Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2020-23: மீன ராசிக்காரர்களுக்கு லாப சனியில் வருமானம் அதிகரிக்கும்

மீன ராசிக்காரர்களுக்கு இனி எல்லாமே அற்புதமான கால கட்டம் இதுநாள் வரை உங்களுக்கு கரும சனியாக இருந்தவர் லாப சனியாக இடப்பெயர்ச்சி அடைகிறார். வருமானம் அதிகரிக்கும் சொத்துக்கள் சேரும்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு வாக்கியப் பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி அமர்வதால் சனிக்கிழமைகளில் செய்யும் செயல்கள் வெற்றி கிட்டும். லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் இனி நன்மையே நிகழும். இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார்.

மீன ராசிக்கு 11ஆம் வீட்டில் லாப சனியாக சஞ்சாரம் செய்யும் சனிபகவான் மகர ராசியில் இருந்து உங்கள் ராசியை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 5 வது இடம் மற்றும் 8 வது இடங்களைப் பார்வையிடுகிறார்
சனிபகவான். இதுநாள் வரை மனதில் குழப்பமாக இருந்திருக்கும். இனி குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். ஏற்கனவே பாக்ய ஸ்தான வினால் நன்மைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கல்வியில் மேன்மை உண்டாகும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். 7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும்.

பண வரவு அதிகரிக்கும்

பண வரவு அதிகரிக்கும்

லாப சனியால் தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும்.

திருமணம் சுபகாரியம்

திருமணம் சுபகாரியம்

கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும். இல்லத்தரசிகளுக்கு உறவுகளிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். வேலை நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும்.

உணவில் கவனம்

உணவில் கவனம்

உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உடலில் சளித் தொல்லை இல்லாமல் கவனித்தல் நலம். நேரத்திற்கு சாப்பிடுங்க கவனம் தேவை. உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடிய சனிப்பெயர்ச்சி என்பதால் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானத்தையும் சனி வணங்குவார்.
தான தர்மம் செய்யுங்கள். பகைவர்களிடத்திலும் அன்பு பாராட்டுங்கள்.

வாகன போக்குவரத்தில் கவனம்

வாகன போக்குவரத்தில் கவனம்

உங்களின் ராசிக்கு 8வது இடத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் கவனமாக சென்று வருதல் வேண்டும்.

வெளிநாட்டு வாய்ப்பு

வெளிநாட்டு வாய்ப்பு

மாணவர்களே எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் செலுத்துங்கள். கல்வி கடன் கிடைக்கும். விளையாட்டுகளில் அதிக எச்சரிக்கை தேவை.

பரிகாரம் என்ன

பரிகாரம் என்ன

இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.பெண்களால் லாபம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய பாதிப்புகள் குறைந்து மேலும் நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+