சனிப்பெயர்ச்சி 2020-23: மீனம் லக்னத்திற்கு லாப சனி - அள்ளி கொடுப்பார்
மீனம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமரப்போகிறார். இதுநாள் வரை தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி 2020 ஜனவரி முதல் 11ஆம் வீட்டில் அமரப்போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியால் மீனம் லக்னகாரர்கள
Recommended Video
சென்னை: சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு 2020 ஜனவரி மாதம் 24ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். மீனம் லக்னகாரர்களுக்கு சனிபகவான் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். லாப சனியால் மீனம் லக்னகாரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.
சனி பகவான் மீனம் லக்னகாரர்களுக்கு லாபம் மற்றும் விரைய ஸ்தானத்திற்கு அதிபதி. 11ஆம் வீட்டிற்கு அதிபதி 11ஆம் வீட்டிற்கு வருகிறார். தொழிலில் லாபம் கிடைக்கும். உங்களின் ஆசைகள் அபிலாஷைகள் நிறைவேறும். விரைய ஸ்தான அதிபதியும் சனிதான். தனிமை, மருத்துவ செலவு. படுக்கை அறை சுகங்கள். ரிலாக்ஸ் தூக்கம் ஆகியவற்றிர்க்கு அதிபதி சனி. உங்க லக்னத்திற்கு 11ஆம் வீட்டிற்கு வருகிறார். உங்க ஆசைகளை வெளியே சொல்ல வேண்டாம். மூத்த சகோதரர்கள் பற்றி வெளியே எதுவும் சொல்ல வேண்டாம்.
சனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசியை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். 5 வது இடம் 8 வது இடங்களைப் பார்க்கிறார்.
2020 ஜனவரி முதல் 2022 இறுதி வரை இந்த சனி பெயர்ச்சி உள்ளது. உங்க கோப உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். பேச்சில் கவனம் தேவை. அப்பா, மாமனாரை கவனமாக பார்த்துக்கங்க. உங்க விரையம் பற்றி பெருமையாகக் கூட சொல்ல வேண்டாம். தூக்கம் பற்றி சொல்ல வேண்டாம். கண் திருஷ்டிபடும்.

மீனத்திற்கு சனி பார்வை
இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமாக இருக்கிறது. உங்க லக்னத்தையும், ஐந்தாம் வீடு, எட்டாம் வீடுகளை சனி பார்வையிடுகிறார். சனிபகவான் 3வதுபார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். லக்னத்தை சனி பார்ப்பதால் சோம்பேறித்தனம் ஏற்படும். சுறுசுறுப்பாக இருங்க எதையும் ஒத்திப்போடாதீங்க. உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். சனிபகவான் உங்க லாப ஸ்தானத்தில் இருப்பது நல்லதாக இருந்தாலும் லக்னத்தை பார்ப்பது சிக்கலை தரும்.

கடன் பிரச்சினை
ஏழாம் பார்வையாக 5ஆம் வீட்டை பார்க்கிறார். எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். காதல் வரும் திருமணத்தில் முடியலாம். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான காலம், விருதுகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு செலவு பண்ணுங்க கெடுபலன்கள் குறையும். தொழிலில் உங்களுக்கு நல்லது நடக்க நீங்க கடன் வாங்காதீங்க யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. உங்க வேலையை திருப்தியாக செய்யுங்க. செய்யும் வேலையை சந்தோஷமாக செய்யுங்க. அவசரப்பட்டு ரிசைன் பண்ணாதீங்க. அரசியல்வாதிகளுக்கும் நல்லா இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்க.

பெண்கள் விசயத்தில் கவனம்
எட்டாம் வீட்டை சனி பார்ப்பதால் கவனம் தேவை கணவன் மனைவி பிரச்சினை ஏற்படும். கடனுக்கு வட்டி கட்டி மீள முடியாது வரிகளை கட்டி விடுங்கள். மனைவியின் மூலம் வருமானம் வரும் எதிர்பாராத பணவரவு உண்டு. பெண்கள் விசயத்தில் கவனம் தேவை. ஆலய தரிசனம் செய்வது உங்களுக்கு வரும் அவமானங்களை நீங்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறும் பாதிப்புகளை சரியாக்கும். வண்டி வாகனத்தில் கவனமாக போங்க. உறவுகள் விசயத்தில் கவனமாக இருங்க.

படிப்பில் கவனம்
மாணவர்களே எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் கவனம் தேவை. உயர்கல்வி பயில வெளிநாடு செல்வதில் தடையேற்பட்டு பின் அமையும். கல்வி கடன் கிடைக்கும். விளையாட்டுகளில் அதிக எச்சரிக்கை தேவை. இதுவரை வராமல் இழுத்தடித்த பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்கள் சுமூகமாக அமையும். வெளிநாட்டு பயணம் அமைய வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் செழிப்பு ஏற்படும்.

லாப சனியால் லாபம்
இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். தான தர்மம் செய்யுங்கள். பகைவர்களிடத்திலும் அன்பு பாராட்டுங்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.பெண்களால் லாபம் அதிகரிக்கும். சனி பெயர்ச்சிக்கு நீங்க தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரையும், மங்கள சனீஸ்வரரையும் வழிபடுங்கள் நல்லது நடக்கும். ஏழை எளியவர்கள், மாற்றுத்திறனாளிக்கு உதவி பண்ணுங்க. வேலையாட்கள், கழிவு அகற்றுபவர்களுக்கு உதவுங்கள் நல்லது நடக்கும்.












Click it and Unblock the Notifications