சனிப்பெயர்ச்சி 2020-23: மிதுன லக்னகாரர்களுக்கு அஷ்டமத்து சனியால் விபரீத ராஜயோகம்

சனிப்பெயர்ச்சி கோச்சார ரீதியாக படித்திருப்பீர்கள். இனி லக்ன ரீதியாக என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    17-09-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan | Oneindia Tamil

    சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு ஜனவரி மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். மிதுனம் லக்னத்திற்கு சனிபகவான் எட்டு மற்றும் ஒன்பதாம் வீட்டு அதிபதி. எட்டுக்கு அதிபதி எட்டாம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோக அமைப்பாகும்.

    ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் சஞ்சாரம் செய்து வந்தாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக அமையும். லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை அறிய முடியும். லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது. மிதுன லக்னம் மூன்றாம் வீடு. தகவல் தொடர்பு, இளைய சகோதரர் உறவு ஆகியவற்றினை உணர்த்தும் இடம்.

    மிதுன லக்னத்திற்கு சனிபகவான் எட்டு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி. உங்க ஆயுள் ஸ்தான அதிபதி ஆயுள்ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனிபகவான் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவற்றின் மீது விழுகிறது. இந்த சனிப்பெயர்ச்சியாலும் சனிபகவானின் பார்வையாலும் மிதுன லக்னகாரர்களுக்கு வேலைவாய்ப்பு, வருமானம், குடும்ப உறவுகளில் என்னென்ன மாதிரியாக பிரச்சினைகள் ஏற்படும் என்றும் பார்க்கலாம்.

    சனியின் காரகத்துவம்

    சனியின் காரகத்துவம்

    சனிபகவான் நீதிமான். எந்த வீட்டிற்குப் போகிறாரோ அந்த வீட்டின் ஆதிபத்தியத்தை, காரகத்தை வெளிப்படுத்துவார். எனவேதான் சனி அமரும் வீட்டிற்கு என்ன காரகமோ அதைப்பற்றி பெருமையாக யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்வார்கள். மிதுன லக்னகாரர்களுக்கு எட்டு ஒன்பதாம் பாவ அதிபதி. எட்டு கணவர் குடும்பம், ஆயுள் ஸ்தானம். மற்றவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் எதிர்பாராத வருமானம், அசிங்கம் அவமானம் ஆயுள் அனைத்தையும் குறிப்பது எட்டாம்பாவகம். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்க. எட்டில் சனி விபத்து ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

    பாக்ய ஸ்தான அதிபதி சனி

    பாக்ய ஸ்தான அதிபதி சனி

    ஒன்பதாம் பாவம் தந்தை, கணவன் வீட்டு உறவினர்கள். மாமனார், தூர தேச பிரயாணங்கள். தான தர்மங்கள், நம்முடைய அடுத்த தலைமுறை, நாம் செய்யும் பாக்கியம் போன்றவை ஒன்பதாம் பாவகத்தை சேரும். சனிபகவான் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபரி என்றால் தூர தேச பிரயாணத்தைப் பற்றி பெருமை சொல்லக்கூடாது. அடக்கி வாசிங்க. வெளிநாடுயோகம் பற்றியும், கணவன் வீட்டு காரர்களிடம் பேசக்கூடாது.

    ராஜயோகம் தரும் சனிபகவான்

    ராஜயோகம் தரும் சனிபகவான்

    எட்டுக்கு உடையவன் எட்டாம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். அஷ்டமத்து சனிபகவான் பயத்தை கொடுத்து உச்சத்தை தொட வைப்பார். தொழில் வேலையில் மாற்றம் ஏற்படும். புத்தியில் சிறு குழப்பங்கள் வரும். மிதுன லக்னகாரர்களுக்கு எட்டில் சனி யோகத்தை தரும். சுய ஜாதகத்தில் சனி யோகமாக வலுவாக இருந்தால் இந்த சனி வலிமையை தருவார். சுய ஜாதகத்தில் கொஞ்சம் வலிமை குன்றியிருந்தால் எச்சரிக்கை தேவை.

    வெளிநாட்டு வேலை

    வெளிநாட்டு வேலை

    வேலையில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாடு வேலை கிடைக்கும். அப்பா உடைய உடல் நலத்தில் கவனமாக இருக்கணும். பண விசயத்தில் கவனமாக இருங்கள். பிரச்சினைகளை கண்டு ஒதுங்கி போங்க. வாக்குவாதம் செய்யாதீங்க. குடும்ப ஸ்தானத்தில் சனி பார்வை விழுகிறது. பணவருமானம் வரும்.
    ஐந்தாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் பிள்ளைகளால் செலவுகள் வரும். படிப்பு, திருமணம் செலவு வரும்.

    ரிஸ்க் வேண்டாம்

    ரிஸ்க் வேண்டாம்

    தொழில் ஸ்தானத்தில் சனி பார்வை விழுகிறது. வேலைகளில் கவனமாக இருங்க. ஏழைகளுக்கு உணவு தானம் கொடுங்க. வண்டி வாகனத்தில் செல்லும் போது பத்திரம். பலருக்கு பாதத்தில் அடிபடும். ரிஸ்க் என்று தெரியும் விசயத்தில் இறங்க வேண்டாம். திறமைகள், வலிமைகளை சனிபகவான் வெளிப்படுத்துவார். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். பயப்பட வேண்டாம் சனிபகவான்

    பேச்சில் கவனம்

    பேச்சில் கவனம்

    இப்போ சனி அஷ்டமத்தில் அமரப்போகிறார். உங்களுக்கு கப்பெரிய மாற்றங்களை தரப்போகும் சனி தனது வீட்டிற்கு வரப்போகிறார். கணவர் வீட்டாருடன் பேசும் போது கவனம் தேவை. எதிர்பாலினத்துடன் பேசும் போது கவனம் தேவை. புதிதாக பேசுபவர்களுடன் கவனம் தேவை. இல்லாவிட்டால் பாடம் புகட்டிவிடுவார் சனிபகவான். உடல் பாகத்தை இழந்தவர்கள், அடித்தட்டு மக்கள், கூலித்தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்ய சனிபகவான் சந்தோசமடைவார். நல்லது செய்யுங்க நல்லதை பேசுங்க நல்லதே நடக்கும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+