சனிப்பெயர்ச்சி 2020-2023: ஆணவத்தில ஆடாதிங்க... சனிபகவான் தலையில தட்டி வைப்பார்
சென்னை: சனி பகவான் நீதிமான். நியாயமாக தர்ம சிந்தனையோடு நடந்து கொள்பவர்களை எதுவும் செய்ய மாட்டார். அதே நேரத்தில் தான் என்ற அகம்பாவம் ஆணவத்தில் ஆடுபவர்களுக்கு சனிபகவான் சரியான பாடம் கற்பித்து விடுவார். சனிபகவான் பொதுவாகவே ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு லக்னகாரர்களுக்கு சனிபகவான் யோகத்தை கொடுப்பார். உடனே எங்களுக்கு எல்லாம் யோகமில்லையா என்று கேட்காதீர்கள். மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் லக்னகாரர்களுக்கு சனி இருக்கும் இடத்தைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும் சாதக பாதகங்கள் நடைபெறும்.
30 ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள் இல்லை 30 ஆண்டுகாலம் தாழ்ந்தவர்கள் இல்லை என்பார்கள். ஒருவரின் ஆயுளில் சனி பகவானின் பங்கு முக்கியமானது. 30 ஆண்டுகால சனியின் பயணம் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் சனி 3,6,10,11 இடங்களில் இருந்தால் அது அற்புதமான பலன்களைத் தரும். ரிஷபம் லக்னகாரர்களுக்கு 10, 7 ஆம் இடத்தில் சனி இருந்தால் அதிர்ஷ்டகரமான இடமாக இருக்கும்
சனி பெயர்ச்சியால் சிலருக்கு ஏழரை சனி நடக்கும். சிலருக்கு கண்டச்சனி, அஷ்டம சனி நடக்கும், சிலருக்கு அர்த்தாஷ்டம சனியாக இருக்கும். எந்த சனி காலமாக இருந்தாலும் சனி தசை நடந்தால் அதற்கேற்ப பலன்கள் பாதிப்புகள் இருக்கும். சனி பெயர்ச்சி பலன்கள் படித்திருக்கும் பலரும் சனி தசை காலத்தில் நடக்கும் சாதக பாதகங்களையும் ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்தினால் ஏற்படும் சாதக பாதகங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சனி தசை 19 ஆண்டுகள்
சனி திசை 95 சதவிகிதம் பேருக்கு ராஜயோகம் தன யோகம் தரும். ஒருவரின் ஆயுள் 120 ஆண்டுகள் என்று தசாபுத்தியை வைத்து கணக்கிடுகின்றனர்.
தசைகள் மொத்தம் ஒன்பது அதில் கேது ஏழு ஆண்டுகள் சுக்கிரன் 20 ஆண்டுகள், சூரியன் ஆறு ஆண்டுகள், சந்திரன் 10 ஆண்டுகள், செவ்வாய் ஏழு ஆண்டுகள், குரு 16 ஆண்டுகள், சனி 19 ஆண்டுகள், புதன் 17 ஆண்டுகாலங்கள் தசாபுத்தியாக நடக்கும்.

19 ஆண்டுகள் என்ன நடக்கும்
எந்த தசாகாலம் நடந்தாலும் இந்த இந்த ஒன்பதும் புத்திகளாகவும் வரும். எனக்கு சனி தசை நடக்குதே இப்ப சனிப்பெயர்ச்சியும் வருதே பாதிப்பு வருமா என்று கேட்பார்கள். சனி தசை ஒருவருக்கு 19 ஆண்டுகள் நடக்கும் சனி தசை காலத்தில் சராசரியாக இருக்கும் மனிதர் ஒருவர் மிக வேகமான வளர்ச்சியை தருவார். குரு திசையில் பிறந்த ஒருவருக்கு இளமையிலே சனி தசை வரும். இளமை காலத்திலேயே சனி தசை வந்தால் உழைப்பால் உயர்வார்கள். சனி நன்மை செய்வார். மிகப்பெரிய வளர்ச்சியை தருவார் சனி. பணத்தை அள்ளிக்கொடுப்பார். சனி தசை காலத்தில் கண்டிப்பாக தொழில் தொடங்குவார்.

அள்ளிக்கொடுக்கும் சனி
சனி பகவான் இரும்பு தொழில் செய்பவர்களுக்கு நன்மையை தருபவர். எண்ணெய் தொடர்பான வேலைகள் தொழில் செய்பவர்களுக்கு சனி தசை வரும்போது நன்மைகள் நடைபெறும். அரசியல் சனி முக்கியமான பாதிப்பை ஏற்படுத்துவார். தொண்டர்களின் மூலம் ஆதரவை தரக்கூடியவர் சனிபகவான். சனி யோகம் பெற்ற நட்சத்திரங்களில் இருந்தாலும் நன்மை நடக்கும்.

தொழில் நஷ்டங்கள்
உடல்நலத்தில் பிரச்சினை. எலும்பு நரம்பு பிரச்சினை, விபத்துக்கு காரகர் சனிதான். விழிப்புணர்வு அவசியம். உறவுகளில் விரிசல் வரும். கருத்து வேறுபாடு ஏற்படும். தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்துவார். ஒருவரின் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்தில் சனி இருந்தால் தனித்த சனி இருந்தால் பாதிப்பு வரும். உழைப்பு அதிகரிக்கும். நிறைய சோதனைகள் வரும்.

அமைதியாக இருங்கள்
ஆணவத்தோடு ஆடுபவர்களின் தலையில் சனி தட்டி வைப்பார். எனவேதான் ஏழரை சனி காலத்திலும், சனி தசை காலத்திலும் அதிகம் ஆட்டம் போடாதீர்கள். ஆணவத்தினால் பாதிப்பு வரும். உதாரணமாக நான்காம் வீட்டில் சனி இருந்தால் அமைதியாக இருங்கள். வீடு, வாகனம் பற்றி பெருமை பேசாதீர்கள். அப்புறம் பறித்துக்கொள்வார். 3ஆம் வீட்டில் சனி இருந்தால் உடன் பிறந்தவர்கள் பற்றியும் நண்பர்கள் பற்றியும் பெருமையாக கூறக்கூடாது சண்டை வரும்.

பொறாமையால் பிரச்சினை
எட்டில் சனி இருந்தால் அமைதியாக இருங்க ஆயுள் ஆரோக்கியம் பற்றி பேசவே கூடாது. 9ல் சனி இருந்தால் அப்பாவின் ஆரோக்கியம் பற்றி பேசவே பேசாதீங்க. 10ல் சனி இருந்தால் தொழில் பற்றி பேசவே கூடாது. 12ஆம் வீட்டில் சனி இருக்க செலவு பற்றி பெருமை பேசாதீங்க. படுத்த உடனே தூங்குவேன் என்று சொல்லக்கூடாது. பெருமை தூக்கம் இல்லாதவர்களின் வயிற்றெரிச்சல் கொட்டிக்கொள்வார்கள். ஒருவரின் மூச்சுக்காற்று மூலம் எண்ணம் பாதிக்கும்.

ஆணவம் அழிந்தால் பிரச்சினை முடியும்
சனி கொடுப்பதைப் பற்றி எப்பவுமே பெருமை பேசாதீர்கள். அதே போல அதிக ஆணவத்தினால் ஆடாதீர்கள். பிரம்மனின் ஆணவத்தால் 5வது தலை வெட்டப்பட்டது. சிவனின் ஈகோவினால் மண்டை ஓடு சிவனின் கைக்கு வந்தது. ஈசனாகவே இருந்தாலும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஈகோ உடையும் போது நமக்கு பாதிப்பு குறையும். ஆணவத்தின் உச்சம், திமிரின் உச்சத்தில் இருப்பவர்களின் தலையில் சனி தட்டி குட்டி குனியவைப்பார்.

சனி அடிமை
சனியைத் தவிர வேறு யாருக்கும் அந்த சக்தி கிடையாது. அசிங்கம் அவமானத்திற்கு அதிபதி சனி. ஆணவத்தினால் ஆடுபவர்களை சனி அசிங்கப்படுத்தி அவமானப்பட வைப்பார். எனவேதான் ஆணவத்தில் ஆடியவர்கள் அசிங்கமோ அவமானமோ பட்டால் அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து உயிரை விடுகின்றனர்.

பரிகாரத்திற்கு பலன் உண்டு
சனி எந்த சனியாக இருந்தாலும் அமைதியாக இருங்கள். ஏழரை சனி காலத்தையும் எளிதாக கடக்கலாம். சனி தசை நடந்தாலும் பிரச்சினை இருக்காது.
தர்ம நெறியோடு உதவி சிந்தனையோடு இருப்பவர்களுக்கு சனி கெடுதல் செய்ய மாட்டார். பாவம் பண்ணாதது ஒரு பக்கம் இருந்தாலும் புண்ணியம் செய்யலாம். தானம் கொடுக்க கொடுக்க ஏழு பிறவிக்கும் செய்த பாவங்கள் தீரும். மரம் நடலாம். தர்மம்தான். விலங்குகளுக்கு உணவிடலாம். நெருங்கிய உறவுகளுக்கு உதவி செய்யலாம். சுயநலம் கருதாது உதவி செய்வது நல்லது. சனி தசையில் நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications