Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மிதுனம் ராசிக்கு அஷ்டமத்து சனி- கவனமா இருங்க மக்களே

இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கவலைப்படுத்திய சனி பகவான் இனி எட்டாவது வீட்டில் அஷ்டமத்து சனியாக அமரப்போகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    08-06-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

    மதுரை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனி பெயர்ச்சி அடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும் அவரது சஞ்சார பலன், பார்வை பலன் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே தொடங்கி விடும் என்பதால் இந்த பலன்கள், பரிகாரங்கள் எழுதுகிறோம். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். மிதுனம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி முடிந்து அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது. வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு எப்படி என்று பார்க்கலாம்.

    மிதுனம் ராசிக்காரர்களே சனிபகவான் கடந்த 30 மாதங்களாக 7ஆம் இடத்தில் கண்ட சனியாக உங்களை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.

    கடந்த 30 மாதங்களாக கஷ்டப்பட்டு, அல்லல்பட்டு ஓருவழியாக மீண்டு வரலாம் என்று நினைத்திருப்பீர்கள். அடுத்த 30 வருடத்திற்கு மிகப்பெரிய மாற்றமாக அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது.

    வருமானம் அதிகரிக்கும்

    வருமானம் அதிகரிக்கும்

    கவலை வேண்டாம் பணவரவு அதிகமாக இருக்கும் காரணம் சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

    கூட்டுத்தொழிலில் வெற்றி

    கூட்டுத்தொழிலில் வெற்றி

    உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமரும் சனிபகவான் ராசிக்கு 10ஆம் இடத்தை சனிபகவான் பார்க்கிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். பங்கு சந்தையில் அதிக கவனம் தேவை. சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும்.

    வேலையை விட வேண்டாம்

    வேலையை விட வேண்டாம்

    அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். உயரதிகாரிகளால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் பிடித்த வேலையை தேடுதல் வேண்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது.

     பொறுமை அவசியம்

    பொறுமை அவசியம்


    உங்கள் ராசிக்கு எட்டு, ஒன்பதாம் அதிபதியான சனி பகவான் அவரது வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனிபகவான் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார் நன்மையே செய்வார். எட்டாம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமையாக இருந்தால் நன்மையே நடக்கும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடங்க.

    உணர்வு பூர்வமாக முடிவெடுக்க வேண்டாம்.

    எதிர்பாராத வருமானம்

    எதிர்பாராத வருமானம்

    பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

     வண்டி வாகனங்களில் கவனம்

    வண்டி வாகனங்களில் கவனம்

    யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்பி வேலையில் இறங்கினால் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியை தவிர்க்கலாம். எட்டில் செவ்வாயோ சனியோ இருந்தால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது சகஜம்தான். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அதிக வேகம் ஆபத்துதான் நிதானமாக போங்க.

    குழந்தை செல்வம்

    குழந்தை செல்வம்

    சனிபகவானின் பார்வை உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதுநாள் வரை குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வரும். டீன் ஏஜ் பிள்ளைகள் தடம்மாற வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை எச்சரிக்கையாக கண்காணியுங்கள்.

    பெண்கள் கவனம்

    பெண்கள் கவனம்

    பெண்களே அஷ்டமத்து சனி காலத்தில் எதையும் பொறுமையாக கையாளுங்கள். அடுப்பங்கரையில் கவனமாக இருங்கள். நெருப்பு காயங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். லேசான உடல் நலப்பிரச்சினைகளையும் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

    ஆலய தரிசனம் மன அமைதி தரும்

    ஆலய தரிசனம் மன அமைதி தரும்

    அடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டம சனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+