சனிப்பெயர்ச்சி 2025: கன்னி ராசிக்கு கண்ட சனியால் கஷ்டம்தான்.. ஆனா ஒரு விஷயம் வாழ்க்கையே மாறப்போகுது
சனிப்பெயர்ச்சி 2025: புத்தாண்டு தொடங்கவுள்ள நிலையில் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் சனி வந்து அமர்கிறார். இந்த ஆண்டு பல்வேறு மாற்றங்களைத் தரும் ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையப் போகிறது. அந்த வகையில், புத்தாண்டு சனிப்பெயர்ச்சியில் என்னென்ன பலன்களை சனி பகவான் தரப்போகிறார். எந்த விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்... (Sani Peyarachi for Kanni)
தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு (2025 Rasi palan kanni) புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதியன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டச் சனி தொடங்குகிறது (Sani Peyarchi 2025 kanni). 2025 சனிப்பெயர்ச்சி கன்னி ராசிக்கு எவ்வாறு உள்ளது, என்னென்ன நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்..

கன்னி ராசியைப் பொருத்தவரை ஐந்தாம் வீட்டுக்கும், ஆறாம் வீட்டுக்கும் சனி பகவான் அதிபதியாகிறார். ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி வந்து அமரும்போது இதனை கண்டச் சனி என்றுதான் ஜோதிட ரீதியாக கூறப்படும். பொதுவாக ஒரு ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி இருக்கும்போது கொடுக்கக் கூடிய பாதகமான பலன்களை குறிப்பாக கன்னி ராசிக்கு கொடுக்கும்போது குறைவாகத்தான் இருக்கும்.
ராசியாதிபதி புதனுக்கு இந்த சனி என்பவர் நட்பு கிரகமாக வருவதாலும், ஸ்தானத்தில் பார்த்தால் பஞ்சமாதிபதியாக வருவதால் ஏழாம் வீட்டில் இருக்க கூடிய சனி பகவான் சமசப்தம பார்வையாக கன்னி ராசிக்காரர்களை பார்க்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு ராசியாதிபதியாக புதன் இருப்பதால் நீங்கள் பொதுவாக மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நூதனமான விஷயங்களை நன்றாக யோசிப்பீர்கள். மின்னல் வேகத்தில் செயல்படுபவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு மற்றவர்களைப் பார்த்தால் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருப்பது போலத் தோன்றும்.
இனிமேல் நீங்களே கொஞ்சம் மெதுவாக செயல்படக் கூடிய காலகட்டமாக உள்ளது. சனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது வீடு, வாகன விஷயங்களில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது தெரியாமல் நேரம், பொருளை சுற்றி சுற்றி செலவு செய்வீர்கள். வயதை அனுசரித்து தாய்க்கு உடல்நிலை பிரச்னை, உத்தியோகத்தில் பணியிட மாற்றம் போன்றவை ஏற்படும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும். வேலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் மாற்றங்களை இந்த ஆண்டு தரப்போகிறது. வாழ்க்கை துணைக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை, புதிய வியாபாரம் தொடங்குவீர்கள். வெளியாட்களை குடும்பத்துக்குள் விடுவதை தவிர்க்க வேண்டும். வருமானம் விருக்தியாகும். அலைச்சல் அதிகரிக்கும் ஆனால் அதற்கான பலன்கள் அதிகமாக கிடைக்கும். கடல் கடந்து போகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
சனி பகவான் உத்திரட்டாதி நட்சரத்தில் சஞ்சாரம் செய்யும்போது உங்களுடைய குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பூர்வீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கடன் எதாவது வாங்கினால் அதன் மூலம் பயனுள்ளதா என்று யோசிக்க வேண்டும். உடல்நிலையிலும் வயதை அனுசரித்து ஆர்த்தோ, அடிவயிறு, கேஸ்டிரிக் பிரச்னை, ஒற்றை தலைவலி போன்றவை ஏற்படும்.
வியாபார கூட்டாளிகள் கடைசி நேரத்தில் முதலீடு இல்லை என்று கூறும் நிலை ஏற்படும். வேலையில் எதிர்பாராத இடையூறுகள் ஏற்படும். சனி பகவான் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் முயற்சிகளில் முடங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ராசிக்கு அதிபதியாக உள்ள புதனே பத்தாம் வீட்டுக்கும் அதிபதியாக வருவதால் தொழில், ஜீவனம், வெளிநாட்டு தொடர்பு, முயற்சிகளில் பத்திரமாக உங்களைப் பார்த்துக் கொள்வதன் மூலமாக ஏழாம் வீட்டு சனியின் தீய பலன்களை கடந்துவிடலாம்.
ஏழாம் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் மூன்றாம் பார்வையாக 9 ஆம் இடத்தை பார்ப்பதால் தந்தை உடல்நிலை, உத்தியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தவிர்க்க வேண்டிய விஷயங்கள்: புதிதாக இடம், மனை, வெளிநாட்டு பயணங்கள், முதலீடு, கடன் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. இவற்றை தவிர்ப்பது நல்லது. ஆனால், தவிர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். தேவையான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறும்.
மாணவர்கள்: நீங்கள் ஸ்லோவாக இருப்பதை தவிர்க்க வேண்டும். வேகமாகவும், விவேகமாகவும் இயங்க வேண்டும். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திவைக்க கூடாது.
பெண்கள்: திருமண விஷயங்களில் இல்லாததை இருப்பது போல காண்பீர்கள். வரன்களை டபுள் செக் செய்து கொள்வது நல்லது
பரிகாரங்கள்: ராசியாதிபதி புதன் என்பதால் நித்தியமாக மகாவிஷ்ணு வழிபாடு, பிரதானமான பெருமாள் கோயில்களில் வழிபாடு செய்வது ஏழாம் வீட்டில் இருக்கக்கூடிய சனி கிரகத்தின் பாதிப்புகள் குறையும். மாற்றுத் திறனாளிகளுக்கு, துப்புரவுப் பணியாளர்களுக்கு, முதியவர்கள், கணவரை இழந்தவர்களுக்கு உதவி செய்வது நன்மை பயக்கும். 100க்கு 60 சதவீதம் நன்மையைத் தரும் ஆண்டாக 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு அமையும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications