு அதிபதி சுக்ரன். பார்த்தால் பளிச்சென்று ஆடம்பரமாகவும், தேஜஸாகவும் தோற்றம் அளிக்கும் இவர்களுக்கு வெளியில் தெரியாத பல பிரச்னைகள் இருக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் தாங்கள் இருக்கக்கூடிய இடங்களை செழிப்பாக வைத்திருப்பீர்கள். பலரை தங்கள் பக்கம் ஈர்க்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். ஜென்ம குருவின் பாதிப்பால் 8 மாதங்களாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். வரும் 2025 புத்தாண்டில் நல்ல பரிசு ஒன்றை சனி பகவான் கொடுக்கவுள்ளார். லாப ஸ்தானத்தில் வருவதால் பூரண லாபத்தை கொடுக்கவுள்ளார். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கப் போகிறது.

சனி பகவான் பாதகாதிபதியாக இருந்தாலும் ராசியாதிபதிக்கு நட்பு கிரகம் என்ற அமைப்பில் வருவதால் ரிஷப ராசிக்கு பாக்கியத்துக்கும், திரிகோணத்துக்கும் அதிபதியாக சனி வருவதால், பத்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி 11 ஆம் வீட்டில் பயணிப்பது, குரு நட்சத்திரம், சொந்த நட்சத்திரம், தன ஸ்தானதிபதி புதனின் நடசத்திரத்தில் பயணிக்கும்போது உங்களுக்கு பலமடங்கு லாபம் அதிகரிக்கும்.

ராசியாதிபாதி லாப ஸ்தானத்தில் உச்சம், செவ்வாய் மூன்றாம் இடத்தில் நீசம் என அனைத்தும் உங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது. புதிதாக கிளைகள் தொடங்குவது, ஐடி, ரியல் எஸ்டேட், லாஜிஸ்டிக் போன்றவற்றில் புதிதாக ஆட்களை நியமிப்பது, புதிய பொருள்களை அறிமுகம் செய்வது, புதிய இயந்திரங்களை இறக்குமதி செய்வது போன்றவற்றில் வெற்றி காண்பீர்கள். எந்த துறையில் இதுவரை பயணித்தீர்களோ அதில் உங்களை விஸ்தாரமாக மாற்றிக் கொள்ளலாம்.

மீடியா துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகிறது. எதிர்பாராத வெற்றி, மக்கள் கொண்டாடக்கூடிய அமைப்பு உள்ளது. தொழில் ரீதியாக, பாக்கியம் ரீதியாக நல்ல அனுகூலம் உண்டாகும். அனைத்து அனுகூலமான அமைப்புகளும் உள்ளதால் இந்த காலகட்டங்களில் உங்களுடைய தகுதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களை பக்குவப்படுத்தி, தயாராக்கி கொள்ள வேண்டும்.

மாபெரும் யோகங்களை 2025 இல் சனி பகவான் அள்ளித் தரப் போகிறார். குரு பகவான் 2 ஆம் வீட்டில் வருவதால் பண மழை கொட்டும். பொருளாதாரம் மேம்படும். பெயர், புகழ் உண்டாகும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அபிவிருத்தி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாட்டு தொடர்பு, விசா கிடைப்பது போன்ற அனைத்து விஷயங்களும் நடக்கும். குழந்தைகள் விஷயங்களில் சாந்தி சமாதானம் உண்டாகும்.

எட்டாம் வீட்டை நட்பு கிரகமான சனி பத்தாம் பார்வையாக பார்ப்பதால் வம்பு, வழக்குகளுக்கு தீர்வு ஏற்படும். இந்த ஆண்டில் ரிஷர ராசிக்காரர்களுக்கு பூரணமான பலன்களை சனி பகவான் அள்ளிக் கொடுக்கப் போகிறார். உத்தியோகம், வியாபாரம், தொழில் என அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்கள்: ஒன்பதாம் அதிபதி 11 ஆம் வீட்டுக்கு வருவதால் பூரணமாக வெளிநாட்டு தொடர்பில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புள்ளது. காத்திருந்த விஷயங்களுக்கு எல்லாம் கதவுகள் திறக்கும். ஏஐ படிப்புகளில் புதிய உச்சத்தை ஏற்படுத்தும்.

பெண்கள்: மிகவும் தைரியமாக செயல்படுவீர்கள். முயற்சிகள் கைகூடும். தொழில், உடல் நலன், சுப காரியங்களில் பூரண பலன்களைப் பெறுவார்கள். மொத்தத்தில் 2025 சனிப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு 100க்கு 500 மதிப்பெண்கள் கொடுக்கலாம். அந்த அளவுக்கு நற்பலன்களை அள்ளித் தரப் போகிறார் சனி பகவான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+